ஏடன் வளைகுடா

ஆள்கூறுகள்: 12°N 48°E / 12°N 48°E / 12; 48
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடன் வளைகுடா
ஏடன் வளைகுடாவின் வரைபடம்
அமைவிடம்அரபிக் கடல்
ஆள்கூறுகள்12°N 48°E / 12°N 48°E / 12; 48
வகைவளைகுடா
சராசரி ஆழம்500 m (1,600 அடி)
அதிகபட்ச ஆழம்2,700 m (8,900 அடி)
அதிகபட்ச வெப்பநிலை28 °C (82 °F)
குறைந்தபட்ச வெப்பநிலை15 °C (59 °F)

ஏடன் வளைகுடா (அரபு மொழி: خليج عدنḪalīǧ ʻAdan, சோமாலி: 'Gacanka Cadmeed') என்பது அரபிக் கடலின் மீதுள்ள அரேபிய தீபகற்பத்தின் தென் கடலோரத்திலுள்ள ஏமன் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா நாட்டிற்கும் இடையேயுள்ள வளைகுடா ஆகும். இது வடமேற்கில், செங்கடலினை பாப்-எல்-மன்டே நீரிணைப்பின் வழியாக இணைகிறது, இது 20 மைல்கள் (32 கிலோமீட்டர்கள்) பரவலாகும். இது ஏமன் நாட்டிலுள்ள துறைமுக நகரான ஏடன் பெயரினைப் பகிர்ந்துள்ளது. வரலாற்று ரீதியாக, ஏடன் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள பண்டைய சோமாலியாவின் துறைமுக நகரமான பெர்பெராவின் காரணமாக "பெர்பரே வளைகுடா" என அழைக்கப்பட்டது.[1][2] இருப்பினும், காலனித்துவ காலத்தின்போது ஏடன் நகரம் வளர்ந்தபோது, "ஏடன் வளைகுடா" என்ற பெயர் பிரபலமானது.

இவ்நீர்வழி மத்தியதரைக் கடல் மற்றும் அரபிக் கடல் இடையேயான சூயஸ் கால்வாய் கப்பல் பாதையின் முக்கியமான ஒரு பகுதி ஆகும், இதன் வழியே 21,000 கப்பல்கள் ஆண்டுதோறும் கடந்து செல்லும்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Dumper, Stanley, Michael, Bruce E.. Cities of The Middle East and North Africa: A Historical Encyclopedia. ABC CLIO, Google Books. பக். 90. https://books.google.com/books?id=3SapTk5iGDkC&pg=PA89. 
  2. Houtsma, M. Th. First encyclopaedia of Islam: 1913-1936. Google Books. பக். 364. https://books.google.com/books?id=sP_hVmik-QYC&pg=PA364. 
  3. "Pirates fire on US cruise ship in hijack attempt: Yahoo! News". Yahoo!. Archived from the original on December 4, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடன்_வளைகுடா&oldid=3850551" இலிருந்து மீள்விக்கப்பட்டது