குரோவாசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரொவேசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குரோவாட்ஸ்க்கா குடீயரசு
Republika Hrvatska
ரெப்புப்ளிக்கா ஹ்ரவாட்ஸ்க்கா
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Lijepa naša domovino
எமது அழகான தாய்நாடு
ஐரோப்பாவில் குரோவாசியாவின் அமைவிடம் (செம்மஞ்சள்)
ஐரோப்பாவில் குரோவாசியாவின் அமைவிடம் (செம்மஞ்சள்)
தலைநகரம் சாகிரேப்
45°48′N 16°0′E / 45.800°N 16.000°E / 45.800; 16.000
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) குரோவாசிய மொழி1
மக்கள் குரோவாட்ஸ்க்கர்(கள்)
குரோவாசியர்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் ஸ்டெய்ப்பான் மெசிக்
 •  தலைமை அமைச்சர் இவோ சனாதர்
உருவாக்கம்
 •  நிறுவல் 7ம் நூற்றாண்டு முதல்பகுதி 
 •  இடைக்கால
குரோவாத்ஸ்க்கா நாடு
மார்ச் 4 852 
 •  விடுதலை மே 21 879 
 •  நாட்டரசு 925 
 •  அங்கேரியுடன் ஒன்றிணைப்பு 1102 
 •  ஹாப்ஸ்பர்க் பேரரசுடன்
இணைதல்
ஜனவரி 1 1527 
 •  ஆஸ்திரியா-அங்கேரியிடம்
இருந்து விடுதலை

அக்டோபர் 29 1918 
 •  யுகோஸ்லாவியாவுடன்
இணைந்தது

டிசம்பர் 1 1918 
 •  விடுதலை அறிவிப்பு ஜூன் 25 1991 
பரப்பு
 •  மொத்தம் 56,542 கிமீ2 (126வது)
21,831 சதுர மைல்
 •  நீர் (%) 0.2
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 4,493,312 (115வது)
 •  2001 கணக்கெடுப்பு 4,437,460
 •  அடர்த்தி 81/km2 (109வது)
208/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $68.21 பில்லியன் (IMF) (68வது)
 •  தலைவிகிதம் $15,355 (IMF) (53வது)
மொ.உ.உ (பெயரளவு) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $47.42 பில்லியன் (IMF)
 •  தலைவிகிதம் $10,676 (IMF)
ஜினி (2005) 29
தாழ்
மமேசு (2004) Green Arrow Up Darker.svg 0.846
Error: Invalid HDI value · 44வது
நாணயம் குனா (HRK)
நேர வலயம் ந.ஐ.நே (CET) (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) ந.ஐ.கோ.நே (CEST) (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 385
இணையக் குறி .hr
1. இத்தாலியம் (இஸ்ட்ரியாவில்), மற்றும் சிறுபான்மை மொழிகள் (செர்பியம், அங்கேரியம், செக், சிலோவாக்).

குரோவாட்ஸ்க்கா அல்லது ஹ்ரவாட்ஸ்க்கா அல்லது குரோவாசியா (Croatia, Hrvatska), நாடு முறைப்படி "ரெப்புப்ளிக்கா ஹ்ரவாட்ஸ்க்கா" (Republika Hrvatska இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), என்று அழைக்கப்படுகிறது. இந்நாடு நடு ஐரோப்பாவும் நடுக்கடல்நாடுகள் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.

2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

குரோவாட்ஸ்க்காவின் செயற்கைக் கோள் படம்

குரோவாட்ஸ்க்கர்கள் பால்க்கன் பகுதியில் கிபி 7வது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர்.

நிலவமைப்பு[தொகு]

குரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது

அரசியல்[தொகு]

மாவட்டங்கள்[தொகு]

குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா (županija) என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும்.

பொருளியல்[தொகு]

குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டுக்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவாசியா&oldid=2261595" இருந்து மீள்விக்கப்பட்டது