ஏட்ரியாட்டிக் கடல்
Appearance
ஏட்ரியாட்டிக் கடல் (Adriatic Sea) மத்திய தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவின் இத்தாலிய குடாவுக்கும் பால்கன் குடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கடலின் மேற்குக் கரையில் இத்தாலியும், மேற்குக் கரையில் பொசுனியாவும் எர்செகோவினாவும், சுலோவேனியா, குரோஷியா, அல்பேனியா மற்றும் மொண்டனேகுரோ நாடுகளும் உள்ளன. ரீனோ, போ, அடிகே, பிரெண்டா, பியாவே, சோக்கா, கிருக்கா, செடினா, நெரெட்வா, டிரின் ஆகிய ஆறுகள் இக்கடலில் பாய்கின்றன. இக்கடலின் கிழக்குப்பகுதியில் குரோசியாவுக்கு அண்மையாக 1300க்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் அதிகபட்ச ஆழம் 1,233 மீட்டர் (4,045 அடி) ஆகும். இது மத்தியதரைக்கடலை விட உப்புத்தன்மை குறைந்ததாகக் காணப்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Drainage Basin of the Mediterranean Sea (PDF) (Report). United Nations Economic Commission for Europe. p. 253. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
- ↑ Playfair, James (November 1812). "System of Geography". The British Critic (F. and C. Rivington) 40: 504. https://books.google.com/books?id=EQEwAAAAYAAJ&pg=PA504.
- ↑ "Adria", Cyclopedia of Biblical, Theological, and Ecclesiastical Literature, New York: Harper & Bros., 1880.