உள்ளடக்கத்துக்குச் செல்

பேங்காக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாங்கொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேங்காக்
กรุงเทพมหานคร
பேங்காக்
க்ருங் தேப் மஹா ந கொன்
மேலிருந்து வலச்சுற்றாக: சி லோம்–சாத்தோன் வணிக மாவட்டம், வாட் அருண், மாபெரும் ஊஞ்சல், வெற்றி நினைவுச்சின்னம், மற்றும் வாட் ஃபிரா கேயோ
மேலிருந்து வலச்சுற்றாக: சி லோம்–சாத்தோன் வணிக மாவட்டம், வாட் அருண், மாபெரும் ஊஞ்சல், வெற்றி நினைவுச்சின்னம், மற்றும் வாட் ஃபிரா கேயோ
பேங்காக்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பேங்காக்
சின்னம்
தாய்லாந்தில் அமைவிடம்
தாய்லாந்தில் அமைவிடம்
நாடுதாய்லாந்து
தோற்றம்அயுத்தயா இராச்சியம்
தலைநகரம்ஏப்ரல் 21 1782
அரசு
 • வகைசிறப்பு நிர்வாகப் பகுதி
 • ஆளுனர்அபிராக் கொசாயொத்தின்
பரப்பளவு
 • நகரம்1,568.737 km2 (605.693 sq mi)
 • மாநகரம்
7,761.50 km2 (2,996.73 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்57,14,481
 • அடர்த்தி4,051/km2 (10,490/sq mi)
 • பெருநகர்
1,00,61,726
 • பெருநகர் அடர்த்தி1,296.36/km2 (3,357.6/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (தாய்லாந்து நேர வலயம்)
இடக் குறியீடு02
ஐஎசுஓ 3166 குறியீடுTH-10
இணையதளம்www.bangkok.go.th

பேங்காக் (Bangkok) தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் (กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 சதுர கிலோமீட்டர்கள் (605.7 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 விழுக்காடு ஆகும். பேங்காக் பெருநகர மண்டலம் எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தில் சிறு வணிகத்துறையாக இருந்த பேங்காக் படிப்படியாக வளர்ச்சியுற்று இரண்டு தலைநகரங்களின் அமைவிடமாக விளங்கியது; 1768இல் தோன்புரி மற்றும் 1782இல் இரத்தனகோசின். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சயாம் என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நவீனப்படுத்துதலின் மையமாக பேங்காக் இருந்தது. அக்காலத்தில் மேற்கத்திய தாக்கம் மிகுந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் வரையற்ற மன்னராட்சி நீக்கப்பட்டு பல புரட்சிகளை சந்தித்த தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களின் மையமாக பேங்காக் அமைந்திருந்தது. 1960களிலிருந்து 1980கள் வரையிலான காலத்தில் மிக விரைவான வளர்ச்சியை கண்டது. தாய்லாந்தின் அரசியல், பொருளியல், கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் பேங்காக்கின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆசிய மண்டல தலைமையகங்களை பேங்காக்கில் நிறுவின. இதனால் இந்த மண்டலத்தில் பேங்காக் ஓர் முக்கிய நிதிய, வணிக விசையாக விளங்குகிறது. மேலும் பன்னாட்டுப் போக்குவரத்து மற்றும் நலத்துறை நிறுவனங்களின் அச்சுமையமாகவும் விளங்குகிறது. கலை, கவின்கலை, மனமகிழ் நிகழ்வுகளுக்கான மண்டல மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இங்குள்ள பரபரப்பான சாலை வாழ்க்கையும் பண்பாட்டுச் சுவடுகளும் பரவலாக அறியப்பெற்ற சிவப்பு விளக்கு மாவட்டங்களும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஆவலைத் தூண்டுகின்றன. இவற்றால் பேங்காக் உலகின் மிகக்கூடிய சுற்றுலாப் பயணிகளை உடைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாஸ்டர்கார்டு வெளியிடும் உலகளாவிய வருகைபெறும் நகரங்களின் பட்டியலில் இலண்டன், பாரிசை அடுத்து மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாக் குறித்த உலகளாவியத் துறையிதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலகின் சிறந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.

இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு.

போதிய நகரமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாது விரைவான வளர்ந்துள்ள பேங்காக் சரியான கட்டமைப்பு அமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. போதிய சாலைகள் இல்லாததாலும் மிகுதியான தனியார் ஊர்திகள் பயன்பாட்டினாலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தாய் விரைவுவழி அமைப்பு அமைக்கப்பட்டபோதும் இச்சிக்கல் இன்றும் தீரவில்லை. 1990களில் இதனால் மிகுந்த காற்று மாசடைதல் உண்டானது. இதற்கு தீர்வாக நான்கு விரைவுத் தொடருந்து வழிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன; மேலும் பல வழிகள் கட்டமைக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் வருகின்றன.

பெயர்

[தொகு]
பேங்காக் நகராட்சியில் தாய் எழுத்துருக்களில் முழுமையாக குருங் தேப் மஹாந …
A small leafy tree
மகோக் தாவரத்திலிருந்து பேங்காக் என்ற பெயர் வந்திருக்கலாம்.

பேங்காக் (บางกอก என்ற சொல்லின் சொற்பிறப்பியல் தெளிவாக இல்லை. பேங் என்ற தாய்ச்சொல்லிற்கு "ஓடையிலமைந்த சிற்றூர்",[1] என்றும் இதன் பெயர் பேங் கோ (บางเกาะ),( கோவின் பொருள் "தீவு", இப்பகுதியில் பல ஆறுகளும் கால்வாய்களும் ஏற்படுத்திய நிலப்பகுதியை குறிக்க) என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் கருதப்படுகிறது.[2] பேங்காக் என்பது பேச்சுவழக்குப் பெயராக இருந்திருக்கலாம்; ஆனால் இதுவே வெளிநாட்டுப் பயணிகளால் பயன்படுத்தபடத் துவங்கி பரவலான பயன்பாட்டால், பேங்காக் பெருநகர நிர்வாகம் போன்ற சொல்லாட்சிகளில், அலுவல்முறையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேங்காக்கின் முழுமையான அலுவல்முறைப் பெயர், குருங் தேப் மஹாந கொன் அமன் ரத்டனகொசின் மஹிந்தரயுத்தய மகாடிலோக் போப் நோப்ப்ஹராத் ராட்சதனி புரிறோம் உடோம்ரட்சநிவேட் மகாசதன் அமன் பிமன் அவதான் சதித் சக்கதட்டிய விட்சனுகம் பிரசித் (Audio file " Th Bangkok ceremonial name.ogg " not found) என்பதாகும். 168 இலத்தீன் எழுத்துக்களை கொண்ட பேங்காக்கின் பெயரே, உலகின் நகரமொன்றின் மிக நீளமான பெயராகும் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்தின் மொழியில் 139 எழுத்துருக்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் பாலியிலும் சமசுகிருதத்திலும் வேர்ச்சொற்களைக் கொண்ட இப்பெயரின் மொழிமாற்றம் இவ்வாறுள்ளது:

தேவதைகளின் நகரம், அழியாதவர்களின் பெருநகரம், நவரத்தினங்களினாலான சீர் நகரம்,மன்னரின் நகரம், அரச மாளிகைகளின் நகரம், அவதார கடவுளரின் இல்லம், இந்திரனின் ஆணையால் விசுவகர்மனால் கட்டப்பட்டது.[3]

பன்னாட்டளவில் பேங்காக் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பொதுவாக குருங் தேப் (தேவதைகளின் நகரம்) என்று அழைக்கின்றனர். தானுந்து உரிமப்பட்டைகளில் குருங் தேப் மகா நகொன் என்று குறிக்கப்படுகிறது.

சகோதர நகரங்கள்

[தொகு]

பேங்காக் நகரம் 2013 நிலவரப்படி 15 நாடுகளிலுள்ள 23 நகரங்களுடன் சகோதர நகரமாகவும் நட்பு நகரமாகவும் உடன்பாடு கண்டுள்ளது.[4] அவை:

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Bangkok (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.7
(96.3)
36.6
(97.9)
37.8
(100)
40.0
(104)
39.5
(103.1)
37.7
(99.9)
37.8
(100)
37.0
(98.6)
36.0
(96.8)
35.3
(95.5)
35.1
(95.2)
35.2
(95.4)
40.0
(104)
உயர் சராசரி °C (°F) 32.0
(89.6)
32.7
(90.9)
33.7
(92.7)
34.9
(94.8)
34.0
(93.2)
33.1
(91.6)
32.7
(90.9)
32.5
(90.5)
32.3
(90.1)
32.0
(89.6)
31.6
(88.9)
31.3
(88.3)
32.7
(90.9)
தினசரி சராசரி °C (°F) 25.9
(78.6)
27.4
(81.3)
28.7
(83.7)
29.7
(85.5)
29.2
(84.6)
28.7
(83.7)
28.3
(82.9)
28.1
(82.6)
27.8
(82)
27.6
(81.7)
26.9
(80.4)
25.6
(78.1)
27.8
(82)
தாழ் சராசரி °C (°F) 21.0
(69.8)
23.3
(73.9)
24.9
(76.8)
26.1
(79)
25.6
(78.1)
25.4
(77.7)
25.0
(77)
24.9
(76.8)
24.6
(76.3)
24.3
(75.7)
23.1
(73.6)
20.8
(69.4)
24.1
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 11.5
(52.7)
14.9
(58.8)
15.7
(60.3)
19.9
(67.8)
21.1
(70)
21.7
(71.1)
22.2
(72)
21.2
(70.2)
21.7
(71.1)
18.3
(64.9)
14.2
(57.6)
10.5
(50.9)
10.5
(50.9)
மழைப்பொழிவுmm (inches) 9.1
(0.358)
29.9
(1.177)
28.6
(1.126)
64.7
(2.547)
220.4
(8.677)
149.3
(5.878)
154.5
(6.083)
196.7
(7.744)
344.2
(13.551)
241.6
(9.512)
48.1
(1.894)
9.7
(0.382)
1,496.8
(58.929)
சராசரி மழை நாட்கள் (≥ 1 mm) 1 3 3 6 16 16 18 20 21 17 6 1 128
சூரியஒளி நேரம் 272.8 251.4 269.7 258.0 217.0 177.0 170.5 161.2 156.0 198.4 234.0 263.5 2,629.5
Source #1: Thai Meteorological Department[33]
Source #2: Hong Kong Observatory (daily mean, sunshine),[34] NOAA (extremes)[35]
தட்பவெப்பநிலை வரைபடம்
பேங்காக்
பெமாமேஜூஜூ்செடி
 
 
9.0
 
32
21
 
 
30.0
 
33
23
 
 
29.0
 
34
25
 
 
65.0
 
35
26
 
 
220.0
 
34
26
 
 
149.0
 
33
25
 
 
155.0
 
33
25
 
 
197.0
 
33
25
 
 
344.0
 
32
25
 
 
242.0
 
32
24
 
 
48.0
 
32
23
 
 
10.0
 
31
21
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Meteorological Organisation[36]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.4
 
90
70
 
 
1.2
 
91
74
 
 
1.1
 
93
77
 
 
2.6
 
95
79
 
 
8.7
 
93
78
 
 
5.9
 
92
78
 
 
6.1
 
91
77
 
 
7.8
 
91
77
 
 
14
 
90
76
 
 
9.5
 
90
76
 
 
1.9
 
89
74
 
 
0.4
 
88
69
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "พจนานุกรม ฉบับราชบัณฑิตยสถาน พ.ศ. ๒๕๔๒" (in Thai). Royal Institute. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Chandrashtitya, Tipawan; Matungka, Chiraporn. "ประวัติเมืองธนบุรี". Arts & Cultural Office website (in Thai). Dhonburi Rajabhat University. Archived from the original on 13 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 11 December 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  3. Royal Institute Newsletter (Royal Institute) 3 (31). December 1993.  Reproduced in "กรุงเทพมหานคร" (in Thai). பார்க்கப்பட்ட நாள் 12 September 2012. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  4. International Affairs Division. "Relationship with Sister Cities". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012.
  5. District of Columbia; Bangkok Metropolitan Administration (19 February 1962). "Resolution: Sister City Affiliation of Washington, D.C. and Bangkok, Thailand" (PDF).
  6. District of Columbia; Bangkok Metropolitan Administration (15 July 2002). "Reaffirmation agreement between Washington, D.C. and Bangkok, Thailand" (PDF).
  7. Bangkok Metropolitan Administration (26 May 1993). "Agreement on the Establishment of Sister City Relations between Bangkok Metropolitan Administration of the Kingdom of Thailand and the Beijing Municipality of the People's Republic of China" (PDF).
  8. Bangkok Metropolitan Administration; Local Government of Budapest (20 February 1997). "Letter of Intent of Cooperation between Bangkok Metropolitan Administration (BMA) and Local Government of Budapest" (PDF). Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. Bangkok Metropolitan Administration; City of Brisbane (7 May 1997). "Memorandum of Understanding between the City of Bangkok, The Kingdom of Thailand and the City of Brisbane, Queensland, Australia" (PDF).
  10. Bangkok Metropolitan Administration; City of Moscow (19 June 1997). "Protocol of friendly ties between the cities of Bangkok and Moscow" (PDF). Archived from the original (PDF) on 5 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. "St. Petersburg in figures > International and Interregional Ties". Eng.gov.spb.ru. Archived from the original on 24 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 27 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Bangkok Metropolitan Administration; City of St.Petersburg (20 June 1997). "Protocol on Cooperation between the City of Bangkok (the Kingdom of Thailand) and the City of St. Petersburg (the Russian Federation)" (PDF). Archived from the original (PDF) on 8 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  13. "Existing Sister Cities". City of Manila. Archived from the original on 24 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 2 September 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. Bangkok Metropolitan Administration; City of Manila (24 June 1997). "Sister city friendship affiliation".
  15. Bangkok Metropolitan Administration; Jakarta Capital City Administration (21 January 2002). "Memorandum of understanding between Bangkok Metropolitan Administration, Kingdom of Thailand and the Jakarta Capital City Administration, Republic of Indonesia concerning sister city cooperation" (PDF). Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  16. Hanoi Capital City; Bangkok Metropolitan Administration (25 February 2004). "Agreement on cooperative and friendship relations between Hanoi Capital City and Bangkok Metropolitan Administration" (PDF).
  17. City of Vientiane; Bangkok Metropolitan Administration (24 May 2004). "บันทึกว่าด้วยความร่วมมือ ระหว่างนครหลวงเวียงจันทน์และกรุงเทพมหานคร" (PDF).
  18. Akimat of Astana City; Bangkok Metropolitan Administration (11 June 2004). "Agreement on establishment of bilateral relations between the Akimat of Astana City of the Republic of Kazakhstan and the City of Bangkok of Kingdom Thailand" (PDF). Archived from the original (PDF) on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  19. "Agreement of Sister City Relations". Office.bangkok.go.th. Archived from the original on 1 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 27 June 2010.
  20. Chaozhou City; Bangkok Metropolitan Administration (23 November 2005). "Agreement between Chaozhou City, the People's Republic of China and Bangkok, Kingdom of Thailand on the Establishment of Sister City Relations" (PDF). Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  21. International Affairs Division. "Relationship with Sister Cities: Fukuoka". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. Archived from the original on 15 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. Seoul Metropolitan Government; Bangkok Metropolitan Administration (16 June 2006). "Sister City Agreement between the Seoul Metropolitan Government, Republic of Korea and the Bangkok Metropolitan Administration, the Kingdom of Thailand" (PDF).
  23. "Sister Cities of Guangzhou". Guangzhou Foreign Affairs Office. Archived from the original on 20 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
  24. Bangkok Metropolitan Administration; City of Guanzhou (13 November 2009). "Agreement on the establishment of sister city relations between Bangkok, Kingdom of Thailand and City of Guangzhou, the People's Republic of China" (PDF).
  25. City of Lausanne; Bangkok Metropolitan Administration (29 December 2009). "Accord de fraternité entre La Ville de Lausanne Capitale du Canton de Vaud Confédération Helvétique et La Ville de Bangkok Royaume de Thaïlande" (PDF).
  26. Busan Metropolitan City; Bangkok Metropolitan Administration (14 March 2011). "Busan Metropolitan City - Bangkok Metropolitan Administration Agreement on the Establishment of a Friendship City Relationship" (PDF).
  27. Chonqing Municipality; Bangkok Metropolitan Administration (26 September 2011). "Agreement between Chonqing Municipality of the People's Republic of China and Bangkok Metropolitan Administration of the Kingdom of Thailand on the establishment of sister-city relationship" (PDF).
  28. Tianjin Municipal Government; Bangkok Metropolitan Administration (27 February 2012). "Agreement between Tianjin Municipal Government of the People's Republic of China and Bangkok Metropolitan Administration of the Kingdom of Thailand on the establishment of friendship exchanges and cooperative relationship" (PDF).
  29. Bangkok Metropolitan Administration; Greater Ankara Municipality (21 March 2012). "Friendship and cooperation agreement between Bangkok Metropolitan Administration of the Kingdom of Thailand and the Greater Ankara Municipality of the Republic of Turkey" (PDF). Archived from the original (PDF) on 11 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  30. Municipal Council of Penang Island; Bangkok Metropolitan Administration (5 April 2012). "Memorandum of understanding between Municipal Council of Penang Island of Malaysia and Bangkok Metropolitan Administration of the Kingdom of Thailand on the establishment of friendly cities" (PDF). Archived from the original (PDF) on 3 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  31. International Affairs Division. "Relationship with Sister Cities: Aichi". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. Archived from the original on 14 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  32. Xinhua. "Cambodia's Phnom Penh, Thailand's Bangkok become "sister cities"". Global Times. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
  33. "30 year Average (1961–1990) - BANGKOK METROPOLIS". Thai Meteorological Department. Archived from the original on 14 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  34. "Climatological Normals of Bangkok". Hong Kong Observatory. Archived from the original on 27 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  35. "Climate Normals for Bangkok". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  36. "World Weather Information Service".

நூற்தொகுப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேங்காக்&oldid=3791654" இலிருந்து மீள்விக்கப்பட்டது