வாட் அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவோ பிரயா ஆற்றில் இருந்து கோவிலின் தோற்றம்

வாட் அருண் (Wat Arun) என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும்.[1] இக்கோவில் சாவோ பிராயா ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா என்பது.

இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் பிராங் என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன.

இக்கோயில் கட்டப்பட்ட போது வாட் மகோக் எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் வாட் சேங் எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wat Arun - The Temple of Dawn

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்_அருண்&oldid=2496786" இருந்து மீள்விக்கப்பட்டது