ஜூலை 14 - பாகிஸ்தானில்வாசிரிஸ்தான் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 24 பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (எட்மண்டன் சன்)
ஜூலை 17 - பிறேசிலில்சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஜூலை 29 - கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக பிறிஸ்பேனில் கைதுசெய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீஃப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பினார். ஆனாலும் அவரது ஆஸ்திரேலிய நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
ஜூலை 31 - சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்கிய குற்றத்திற்காக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் 6 வருட கடுங்காவல் தண்டனை பெற்றார். (பிபிசி)
ஜூலை 10 - மாங்குளம் பகுதியில் தமிழீழ சுகாதார சேவைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மீது நடத்தப்படட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், வேறு இருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (புதினம்)
ஜூலை 11 - முல்லைத்தீவுஅளம்பிலில் தேவாலயம் மற்றும் மீன்வாடிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட பொதுமக்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
ஜூலை 14 - மன்னாரில் இருமுனைகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 விடுதலைப் புலிகள் பலியாயினர். இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். (வாஷிங்டன் போஸ்ட்), (புதினம்)
ஜூலை 23 - யாழ்ப்பாணம்ஆனைக்கோட்டையில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் மரியநாயகம் அலோசியஸ் (வயது 26) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (புதினம்)