ஹாரி பாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹரி பொட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹாரி பாட்டர்
ஹாரி பாட்டர் சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.
ஹாரி பாட்டர் சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.
ஆசிரியர் ஜே. கே. ரௌலிங்
நாடு

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழி ஆங்கிலம்
வகை கனவுருப் புனைவு, நாடகம், இள வயதுவந்தோர் கற்பனைகள், சாகசம், பயங்கரம், மந்திர தந்திரம்
வெளியீட்டாளர்கள் புலூம்சுபெரி பப்ளிசிங் (ஐ.இ)
ஆர்தர் ஏ. லீவின் புக்சு (ஐ.அ.நா.)
வெளியீடு 26 சூன் 1997 – 21 சூலை 2007 (initial publication)
ஊடக வகை பதிப்பு (hardback & paperback)
Audiobook
மின்னூல் (இதுகாறும் மார்ச்சு 2012)[1]
புதின எண்ணிக்கை 7

ஹாரி பாட்டர் என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்பாகும்.

ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் ஹாரி பாட்டர் (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான ரொனால்ட் வீஸ்லி (Ronald Weasley) மற்றும் ஹெர்மாயினி கிரேன்சர் (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.

இத்தொடரின் கதைக்கருவானது, மந்திரவாத உலகத்தை வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட லார்ட் வால்டெமார்ட் (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.

ஜூன் 30, 1997-இல் இத்தொடரின் முதல் புதினமான ஹாரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன் (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. ஜூலை 2013 நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் இறுதிப் புதினமானது வெளிவந்த 24 மணிநேரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது.

இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய பள்ளிக்கூடக் கதையியல், மர்மம், திகில், சாகசம், காதல், மரணம், பாகுபாடு, ஊழல் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.

கதை பிறந்த வரலாறு[தொகு]

1990 ம் ஆண்டில் ஒரு நாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக் குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார்.[சான்று தேவை] இது பற்றி ரெளலிங் தனது இணையத் தளத்திலும் கூறியுள்ளார்.

அதே நாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.ஸ

மேற்கோள்கள்[தொகு]

  1. PETER SVENSSON 2 (27 March 2012). "Harry Potter breaks e-book lockdown – Yahoo! News". News.yahoo.com. பார்த்த நாள் 29 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

உத்தியோக பூர்வ தளங்கள்:

ஏனைய மூலங்கள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_பாட்டர்&oldid=2014342" இருந்து மீள்விக்கப்பட்டது