செப்டம்பர் 2008
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாதி மாதம் செப்டம்பர் 17 புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 16 வியாழக்கிழமையில் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- செப்டம்பர் 1 - ரமலான் நோன்பு ஆரம்பம்
- செப்டம்பர் 3 - விநாயகர் சதுர்த்தி
- செப்டம்பர் 9 - ஆவணி மூலம்
- செப்டம்பர் 11 - பாரதியார் நினைவு
- செப்டம்பர் 12 - ஓணம்
- செப்டம்பர் 12 - வாமன ஜெயந்தி
- செப்டம்பர் 30 - நவராத்திரி விரதம் ஆரம்பம்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- செப்டம்பர் 30: ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்), (தினமலர்)
- செப்டம்பர் 29: மேற்கு இந்தியாவில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 8 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒப் இந்தியா)
- செப்டம்பர் 28:
- கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார். (தட்ஸ்தமிழ்)
- சீனாவின் மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற சென்ஷோ 7 விண்கலம் பாதுகாப்பாக திரும்பி வந்தது. (சின்குவா)
- செப்டம்பர் 27:
- சென்ஷோ 7 விண்கலத்தில் இருந்து சீன வீரர் ஜாய் ஜுகாங் வெளியே வந்து விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார். (சிஎன்என்)
- இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இராணுவத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- செப்டம்பர் 26: உக்ரைனிய சரக்குக் கப்பல் ஒன்று சோமாலியாவின் கடல் எல்லைக்குள் கடற்கொள்ளைக்க்காரர்களினால் கைப்பற்றப்பட்டது. ரஷ்யா தனது படைகளை சோமாலியா நோக்கி அனுப்பியுள்ளது. (New York Times)
- செப்டம்பர் 25:
- சீனா தனது சென்ஷோ 7 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு அனுப்பியது. முதற்தடவையாக தனது வீரரை விண்ணில் நடக்க வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. (சீன வானொலி)
- தென்னாபிரிக்க சட்டமன்றம் கலேமா மொட்லாந்தேயை புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்துள்ளது. (பிபிசி)
- செப்டம்பர் 24: ஜப்பானிய அமைச்சரவை டாரோ ஆசோவை புதிய பிரதமராக தேர்வு செய்துள்ளது. (ஏபி)
- செப்டம்பர் 23:
- ஜெனீவாவில் இயங்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் காந்தம் இயங்க மறுத்ததால் மோதி இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- செப்டம்பர் 21: இஸ்ரேல் பிரதமர் எகூட் ஒல்மேர்ட் தமது பதவியில் இருந்து விலகினார். (ஏபி)
- செப்டம்பர் 20:
- சீனாவின் சென்சென் நகரில் இரவி விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 43 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாதில் "மேரியாட்" விடுதி மீது நடந்த தானுந்து குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயம் அடைந்தனர். (ஏபி)
- ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதை அடுத்து தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- செப்டம்பர் 18: யெமெனில் தலைநகரம் சனாவில் அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். (அல்-ஜசீரா)
- செப்டம்பர் 17:
- இலங்கை, தெகிவளையில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். (தமிழ்வின்)
- சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஹவுமெயா என்ற கிரேக்கக் கடவுளின் பெயர் வைக்கப்பட்டது. (ஐஏயு)
- தாய்லாந்தின் புதிய பிரதமராக சொம்ச்சாய் வொங்சவாட் தெரிவூ செய்யப்பட்டார். (ஏஎஃப்பி)
- செப்டம்பர் 14: ரஷ்யாவில் பேர்ம் நகரில் விமானம் ஒன்று யூரல் மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த 88 பேரும் கொல்லப்பட்டனர். (யாஹூ! செய்திகள்)
- செப்டம்பர் 13:
- தில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர். (தட்ஸ்தமிழ்)
- சூறாவளி ஐக் டெக்சாசின் கல்வெஸ்டன் நகரில் 2ம் கட்டப் புயலாகத் தரை தட்டியது. (புளூம்பேர்க்)
- சீனாவில் சான்சி மாகாணத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 254 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- செப்டம்பர் 12: லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- செப்டம்பர் 11:
- சிம்பாப்வே அதிபர் ரொபேர்ட் முகாபேயுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டைத் தாம் எட்டியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் அறிவித்தார். (பிபிசி)
- இந்தோனீசியாவில் 6.6 அளவு நிலநடுக்கமும் ஜப்பானில் 7.2 அளவு நிலநடுக்கமும் பதியப்பட்டன. (பிபிசி)
- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஹரோகார் ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 40 பேர் காணாமல் போயினர். (ஏபி)
- செப்டம்பர் 10:
- 27 கிமீ நீளமான சுரங்கப் பாதையைக் கொண்ட பெரும் ஹாட்ரான் மோதியில் அடிப்படைத் துகள்கள் முதற்தடவையாக வெற்றிகரமாக அனுப்பப்பட்டன. (பிபிசி)
- வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங்-இல் கடும் சுகவீனமுற்றிருப்பதாக தென் கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் அறிவித்தது. (ஏஎஃப்பி)
- செப்டம்பர் 8:
- ராஜர் ஃபெடரர் அமெரிக்க திறந்த டென்னிஸ் போட்டி வெற்றிக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக வென்றார். (ஈஎஸ்பிஎன்)
- சூறாவளி ஐக் கியூபாவைத் தாண்டியபோது அதன் சீற்றம் 2ன் கட்டப் புயலாகக் குறைந்தது. (ஏபி)
- செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க திறந்த டென்னிஸ் போட்டி வெற்றிக் கிண்ணத்தை மூன்றாவது தடவையாக வென்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தர ஆட்டக்காரராக மீண்டும் தெரிவானார். (நியூயோர்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 7:
- சூறாவளி ஐக் கரிபியனில் டேர்க்ஸ் கைக்கசில் தீவுகளில் 80 விழுக்காட்டு வீடுகளை சேதப்படுத்தியது. (தி ஆஸ்திரேலியன்)
- கனடாவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அக்டோபர் 14 இல் தேர்தல் நடைபெறுமென பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்தார். (பிபிசி)
- பிரம்மபுத்திரா ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 24 பேர் கொல்லப்பட்டனர். 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். (டைம்ஸ் ஒப் இந்தியா)
- செப்டம்பர் 6:
- வடக்கு கெய்ரோவில் மண்சரிவு காரணமாக பல வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சூறாவளி ஹன்னா ஐக்கிய அமெரிக்காவில் வட கரோலினாவுக்கும் தென் கரோலினாவுக்கும் இடையில் தரை தட்டியது. (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி தெரிவு செய்யப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 5:
- கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவின் தாக்கத்தில் சிக்கி 500 பேர் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- ஐரோப்பிய ஒன்றியத்தின் ரொசெட்டா விண்கலம் 2867 ஸ்டெயின்ஸ் என்ற சிறுகோளை அண்டிச் சென்றது. (பிபிசி)
- செப்டம்பர் 3:
- அரிசோனாவின் செனட்டர் ஜோன் மக்கெயின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவினால் விளைந்த வெள்ளப்பெருக்கினால் 26 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரசா கிலானியின் தானுந்து மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. கிலானி காயமேதுமின்றி உயிர் தப்பினார். (தட்ஸ்தமிழ்)
- இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா அணு சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வரும், இது போல பல்வேறு நிபந்தனைகள் உள்ளிட்ட ஒரு ரகசிய கடிதத்தை சட்டமன்றத்துக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் 8 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார் என்று தெரியவந்தது. தட்ஸ்தமிழ் (வாஷிங்டன் போஸ்ட்)
- செப்டம்பர் 2:
- தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஒருவர் கொல்லப்பட்டு, 43 பேர் காயமடைந்ததை அடுத்து பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பாங்கொக் நகரில் அவசரகால நிலையை அறிவித்தார். (பிபிசி)
- சூறாவளி குஸ்டாவ் வெப்பவலய புயலாக தணிந்தது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- செப்டம்பர் 1:
- ஒரிசாவில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரங்களில் 558 வீடுகளும் 17 கிறிஸ்தவ தேவாலயங்களும் எரிக்கப்பட்டன. (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- காலை 10:30 மணி நேரத்தில் சூறாவளி குஸ்டாவ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 2ம் கட்டப் புயலாக தரை தட்டியது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களின் தெற்கு பகுதிகள் பாதிக்கப்பட்டன. சிஎன்என்
- ஜப்பானியப் பிரதமர் யாசுவோ ஃபுக்குடா பதவியிலிருந்து விலகினார். பிபிசி
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- செப்டம்பர் 29:
- திருகோணமலை, கந்தளாயில் இலங்கை படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கொழும்பு, புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார். ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. (புதினம்)
- செப்டம்பர் 28: மட்டக்களப்பு திகிலிவட்டைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த சிறு முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- செப்டம்பர் 27: கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- செப்டம்பர் 18: வவுனியா வடக்கு புளியங்குளம் புதூர் பகுதியில் பயணிகள் பேருந்து மீது இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 17: வன்னிவிளாங்குளம்-புதூர்-மன்னகுளம் பகுதிகளை நோக்கிய படையினரின் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் 13 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- செப்டம்பர் 16:
- வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஐநா நிவாரணப் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி வவுனியா வந்து சேர்ந்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் நால்வர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 15:
- கிளிநொச்சி தென்மேற்குப் பகுதியில் உள்ள அக்கராயன் பகுதியை நோக்கி முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்ட படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 22-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- வவுனியா வடமேற்கு பாலமோட்டை-குஞ்சுக்குளம்-வன்னிவிளாங்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிரான தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- செப்டம்பர் 13:
- அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைதனர். (புதினம்)
- மட்டக்களப்பு, திமிலத்தீவு, மற்றும் மண்டூரில் காவல்துறையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்தனர். (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 11: அம்பாறைக்கும் மொனறாகலைக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் ஏழு கிராமவாசிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 9:
- வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்: வவுனியாவில் இலங்கை படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். வான்புலிகளின் மூன்று வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். புலிகளின் ஒரு வானூர்தியைத் தாம் சுட்டு வீழ்த்தியதாக அரசு அறிவித்தது. (புதினம்) (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 155 படையினர் கொல்லப்பட்டு 983 பேர் காயமடைந்ததாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 8:
- புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் உடனடியாக வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. (புதினம்)
- கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பத்து பொதுமக்கள் காயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 2: முல்லைத்தீவு, வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினரின் பத்து உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (புதினம்), (மாலைமலர்)
- செப்டம்பர் 1:
- வவுனியா, நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 45-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்ததாகவும் 7 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- அம்பாறை - அம்பாந்தோட்டை எல்லைப்பகுதியான உகந்தையில் இலங்கை அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு காயமடைந்தனர். (புதினம்)
இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 8 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)
- செப்டம்பர் 10 - வி. கே. கானமூர்த்தி, ஈழத்து நாதசுரக் கலைஞர் (பி. 1948)
- செப்டம்பர் 21 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது ஜனாதிபதி (பி. 1922)
- செப்டம்பர் 30 - ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்