சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்
சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் | ||||
---|---|---|---|---|
தரம் | காற்றின் வேகம் | Storm surge | ||
mph (km/h) |
அடி (மீ) | |||
5 | ≥156 (≥250) |
>18 (>5.5) | ||
4 | 131–155 (210–249) |
13–18 (4.0–5.5) | ||
3 | 111–130 (178–209) |
9–12 (2.7–3.7) | ||
2 | 96–110 (154–177) |
6–8 (1.8–2.4) | ||
1 | 74–95 (119–153) |
4–5 (1.2–1.5) | ||
மேலதிக தரங்கள் | ||||
அயனமண்டல புயல் |
39–73 (63–117) |
0–3 (0–0.9) | ||
அயனமண்டல தாழமுக்கம் |
0–38 (0–62) |
0 (0) |
சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் என்பது "அயனமண்டலத் தாழமுக்கம்", "அயனமண்டலப் புயல்" என்பவற்றைவிட வீரியம் கூடி சூறாவளியாக மாறும் புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஏற்படும் அயனமண்டல சுழல்காற்றுகளைத் தரப்படுத்தும் முறைமையாகும். இம்முறைமை சூறாவளிகளை அவற்றின் காற்றின் வேகங்களைக் கொண்டு தரப்படுத்துகிறது. இத்தரப்படுத்தலின் முக்கிய நோக்கம் சூறாவளி தரைத்தட்டினால் ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கு, காற்றினால் ஏற்படும் சேதங்களை முன்னதாகவே அறிந்து கொள்வதாகும். சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறை அத்திலாந்திக் பெருங்கடலிலும், பன்னாட்டு நேரக் கோட்டுக்கு மேற்காக வட பசி்பிக் பெருங்கடலிலும் ஏற்படும் சூறாவளிகளை தரப்படுத்த மாத்திரமே பயனபடுத்தப்படுகிறது. ஏனைய பகுதிகள் தமக்கான சூறாவளி தரப்படுத்தல் முறைகளைக் கொண்டுள்ளன.
தரங்கள்
[தொகு]சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறைமையின் கீழ் சூறாவளிகள் மொத்தம் ஐந்து தரங்களாக பிரிக்கப்படுகின்றன.
தரம் 1
[தொகு]தரம் 1 | ||||
---|---|---|---|---|
காற்றின் வேகம் | 33–42 m/s | 64–82 kt | ||
119–153 km/h | 74–95 mph | |||
புயல் வெள்ளம் | 1.2–1.5 மீ | 4–5 அடி | ||
மைய அமுகம் | 980 mbar | 28.94 inHg |
தரம் 1 புயல்கள் கட்டிடங்களுக்கு பெறிய அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துவது இல்லை, இருப்பினும் நகரக்கூடிய வீடுகளுக்கும் மரங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். கரையோரங்களில் சிறிய வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துவதோடு சிறிய துறைமுகங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.[1]
தரம் 2
[தொகு]தரம் 2 | ||||
---|---|---|---|---|
காற்றின் வேகம் | 43–49 m/s | 83–95 kt | ||
154–177 km/h | 96–110 mph | |||
புயல் வெள்ளம் | 1.8–2.4 மீ | 6–8 அடி | ||
மைய அமுகம் | 965–979 mbar | 28.50–28.91 inHg |
இத்தரத்திலான புயல்கள் கூரைகள், கதவுகள், யன்னல்கள் போன்ன்றவற்றுக்கு சேதம் விளைவிக்க வல்லவை. தாவரங்கள், நடமாடும் விடுகள், பெயர் பலகைகள், சிறிய துறைமுகங்கள், போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படலாம்.[1]
தரம் 3
[தொகு]தரம் 3 | ||||
---|---|---|---|---|
காற்றின் வேகம் | 50–58 m/s | 96–113 kt | ||
178–209 km/h | 111–130 mph | |||
புயல் வெள்ளம் | 2.7–3.7 மீ | 9–12 அடி | ||
மைய அமுகம் | 945–964 mbar | 27.91–28.47 inHg |
இத்தரத்திலான அல்லது இதனைவிட வீரியம் கூடிய சூறாவளிகள் முக்கிய சூறாவளிகள் என அழைக்கப்படுகின்றன. இச்சூறாவளிகள் சிறிய வீடுகளுக்கு அவற்றின் அமைப்பிற்கு் சேதங்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். நகரும் வீடுகள் பொதுவாக அழிக்கப்படுகின்றன. கரையோரத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சிறிய கட்டிடங்களை அழிக்கும் மேலும் பெரிய கட்டிடங்கள் வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள் காரணமாக சேமாகும். தரைத்தோற்றத்தைப் பொறுத்து வெள்ளப்பெருக்கு உள் நோக்கி நகரலாம்.[1]
தரம் 4
[தொகு]தரம் 4 | ||||
---|---|---|---|---|
காற்றின் வேகம் | 59–69 m/s | 114–135 kt | ||
210–249 km/h | 131–155 mph | |||
புயல் வெள்ளம் | 4.0–5.5 மீ | 13–18 அடி | ||
மைய அமுகம் | 920–944 mbar | 27.17–27.88 inHg |
இத்தரத்திலான சூறாவளிகள் தடுப்புச் சுவர்களை சேதமாக்க வல்லவையாகும். மேலும் இவை கூரைகளை முற்றாக அழிக்கக் கூடியவையாகும். கரயோரங்களில் பெரிய மண்ணரிப்பு ஏற்படும். வெள்ளம் தரை நோக்கி நகரலாம்.[1]
இத்தரத்திலான சூறாவளிகள் மக்களடத்தி கூடிய பகுதிகளைத் தாக்கும் போது பாரிய சேதங்கள் ஏற்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆகக் கூடுதலான உயிர் சேதங்கள் ஏற்படுத்திய சூறாவளி கால்வெஸ்டன், 1900 ஒரு தரம் 4 இலான சூறாவளியாகும்.
தரம் 5
[தொகு]தரம் 5 | ||||
---|---|---|---|---|
காற்றின் வேகம் | ≥70 m/s | ≥136 kt | ||
≥250 km/h | ≥156 mph | |||
புயல் வெள்ளம் | ≥5.5 மீ | ≥19 அடி | ||
மைய அமுகம் | <920 mbar | <27.17 inHg |
இதுவே சபீர் சிம்சன் சூறாவளி தரப்படுத்தலில் உயர்வான தரமாகும். இத்தரத்திலான சூறாவளிகள் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் கூரைகளை முற்றாக சேதமாக்கக் கூடியவையாகும். சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படுவதோடு சிறிய கட்டிடங்கள் காற்றில் எடுத்துச் செல்லப்படலாம். வெள்ளப்பெருக்கு கரையோரக் கட்டிடங்களின் கீழ் மாடிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும். பாரிய அளவிலான மக்கள் அகதிகளாக வாய்ப்புண்டு.[1]
இத்தரத்திலான சூறாவளிகள் மிக நாசகாரமானவை.சூறாவளி ஃவீலிக்ஸ் (2007),சூறாவளி டீன் (2007) என்பவை இரண்டு உதாரணங்களாகும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 National Hurricane Center (June 22, 2006). "Saffir-Simpson Hurricane Scale Information". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 2007-02-25.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- Descriptions of the likely damage and flooding caused by each category of hurricane - The National Hurricane Center
- An Interview with Dr. Robert Simpson பரணிடப்பட்டது 2009-10-23 at the வந்தவழி இயந்திரம் - The Mariners Weather Log, April 1999
- Q&A with Herbert Saffir பரணிடப்பட்டது 2010-02-28 at the வந்தவழி இயந்திரம் - The South Florida Sun-Sentinel, June 2001