உள்ளடக்கத்துக்குச் செல்

சமாக் சுந்தரவேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாக் சுந்தரவேஜ்Samak Sundaravej
สมัคร สุนทรเวช
தாய்லாந்தின் 25வது பிரதமர்
பதவியில்
ஜனவரி 29, 2008 – செப்டம்பர் 9, 2008
ஆட்சியாளர்ஒன்பதாவது ராமா
முன்னையவர்சுராயுத் சுலனொண்ட்
பின்னவர்சொம்ச்சாய் வொங்சவாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-06-13)சூன் 13, 1935
பாங்கொக், தாய்லாந்து
இறப்புநவம்பர் 24, 2009(2009-11-24) (அகவை 74)
பாங்கொக், தாய்லாந்து
அரசியல் கட்சிமக்கள் சக்திக் கட்சி
துணைவர்சுராத் சுந்தரவேஜ்
கையெழுத்து

சமாக் சுந்தரவேஜ் (Samak Sundaravej தாய்: สมัคร สุนทรเวช; ஜூன் 13, 1935 - நவம்பர் 24, 2009) தாய்லாந்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2008 இல் தாய்லாந்தின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 2007, ஆகஸ்ட் 24 வரை தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.

தாய் சீன வம்சத்தைச் சேர்ந்த சமாக் அரசியல் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து நிகழ்த்தி வந்தார். செப்டம்பர் 2006 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஏற்படும் வரை ஏழாண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிரதமராக 2008, ஜனவரி 29 இல் தெரிவான பின்னரும் இரு தடவைகள் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளை நடத்தினார். இது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து செப்டம்பர் 9 இல் இவர் பதவி விலகினார்[1][2]. இவரது ஆட்சிக்கெதிராக மக்கள் திரண்டெழுந்து நாடெங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Samak Found Guilty". Archived from the original on 2008-09-23. பார்க்கப்பட்ட நாள் 2008-09-19.
  2. Court Says PM Most Resign
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாக்_சுந்தரவேஜ்&oldid=3926613" இலிருந்து மீள்விக்கப்பட்டது