சொம்ச்சாய் வொங்சவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொம்ச்சாய் வொங்சவாட்
Somchai Wongsawat
สมชาย วงศ์สวัสดิ์
Somchai Wongsawat 15112008.jpg
தாய்லாந்தின் 26வது பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 18, 2008 – டிசம்பர் 2, 2008
அரசர் ஒன்பதாவது ராமா
முன்னவர் சமாக் சுந்தரவேஜ்
பின்வந்தவர் சாவோவரத் சன்வீரக்குல்
தனிநபர் தகவல்
பிறப்பு 31 ஆகத்து 1947 (1947-08-31) (அகவை 75)
தாய்லாந்து
அரசியல் கட்சி மக்கள் சக்திக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) யாவோவாப்பா வொங்சவாட்
சமயம் பௌத்தம்

சொம்ச்சாய் வொங்சவாட் (Somchai Wongsawat, தாய் மொழி: สมชาย วงศ์สวัสดิ์, பிறப்பு: ஆகஸ்ட் 31, 1947) தாய்லாந்தின் அரசியல்வாதியும் அதன் பிரதமரும் ஆவார். தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராக இருந்தார்.

சட்டத்துறையில் பட்டதாரியான இவர் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்.

அரசியலில்[தொகு]

2007 இல் தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் உதவித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சொம்ச்சாய் 2008 இல் கல்வி அமைச்சராகவும்[1] பின்னர் உதவிப் பிரதமராகவும் தெரிவானார்.

பிரதமராக இருந்த சமாக் சுந்தரவேஜ் பதவியில் இருந்தபோது தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து உயர் நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து அகற்றவே, சொம்ச்சாய் செப்டம்பர் 9, 2008 இல் பதில் பிரதமராகத் தெரிவானார்.

செப்டம்பர் 17, 2008, சொம்ச்சாய் நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று (298 எதிர் 163) நாட்டின் பிரதமராகத் தெரிவானார்[2].[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mr. Somchai Wongsawat" (PDF). Thai Ministry of Education.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Thai party names nominee for PM". BBC News. 2008-09-15. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7615950.stm. பார்த்த நாள்: 2008-09-15. 
  4. "Somchai elected new prime minister". 2008-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-19 அன்று பார்க்கப்பட்டது.