கந்தளாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.

கந்தளாய்க் குளம்[தொகு]

குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தளாய்&oldid=2194088" இலிருந்து மீள்விக்கப்பட்டது