உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கராயன்
வன்னி நாட்டு அரசன்
ஆட்சி13 ஆம் நூற்றாண்டு
அரச குலம்வன்னியர்
சமயம்இந்து சமயம்

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக விளங்கிய வன்னி நாட்டை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இங்குள்ள அக்கராயன் குளம் இவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 2018 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் அக்கராயன் சிலை நிறுவப்பட்டது.[1][2] அக்கராயன் ஆறு இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாகி கிளிநொச்சி மாவட்டம் வழியாக யாழ்ப்பாண மாவட்டம் கடல்நீரேரியில் கலக்கிறது.

இலங்கையில் ஆட்சி பகுதி

[தொகு]

வன்னி நாடுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், தெற்கே கண்டி இராச்சியமும் கோட்டை அரசும், மேற்கு மற்றும் கிழக்கே இந்திய பெருங்கடலால் சூழப்பட்டது. நாட்டுக்கு தென்கிழக்கே திரிகோண மலை அமைந்துள்ளது. இலங்கையின் தற்போதைய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பே வன்னி நாடாக இருந்தது. இது மேலும் புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம் மாவட்டங்களில் சில பகுதியையும் உள்ளடக்கியதாகும். இதன் தெற்கே உள்ள கண்டி இராச்சியமும் (தென்கிழக்கு), கோட்டை அரசும் "(தென்மேற்கு) இப்பகுதிகளையும் மற்றும் தெற்கு இலங்கை பகுதிகளையும் உள்ளடக்கிய மற்ற இரு இராச்சியங்கள் ஆகும்.

யாழ்ப்பாண,வன்னி, கண்டி,கோட்டை அரசுகள்

வன்னியர்

[தொகு]

இலங்கையின் இடைக்கால பகுதியில் வாழ்ந்த ஆட்சியாளர்கள் ஆவர்.1990 ஆம் ஆண்டுகளில் தற்போதைய வட மாகாணம், இலங்கையில் வாழ்ந்த இலங்கைத் தமிழரின் ஒரு சாதி பிரிவினர் வன்னியர் என வழங்கப்படுகிறனர்.[3][4]

தோற்ற கோட்பாடுகள்

[தொகு]

வன்னியர் தோற்ற கோட்பாடுகளைப் பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. அதில் ஒன்று தற்போதைய இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ் இனக்குழு வன்னியர் குலத்தைக் குறிக்கிறது.[4][5] இவர்கள் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் போர் தளபதிகளாக இருந்தது வந்துள்ளனர் இதன் கவுரவ பட்டமாக வன்னியர் என வழங்கப்பட்டனர் என ஒரு கருத்து நிலவுகிறது. இவர்கள் பல குல மற்றும் இனக்குழுக்களின் வழிவந்தவர்கள் ஆவர்.[3][4][6][7]ஒரு சில இலங்கை வரலாறு ஆய்வாளர்கள் வனம் என்ற காடு பொருள் படுமாறு காட்டுப்பகுதியில் ஆட்சி செய்பவர்கள் என்பதால் அவர்கள் வன்னியர் என வழங்கப்பட்டனர் எனக் கூறுகின்றனர்.[4]

12 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் இராசரட்டை அரசு வீழ்ச்சியினாலும் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே கண்டி அரசும், கோட்டை அரசும் உருவாகியது. பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வன்னியர் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு வன்னி நாட்டை யாழ்ப்பாண அரசு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண அரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் உள்நாட்டு மக்களின் தேவையறிந்து சுயமாக ஆட்சி செய்து வந்தவர்கள் ஆவர். வன்னி நாடு யாழ்ப்பாண அரசுக்கு வரிகளாக பணம், தேன், தந்தங்கள், யானைகள் முதலியவற்றை ஆண்டு தோறும் வழங்கி வந்தது.[4][8][5][9] இந்த வரிசையில் அக்கராயன் என்ற வன்னிய குல ஆட்சியாளர் வன்னி நாட்டை ஆண்டு வந்தார்.

வன்னியர்களின் வீழ்ச்சி

[தொகு]

1621 ஆம் ஆண்டு போர்த்துக்கல் யாழ்ப்பாண அரசை வென்றது. இதன் பின் வன்னி நாடு போர்த்துக்கேய இலங்கைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. போர்த்துக்கேய இலங்கை பகுதி டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவர்களது ஆட்சிக்கு எதிராக வன்னி நாடு கடைசி மன்னர் பண்டார வன்னியன் கண்டி இராச்சியத்துடன் இணைந்து பலமாக எதிர்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ தலைமை அதிகாரி வான் டெரிபெர்கு பண்டார வன்னியரை தோற்கடித்து கொன்று வன்னி நாட்டை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்[10]. தற்போது இது வட மாகாணம், இலங்கை என வழங்கப்படுகிறது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அக்கராயன்: வன்னி பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு". IBC Tamil இம் மூலத்தில் இருந்து 2018-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180709011748/https://www.ibctamil.com/srilanka/80/102884. 
  2. "அக்கராயன்: வன்னி பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு!". jaffnazone.net இம் மூலத்தில் இருந்து 2018-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180709010731/https://jaffnazone.net/news/4438. 
  3. 3.0 3.1 McGilvray, Mukkuvar Vannimai: Tamil Caste and Matriclan Ideology in Batticaloa, Sri Lanka, p.34-97
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Karthigesu, Sri Lankan Tamil Society and Politics, p.7-9
  5. 5.0 5.1 Gunasingam, Sri Lankan Tamil Nationalism, p.53
  6. McGilvray, Dennis B. (2008-05-07). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka (in ஆங்கிலம்). Duke University Press. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822341611.
  7. Arasaratnam, Sinnappah (1996-01-01). Ceylon and the Dutch, 1600-1800: External Influences and Internal Change in Early Modern Sri Lanka (in ஆங்கிலம்). n Variorum. p. 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780860785798.
  8. Peebles, History of Sri Lanka, p.31-32
  9. "Vannimai". University Of Madras, Tamil Lexicon. Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2007-12-23.
  10. Daya Somasundaram, Scarred Communities: Psychosocial Impact of Man-made and Natural Disasters on Sri Lankan Society, p.52
  11. Holt, John (2011-04-13). The Sri Lanka Reader: History, Culture, Politics (in ஆங்கிலம்). Duke University Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822349825.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கராயன்&oldid=3901966" இலிருந்து மீள்விக்கப்பட்டது