மோர்கன் சுவாங்கிராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய்
Morgan Richard Tsvangirai
Morgan Tsvangirai Oslo 2009 B.jpg
மோர்கன் சுவாங்கிராய், Oslo 2009
Photo: Harry Wad
பிறப்பு மார்ச்சு 10, 1952 (1952-03-10) (அகவை 66)
தெற்கு ரொடீசியா
இருப்பிடம் ஹராரே
பணி அரசியல்வாதி
அரசியல் கட்சி சனநாயக மாற்றத்துக்கான இயக்கம்
சமயம் கிறிஸ்தவம்
வாழ்க்கைத்
துணை
சூசன் சங்கிராய்
வலைத்தளம்
http://www.mdc.co.zw

மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் (Morgan Richard Tsvangirai; பிறப்பு: மார்ச் 10, 1952) என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது[1]. 2002 இல் இடம்பெற்ற அதிபார் தேர்தலில் ரொபேர்ட் முகாபேயுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற அதிபருக்கான முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் அதிகாரபூர்வ முடிவுகளின்படி அவரால் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நாட்டில் முகாபே ஆதரவாளர்களினால் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையைக் காரணம் காட்டி ஜூன் 27 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது என அவர் குற்றம் சாட்டினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்கன்_சுவாங்கிராய்&oldid=2214420" இருந்து மீள்விக்கப்பட்டது