பேர்ம் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ம் பிரதேசம்
Perm Krai

Пермский край (Russian)
—  கிராய்  —

கொடி

சின்னம்
தேசியப் பண்: இல்லை
அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிகள்உரல்[2]
அமைக்கப்பட்டதுDecember 1, 2005[3]
தலை நகரம்பேர்ம்
அரசாங்கம் (August 2010 இல் நிலவரம்)
 • ஆளுநர்[5]விக்டர் பச்சார்சின்[4]
 • சட்டமன்றம்Legislative Assembly[6]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்160,600 km2 (62,000 sq mi)
பரப்புத் தரம்24வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்26,35,276
 • தரம்17வது
 • அடர்த்தி[9]16.41/km2 (42.5/sq mi)
 • நகர்75.0%
 • கிராமம்25.0%
உரசிய நேர வலயம்[10]
ISO 3166-2:RURU-PER
அனுமதித் தகடு59, 81, 159
சட்டபூர்வ மொழிஉருசியம்[11]
[www.perm.ru அலுவலக வலைத்தளம்]

பேர்ம் பிரதேசம் (Perm Krai (உருசியம்;Пе́рмский край , tr. Permsky kray; IPA: [ˈpʲɛrmskʲɪj ˈkraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்) இந்த பிரதேசத்தின் தலை நகரம் பேர்ம் நகரமாகும். இதன் மக்கள் தொகை: 2,635,276 (2010 கணக்கெடுப்பு).[8]

நிலவியல்[தொகு]

பேர்ம் பிரதேசம் ஐரோப்பிய சமவெளியின் கிழக்கிலும் மற்றும் நடு யூரல் மலைத்தொடரின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் 99.8% பரப்பளவு ஐரோபாவிலும், 0.2% பரப்பளவு ஆசியாவிலும் உள்ளது.

 • வடக்குத் தெற்காக நீளம் – 645 கிலோ மீட்டர் (401 மைல்)
 • கிழக்கு மேற்காக நீளம் – 417.5 கிலோ மீட்டர் (259.4 மைல்)

இந்த கிராயின் எல்லைகளாக வடக்கில் கோமி குடியரசு, வடமேற்கில் கீரொவ் மாகாணம், தென்மேற்கில் உத்மூர்த்தியா குடியரசு, தெற்கில் பாஷ்கெரட்டா குடியரசு, கிழக்கில் சிவெர்த்லோவ்சுக் மாகாணம் ஆகியன உள்ளன.

கிராயின் எல்லையின் நீளம் 2,200 கிலோ மீட்டர் (1,400 மைல்) ஆகும். பிரதேசத்தின் உயரமான இடம் துலேம்ஸ்கே கமெண்ட் மலை இதன் உயரம் 1,496 மீட்டர் (4,908 அடி) ஆகும்.

ஆறுகள்[தொகு]

சுசோவாயா ஆறு
விசிரா ஆறு

பேர்ம் பிரதேச ஆறுகள் காம வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவை. இவை வோல்கா ஆற்றின் மிகப்பெரிய கிளை நதியைச் சேர்ந்தவை. பேர்ம் பிரதேசத்தில் 29,000 க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. அனைத்து ஆறுகளின் மொத்த நீளம் 90,000 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் (56.000 மைல்)

போர்ம் பிரதேசத்தில் வெறும் இரண்டு ஆறுகளின் மொத்த நீளமே மிக நீண்டதாக 500 கிலோ மீட்டர் (310 மைல்)விட கூடுதலாக உள்ளது. இந்த ஆறுகளில் கமா ஆறு 1,805 கிலோ மீட்டர் (1,122 மைல்) மற்றும் சுசோவயா ஆறு, 592 கிலோமீட்டர் (368 மைல்) நீளம் உடையது.

இந்தப் பிரதேசத்தில் 100 to 500 கிலோ மீட்டர் (62 முதல் 311 மைல்) நீளமுள்ள 40 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் நீளம் பின்வறுமாறு:

 • சைல்வா ஆறு — 493 கி.மீ (306 மைல்)
 • கோல்வா ஆறு — 460 கி.மீ (285 மைல்)
 • விஷிரா ஆறு — 415 கி.மீ (258 மைல்)
 • யாவா ஆறு — 403 கி.மீ (250 மைல்)
 • கொசுவா ஆறு — 283 கி.மீ (176 மைல்)
 • கொசா ஆறு — 267 கி.மீ (165 மைல்)
 • வசுல்யானா ஆறு — 266 கி.மீ (165 மைல்)
 • இன்வா ஆறு — 257 கி.மீ (159 மைல்)
 • ஓப்வா ஆறு — 247 கி.மீ (153 மைல்)

இங்கு இன்னும் பல சிறிய ஆறுகள் பாய்கின்றன, சிறிய ஆறுகள் என்றாலும் சில ஆறுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, எடுத்துக்காட்டாக எகோஷிகா ஆற்றின் முகத்துவாரத்தில் பேர்ம் நகரம் நிறுவப்பட்டது.

காலநிலை[தொகு]

பேர்ம் பிரதேசம் ஐரோப்பிய காலநிலையைக் கொண்டது. குளிர்காலம் நீண்டதாகவும், பனிப்பொழிவு கொண்டதாகவும் இருக்கும். சனவரி மாத சராசரி வெப்பநிலை பேர்ம் பிரதேசத்தில் இடத்திற்கு ஏற்ப வேறுபட்டதாக, வடகிழக்கில் −18 °செ (0 °பா) முதலும், தென் மேற்கில் −15 °செ (5 °பா) வரையிலும் வெப்பநிலை நிலவும். பிரதேசத்தில் குறைந்த பட்ச வெப்பநிலையாக இதுவரை ஆன பதிவின்படி −53 °செ (−63 °பா) (வடக்கில்) ஆகும்.

கனிமங்கள்[தொகு]

சோலிகம்ஸ் உப்புக் கிடங்கு
குன்குரி பனிக் குகை

பிரதேசம் கனிமவளம் மிக்கதாக உள்ளது, இதன் மலைப்பகுதிகளிலும், சமவெளிகளிலும் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. இங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வைரம், குரோமைற்று, கரி, சுண்ணாம்பு, கட்டட மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கின்றன.[12]

இந்த பிரதேசத்தின் வெர்னிசூசோவிஸ்கி கோரோடிக் என்ற பகுதிக்கு அருகில் கச்சா எண்ணெய் 1929 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதுவரை 180 எண்ணெய், எரிவாயு வயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பயன்பாட்டுக்கு வந்திருப்பவை: 89 எண்ணெய், 2 எரிவாயு மற்றும் இரண்டும் கிடைக்கும் 18 வயல்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை கிராயின் நடு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவை. வடக்கு பகுதி வயல்கள் குறைவாகவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன, காரணம் இதன் தரைக்குக் கீழே உப்புப் படுக்கை உள்ளதால் அதைத்தாண்டி எண்ணெயும் எடுக்கவேண்டி இருப்பதே காரணம்.

இப்பிரதேசத்தில் நிலக்கரி சுமார் 200 ஆண்டுகளாக தோண்டி எடுக்கப்படுகிறது. நீண்ட காலமாக இதுவே பிராந்தியத்தின் எரிபொருள் தேவைக்கு முதன்மையான பொருளாக இருந்து வந்தது. 1960 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 12 மில்லியன் டன் நிலக்கரி இப்பிராந்தியத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. அதன்பிறகான காலகட்டத்தில் நிலக்கரி இருப்பு குறைவு ஏற்பட்டது, புதிய வயல்களும் கண்டறியப்படவில்லை.

பேர்ம் பிரதேசம் பொட்டாசியம் உப்புக்களைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உப்பு இருப்புகளில் ஒன்று ஆகும். இப்பகுதியில் சுமார் 1,800 சதுர கிமீ பரப்பளவில், உப்பு அடுக்குகள் 514 மீட்டர் தடிமன்வரை உள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

இப்பிரதேசத்தில் வனப்பகுதி சுமார் 71% நிலப்பரப்பில் உள்ளது. வனப்பகுதியில் பிரதானமாக ஊசி இலைக்காடுகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக வரவர இலையுதிர் காடுகளின் பரப்பு அதிகரிக்கிறது. இந்தக் காடுகளில் 62 பாலூட்டி விலங்குகளும், 270 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 39 மீன் இனங்களும், 6 ஊர்வன இனங்களும், 9 இருவாழிகளும் உள்ளன.

பொருளாதாரம்[தொகு]

இரும்பு அல்லாத உலோகங்களான பொட்டாஷ், மக்னீசியம் மற்றும் அரிய உலோகங்களைச் சார்ந்த தொழில்கள் உள்ளன. பிரதேசத்தில் தொழிற்சாலைகள் பிரென்சிகி (டைடானியம் மக்னீசியம் பிளாண்ட் கார்பரேசன் VSMPO) மற்றும் சோலிகமஸ்க் (ஜேஎஸ்சி சோலிகமஸ் மக்னீசியம் பிளாண்ட்) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

இராணுவ பொருட்கள் தயாரிப்புப் பொறியியல் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பொறியியல் துறையில் மிகப் பெரிய மையமாக பேர்ம் உள்ளது; இங்கு வானூர்தி மற்றும் ஏவுகணை விசைப்பொறிகள், எண்ணெய் வயலில் சுரங்க உபகரணங்கள், பெட்ரோலில் இயங்கும் மர அறுப்புக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், நீரூர்தி, வடகம்பி போன்ற பிற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

கம்ஸ்கேயா நீர்மின் நிலையம், போர்ம்

2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, பேர்ம் கிராயின் மக்கள் தொகை 2,635,276;[8] 2002 மக்கள் கணக்கெடுப்பின் மக்கள் தொகையான 2,819,421 விட குறைவு,[13] மற்றும் 1989 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுபில் மக்கள் தொகையான 3,099,994 விடவும் குறைவு ஆகும்.[14]

2010 மக்கள் கணக்கெடுப்பின்படி இனக்குழுக்கள் விவரம்:[8] உருசியர் (87.1%), கோமி-பெர்ம்யாகர் (3.2%), தடார்கள் (4.6%), பஸ்கிகிரர் (1,3%), உக்ரைனியர் (0,6%), உத்மர்டர் (0,8%), பெலாருசியர் (0,3%), செர்மானியர் (0,3%) மற்றும் பிறர். மக்கள் தொகையில் 119,538 பேர் தங்கள் இனம் குறித்து தெரிவிக்கவில்லை.[15]

2002 மக்கள் கணக்கெடுப்பின்படி பேர்ம் கிராயில் 40,740 பாஷ்கிரி மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் பார்டேம்ஸ்கே மாவட்டத்தில் வாழ்கின்றனர். பெரும்பாலும் துவா ஆற்றை ஒட்டிய பகுதியில் வாழும் இவர்கள் கைனா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

தடார்கள் உள்ள பேர்ம் பிரதேசத்தின் கிட்டத்தட்ட அனைத்து குடியேற்றங்களிலும் வாழ்கின்றனர். தடார் மக்களிடையே பல்வேறு இனக் குழுக்கள் உள்ளன.[16][17]

2007 முதன்மை புள்ளிவிவரங்கள்:

 • பிறப்பு விகிதம்: 1000 பேருக்கு 12.05
 • இறப்பு விகிதம்: 1000 பேருக்கு 15.70
 • சராசரி மக்கள் தொகை வளர்ச்சி: 1000 பேருக்கு -1.0
2012 முதன்மை புள்ளி விவரங்கள்
 • பிறப்புகள்; 38 847 (1000 பேருக்கு 14.8)
 • இறப்புகள்; 37 278 (1000 பேருக்கு 14.2)
 • மொத்த கருத்தரிப்பு விகிதம்: 1.91

பேர்ம் பிரதேசத்தின் சில பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இறப்பு விகிதம் மிகக் கூடுதலாக உள்ளளது, போர்கள், இயற்கை அழிவுகள் நடந்த காலத்தைத் தவிர இதுபோன்று இருப்பதில்லை. மொத்தமுள்ள 47 மாவட்டங்களில் வெறும் ஐந்து மாவடங்களில் இறப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் கூடுதலாக உள்ளது. பேர்ம் கிராயின் பிறப்பு விகிதம் பிற ஐரோப்பிய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகக் கூடுதலாக உள்ளது. காட்டாக, ஜெர்மனியின் பிறப்பு விகிதம் 2007 இல் 1000 பேருக்கு 8.3 ஆகும். பேர்ம் பிரதேசம் முழுமையும் 50% மிகக் கூடுதலான பிறப்பு விகிதத்ததைக் கொண்டுள்ளது.[18]

சமயம்[தொகு]

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[19] போர்ம் கிராய் மக்கள் தொகையில் 43% பேர் உருசிய மரபுவழி கிருத்தவர், 5% பேர் திருச்சபை சாராத பொதுவான கிருத்தவர், 4% பேர் முஸ்லிம், 2% பேர் ரோத்னவர் (ஸ்லாவிக் நாட்டுப்புர சமயம்), 1% பழைய நம்பிக்கையாளர்கள், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்துவத்தை நம்புபவர்கள், பிற திருச்சபைகளை ஏற்காதவர்களாகவோ அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபை உறுப்பினர்களாக இருப்பவர்கள், 8% பேர் பிற சமயத்தவர்களாகவோ அல்லது தங்கள் சமய நம்பிக்கை குறித்து கணக்கெடுப்பின்போது தெரிவிக்காதவர்களோ ஆவர், 24% பேர் கடவுள் நம்பிக்கை உடயவர்கள் ஆனால் மத நம்பிக்கை அற்றவர்கள், 14% பேர் நாத்திகர் அல்லது சமயமற்றவர்கள்.[19]

கவனத்தைக் கவருபவை[தொகு]

பேர்ம் மாநில கலைக்கூடம்
கோக்லோவிஸ்கி

பேர்ம் கிராயில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன:

 • பேர்ம் மாநிலக் கலைக்கூடம்
 • போர்ம் மாநில உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகம்
 • தாவர அருங்காட்சியகம்
 • கோகோலோவா கட்டடக்கலை-எத்னோகிராஃபிக் அருங்காட்சியகம் மற்றும் பல.

பேர்ம் பிரதேசத்தின் வடக்கில் உள்ள சிறிய நகரமான உசோலியில் ஏராளமான தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக தனி மணி கோபுரம் கொண்ட, இரட்சகராக கதீட்ரல் போன்றவை ஆகும்.

போர்ம் பிரதேசத்தில் பல அரங்கங்கள் உள்ளன அவை, பேர்ம் ஓபரா மற்றும் பாலே அரங்கம், பேர்ம் கல்வி அரங்கம், பப்பட் அரங்கம், இளம் பார்வையாளர்களுக்கான அரங்கம், "நியூ பிரிட்ஜ்" அரங்கம் மற்றும் சில அரங்கங்கள் உள்ளன.

பேர்ம் பிரதேசத்தில் பல கோயில்கள், மடாலயங்கள் உள்ளன, இவைகளில் மிகவும் முக்கியமானவை சில: பேர்ம் நகரில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள பிலோங்கோர்க்கி கான்வென்ட் பேர்ம், ஸலூட்ஸ்கே தேவாலயம், ஃபிடோசிவிஸ்கே தேவாலயம், பேர்ம் பள்ளிவாசல் மற்றும் பிற.

போர்ம் பிரதேசத்தின் ஓர்டின்ஸ்கே பகுதி ஒர்டா நீரடி குகை உள்ள பகுதியாக உள்ளது. இவை ஓர்டா என்னும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இக்குகையே உலகில் உள்ள நீரடி குகைகளில் மிகப்பெரியது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
 2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
 3. Федеральный конституционный закон №1-ФКЗ от 25 марта 2004 г «Об образовании в составе Российской Федерации нового субъекта Российской Федерации в результате объединения Пермской области и Коми-Пермяцкого автономного округа», в ред. федерального конституционного закона №1-ФКЗ от 12 апреля 2006 г. (Federal Constitutional Law #1-FKZ of March 25, 2004 On Establishment Within the Russian Federation of a New Federal Subject of the Russian Federation as a Result of the Merger of Perm Oblast and Komi-Permyak Autonomous Okrug, as amended by the Federal Constitutional Law #1-FKZ of 12, ஏப்ரல் 2006. ).
 4. Official website of Perm Krai. Viktor Fyodorovich Basargin, Governor of Perm Krai பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
 5. Charter, Article 15.3
 6. Charter, Article 15.4
 7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (Russian). Federal State Statistics Service. 2011-11-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 8. 8.0 8.1 8.2 8.3 Russian Federal State Statistics Service (2011). "Всероссийская перепись населения 2010 года. Том 1" [2010 All-Russian Population Census, vol. 1] பரணிடப்பட்டது 2016-03-25 at the வந்தவழி இயந்திரம். Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census) (in Russian).
 9. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
 10. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
 11. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
 12. "Полезные ископаемые". 2008-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-10 அன்று பார்க்கப்பட்டது.
 13. Russian Federal State Statistics Service (May 21, 2004). "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек" [Population of Russia, Its Federal Districts, Federal Subjects, Districts, Urban Localities, Rural Localities—Administrative Centers, and Rural Localities with Population of Over 3,000] பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம் (XLS). Всероссийская перепись населения 2002 года [All-Russia Population Census of 2002] (in Russian).
 14. Demoscope Weekly (1989). "Всесоюзная перепись населения 1989 г.
 15. "http://www.perepis-2010.ru/news/detail.php?". 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-10 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
 16. "Статья о башкирах на сайте РОО "Хомай"". 2011-02-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-10 அன்று பார்க்கப்பட்டது.
 17. "ТАТАРЫ". 2011-10-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-10 அன்று பார்க்கப்பட்டது.
 18. http://www.regnum.ru/news/1114845.html
 19. 19.0 19.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ம்_பிரதேசம்&oldid=3484297" இருந்து மீள்விக்கப்பட்டது