நீசுனி நோவ்கோரத் மாகாணம்
நீசுனி நோவ்கோரத் மாகாணம் Nizhny Novgorod Oblast | |
---|---|
மாகாணம் | |
Нижегородская область | |
பண்: எதுவுமில்லை[1] | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | வோல்கா[2] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா-வையாத்கா[3] |
நிர்வாக மையம் | நீசுனி நோவ்கோரத்[4] |
அரசு | |
• நிர்வாகம் | நீசுனி நோவ்கோரட்த் சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | வலேரி சாந்த்சொவ்[6] |
பரப்பளவு[7] | |
• மொத்தம் | 76,900 km2 (29,700 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 40வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 33,10,597 |
• Estimate (2018)[9] | 32,34,752 (−2.3%) |
• தரவரிசை | 10வது |
• அடர்த்தி | 43/km2 (110/sq mi) |
• நகர்ப்புறம் | 78.9% |
• நாட்டுப்புறம் | 21.1% |
நேர வலயம் | ஒசநே+03:00 ![]() |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | RU-NIZ |
அனுமதி இலக்கத்தகடு | 52, 152 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.government-nnov.ru/ |
நீசுனி நோவ்கோரத் மாகாணம் (Nizhny Novgorod Oblast, உருசியம்: Нижегоро́дская о́бласть, நீசெகரோத்ஸ்கயா ஓப்லஸ்த்) அல்லது நீசெகோரத் மாகாணம்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் நீசுனி நோவ்கோரத் நகரம் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 3,310,597 ஆகும்.[8] 1932-1990 காலகட்டத்தில் இது கோர்க்கி ஒப்லாஸ்து என அறியப்பட்டது. இந்த மாகாணம் வழியாக வோல்கா ஆறு கடந்து செல்கிறது.
புவியியல்[தொகு]

இந்த ஒப்ளாஸ்து 76.900 சதுர கிலோமீட்டர் (29,700 சதுர மைல்) பரப்பளவு கொண்டுள்ளது. இந்த பகுதியின் நிலப்பரப்பில் வேளாண் நிலம் 41%, காடுகள் பரப்பளவு 48%, ஏரிகள் மற்றும் ஆறுகள், 2%; பிறவகை நிலங்கள் 9% ஆகும். ஒப்லாஸ்து எல்லைகளாக வடக்கில் கொஸ்ட்ரோமா ஒப்லாஸ்து, வடகிழக்கில் கீரோவ் ஒப்லாஸ்து, கிழக்கில் மாரீ எல் குடியரசு மற்றும் சுவாஷ் குடியரசு ஆகியவையும், தெற்கில் மர்தோவியா குடியரசு, தென்மேற்கில் ரயாசன் ஒப்லாஸ்து, மேற்கில் விளாடிமிர் ஒப்லாஸ்து , வடமேற்கில் திறான ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.
இயற்கை வளங்கள்[தொகு]
இந்த ஒப்லாஸ்து குறிப்பிடும்படியான மதிப்புமிக்க இயற்கை வளம் அற்றதாக உள்ளது, ஓரளவு மணல் இருப்பு கொண்டுள்ளது. (டைட்டானியம்-ஸிர்கோனியம் மணல் உட்பட), மேலும் களிமண் , ஜிப்சம் , கரி , கனிம உப்பு , மரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
மாகாணத்தின் மக்கள் தொகை: 3,310,597 ( 2010 கணக்கெடுப்பு ); 3,524,028 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,714,322 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,[8] உருசிய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 3.109.661 ( 95.1% ) உள்ளனர். பிற இன குழுக்களில் தடார்கள் 44,103 ( 1.4%), மோர்தோவர்கள் 19,138 ( 0.6%), உக்ரைனியர்கள் 17,657 ( 0.5% ) மற்றும் வேறுபல இனக்குழுக்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழுவும் 0.5% க்கும் குறைவாகவே உள்ளனர், 42.349 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். .[13]
- பிறப்பு (2011): 36,315 (1000 11.0)
- இறப்பு (2011): 54,184 (1000 16.4 சதவீதம்)
2011 ல் 8.5% இறப்பு குறைந்துள்ளது,( 2010 ஆண்டை ஒப்பிடும்போது )[14] 2012 முக்கிய புள்ளிவிரங்கள்
2009 - 1.43 | 2010 - 1.42 | 2011 - 1.44 | 2012 - 1.55 | 2013 - 1.56 | 2014 - 1.59 (இ)
பொருளாதாரம்[தொகு]
தொழில் துறை உற்பத்தியில் இந்த பிராந்தியம் உருசியாவில் ஏழாவது இடத்தை வகிக்கிறது. பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் 650 க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. கிட்டத்தட்ட 700,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பொருள் உற்பத்தி வேலை தொடர்புடைய தொழிலாளர்கள் 62% ஆவர். முன்னணி தொழில் பிரிவினர் பொறியியல் மற்றும் உலோக வேலைகள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்கள் , காடுகளைச் சார்ந்த தொழில்கள், மரப்பொருட்கள், மற்றும் காகித தொழிற்சாலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கதாக உள்ளன.
சமயம்[தொகு]
2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[17] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 69,2% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% கத்தோலிக்க திருச்சபை, மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 10% நாத்திகர், 0.8% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Article 1.3 of the Charter of Nizhny Novgorod Oblast states that the oblast may have its own anthem; however, as of 2014 no anthem has been adopted.
- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Charter of Nizhny Novgorod Oblast, Article 5.5
- ↑ 5.0 5.1 Charter of Nizhny Novgorod Oblast, Article 21
- ↑ Official website of Nizhny Novgorod Oblast. Valery Pavlinovich Shantsev, Governor of Nizhny Novgorod Oblast பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (in ru). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (Federal State Statistics Service). http://perepis2002.ru/ct/html/TOM_01_03.htm.
- ↑ 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011) (in Russian). Federal State Statistics Service. http://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm.
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". http://www.gks.ru/free_doc/doc_2018/bul_dr/mun_obr2018.rar.
- ↑ "Об исчислении времени" (in ru). 3 June 2011. http://pravo.gov.ru/proxy/ips/?docbody=&prevDoc=102483854&backlink=1&&nd=102148085.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ 12.0 12.1 "Нижегородская область. Административно-территориальное деление на 1 января 1992 г.". ГИПП "Нижполиграф", Нижний Новгород, 1993, стр. 5
- ↑ "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19 இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225111852/http://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm. பார்த்த நாள்: 2012-08-13.
- ↑ "Росстат. Демография". Gks.ru இம் மூலத்தில் இருந்து 2012-03-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120326222501/http://gks.ru/wps/wcm/connect/rosstat/rosstatsite/main/population/demography/. பார்த்த நாள்: 2012-08-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130301092826/http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224183858/http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312%20.
- ↑ 17.0 17.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org