கரேலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரேலியா குடியரசு
Republic of Karelia

Республика Карелия
Map of Russia - Republic of Karelia (2008-03).svg
Location of the Republic of Karelia in Russia
சின்னம் கொடி
Coat of Arms of Republic of Karelia.svg
கரேலியா குடியரசின் சின்னம்
Flag of Karelia.svg
கரேலியா குடியரசின் கொடி
நாட்டு வணக்கம்: கரேலியா குடியரசின் கீதம்
தலைநகர் பெத்ரசவோத்ஸ்க்
அமைக்கப்பட்டது ஜூலை 16, 1956
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
வடமேற்கு
வடக்கு பொருளாதார பிரிவு
குறியீடு 10
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
1,72,400 கிமீ²
20வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
7,16,281
67வது
4.2 / கிமீ²
75.0%
25.0%
சட்டபூர்வ மொழி ரஷ்ய மொழி
அரசு
தலைவர் செர்கே கத்தானந்தொவ்
பிரதமர் பாவெல் செர்னோவ்
சட்டவாக்க சபை அரசியலமைப்பு சபை
அரசியலமைப்பு கரேலிய குடியரசின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.gov.karelia.ru/

கரேலிய குடியரசு (Republic of Karelia, ரஷ்ய மொழி: Респу́блика Каре́лия; கரேலிய மொழி: Karjalan tazavaldu) ரஷ்யக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும்.

வரலாறு[தொகு]

வரலாற்று ரீதியாக, கரேலியா முன்னர் நோவ்கோரத் குடியரசில் உருசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு பிரிவாக இருந்தது. இது இன்றைய பின்லாந்தின் கிழக்கே அமைந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டு தொடக்கம் இதன் பல பகுதிகள் சுவீடியர்களினால் கைப்பற்றப்பட்டு சுவீடியக் கரேலியா என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1721 ஆம் ஆண்டில் உருசியாவினுடனான போரை அடுத்து ஏற்பட்ட உடன்பாட்டின் படி உருசியாவுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

1920 இல், இப்பகுதி கெரேலிய தொழில் கம்யூன் என அழைக்கப்பட்டது. 1923 கரேலிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு ஆனது. 1940 முதல் கரேலோ-பின்னிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆக மாற்றப்பட்டது. ஆனாலும், பின்னரும் தொடர்ந்த போரை அடுத்து கரேலிய இஸ்துமுஸ் எனப்படும் பகுதி லெனின்கிராத் ஓப்லஸ்துடன் இணைக்கப்பட்டது. 1956 இல் இது மீண்டும் தன்னாட்சியுடன் கூடிய சோவியத் சோசலிசக் குடியரசானது. 1941 ஆம் ஆண்டில் தொடர்ந்த போரின் போது பின்லாந்து இதன் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தாலும், 1944 இல் பின்லாந்து அங்கிருந்து பின்வாங்கியது. உருசியாவுக்கு இழந்த கரேலியாவின் பகுதிகளை பின்லாந்து திரும்ப எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாலும், பின்லாந்தின் அரசியலில் எப்போதும் இது ஒரு சூடான பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

இப்போதுள்ள தன்னாட்சியுடன் கூடிய கெரேலியக் குடியரசு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து 1991 ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் உருவாக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேலியா&oldid=1348158" இருந்து மீள்விக்கப்பட்டது