உள்ளடக்கத்துக்குச் செல்

சகா குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாக்ஹா (யகூத்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சகா (யாகுட்டியா) குடியரசு
Sakha (Yakutia) Republic
Республика Саха (Якутия)
Other transcription(s)
 • SakhaСаха Өрөспүүбүлүкэтэ
சகா (யாகுட்டியா) குடியரசு Sakha (Yakutia) Republic-இன் கொடி
கொடி
சகா (யாகுட்டியா) குடியரசு Sakha (Yakutia) Republic-இன் சின்னம்
சின்னம்
பண்: சகா குடியரசு நாட்டுப் பண்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தூரக் கிழக்கு[1]
பொருளாதாரப் பகுதிதூரக் கிழக்கு[2]
தலைநகர்யாகுட்ஸ்க்[3]
அரசு
 • நிர்வாகம்மாநில அவை (Il Tumen)[4]
 • தலைவர்[4]இக்ரோ போரிசோவ்[5]
பரப்பளவு
 • மொத்தம்30,83,523 km2 (11,90,555 sq mi)
 • பரப்பளவு தரவரிசை1st
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்9,58,528
 • மதிப்பீடு 
(2018)[8]
9,64,330 (+0.6%)
 • தரவரிசை55th
 • அடர்த்தி0.31/km2 (0.81/sq mi)
 • நகர்ப்புறம்
64.1%
 • நாட்டுப்புறம்
35.9%
நேர வலயம்ஒசநே+9 ([9])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-SA
அனுமதி இலக்கத்தகடு14
OKTMO ஐடி98000000
அலுவல் மொழிகள்உருசியம்;[10] யாகுத; languages of small indigenous peoples of the North are official in places of their concentration[11]
இணையதளம்http://sakha.gov.ru/

சகா (யாகுட்டியா) குடியரசு (Sakha Republic உருசிய மொழி : Республика Саха (Якутия), . Tr Respublika யாகுத மொழி (Yakutiya); செல்லவும்: [rʲɪspublʲɪkə sɐxa jɪkutʲɪjə] ; யாகுட் :Саха Өрөспүүбүлүкэтэ, Sakha Öröspǖbülükete) என்பது உருசிய கூட்டாட்சியைச் சேர்ந்த ஒரு குடியரசு ஆகும். இது 958.528 மக்கள் தொகை கொண்டது (2010 கணக்கெடுப்பு ),[7] முதன்மை இன மக்கள் யாகுட், மற்றும் உருசியர்கள் ஆவர். ஒப்பீட்டளவில் தூர கிழக்கு கூட்டமைப்பு மாவட்டத்தில் பாதி நிலப்பரப்பை இது கொண்டுள்ளது. உலகில் இதுவே தேசிய துணை ஆட்சிப் பகுதியில் பெரிய பகுதியாகும். இது 3.083.523 சதுர கிலோமீட்டர் (1,190,555 சதுர மைல்) பரப்பளவு உள்ளது[12] இதன் பரப்ளவை பார்க்கும்போது அர்கெந்தீனாவை விட பெரியதாகவும், இந்தியாவைவிட சற்று சிறியதாகவும் 3.287.590 சதுர கிலோமீட்டர் (1,269,350 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.[12] இதன் தலைநகர் யாகுட்சுக் நகரமாகும். யாகுட் குடியரசு உருசிய கூட்டமைப்பின் பத்து தன்னாட்சி துருக்கிய குடியரசுகளின் ஒன்றாகும்..[13]

புவியியல்

[தொகு]
  • எல்லைகள்:
  • உருசியாவின் உள்பிராந்தியங்களான: சுகோட்டா தன்னாட்சி பிராந்தியத்திற்கான எல்லைப்குதி (660 கிமீ) , காதன் ஒப்லாஸ்து (1520 கிமீ), கபரோவ்ஸ்க் பிரதேசம் (2130 கி.மீ.), அமுர் ஒப்லாஸ்து, சபையகலகி பிரதேசம், இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து, கிராஸ்நாயர்ஸ்க் பிரதேசம் ஆகிய பகுதிகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
  • கடல் எல்லை; ஆர்க்டிக் பெருங்கடல் ( லப்டேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரிய கடல் உட்பட).
  • உயர்ந்த இடம் ; பீக் பொபிடா (3,003 மீ), மஸ்-கயையா மலைச் சிகரம் (2959 மீ அல்லது 3,011 மீ)
  • அதிகபட்ச வடக்கு> தெற்கு தொலைவு : 2,500 கிமீ (1,600 மைல்)
  • அதிகபட்ச கிழக்கு > மேற்கு தொலைவு: 2000 கிமீ (1,200 மைல்)

யாகுட்டியா வடபகுதியில் ஹென்ரெய்ட்டா தீவு பகுதியையும், லப்டேவ் கடல், கிழக்கு சைபீரிய கடல், ஆர்க்டிக் பெருங்கடல். ஆகியவற்றைத் தழுவியபடி உள்ளது. வட கோளத்தில் உள்ள இந்த கடல்பகுதி குளிராகவும், பனிசெரிந்தும் காணப்படுபவை. ஆண்டில் 9-10 மாதங்கள் பனி மூடியே காணப்படும்.

கனிம வளங்கள்

[தொகு]

இப்பகுதி கனிமவளம் மிக்க பகுதியாகும் இங்கு நிலத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, வெள்ளி, வெள்ளீயம்,தங்குதன் போன்ற பல கனிமங்கள் உள்ளன உருசியாவில் வெட்டப்படும் வைரங்களில் 99% இந்த குடியரசிலேயே வெட்டப்படுகிறது. இது உலக வைரத் தேவையை 25% பூர்த்தி செய்கிறது.

காலநிலை

[தொகு]

யாகுட் அதன் காலநிலை கொண்டு சிறப்பாக அறியப்படுகிறது, இதன் உச்ச அளவு குளிரால் வட கோளத்தில் மிகவும் குளிரான பிரதேசமாக இருக்கிறது. மிகக் குறைந்த வெப்பநிலையை எப்போதும் கொண்டிருக்கும் இங்கே உள்ள பதிவுகள் காட்டுகின்றன. வட கோளத்தின் குளிரான, வெப்பநிலையாக -67,8 பாகை செல்சியஸ் (-90.0 ° பா), 1892 ஆம் வருடம் பதியப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற குறைந்த வெப்பநிலை -71,2 ° செ (-96.2 பா) 1926 ஆம் ஆண்டு நிலவியது.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -28 டிகிரி செல்சியஸ் (-18 ° பா) வரை (கடற்கரைப்பகுதிகளில் -47 டிகிரி செல்சியஸ் (-53 ° பா) நிலவுகிறது.
  • சராசரி சூலை மாத வெப்பநிலை: +19 பாகை செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்) (கடற்கரைப் பகுதிகளில் +19 °செ (66 °பா) என வெப்பநிலை நிலவுகிறது. என்றாலும், மிகவும் வெப்பமான நாளாக யாகூட்டில் ஒரு சூலை மாதப்பதிவில் +38.4 பாகை செல்சியஸ் (101.1 ° பா) வரை) வரை பதிவானது.
  • ஆண்டு சராசரி ஆண்டு மழை : 700 மி.மீ (மத்தியப் பகுதிகளில்). .200மிமீ (கிழக்கு யாகுட் மலைகளில்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. 3.0 3.1 Minahan, James (2002). Encyclopedia of the Stateless Nations: S-Z. Greenwood Publishing Group. pp. 1630ff.
  4. 4.0 4.1 Constitution of the Sakha (Yakutia) Republic பரணிடப்பட்டது 2015-10-24 at the வந்தவழி இயந்திரம் 53.1
  5. Official website of the Sakha (Yakutia) Republic. Yegor Afanasyevich Borisov பரணிடப்பட்டது 2012-07-14 at Archive.today (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Constitution of the Sakha (Yakutia) Republic பரணிடப்பட்டது 2015-10-24 at the வந்தவழி இயந்திரம், Article 46
  12. 12.0 12.1 Rosstat (Russian Statistical Service), 2010 பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம் (xls). Retrieved 2012-06-15.
  13. "Turkic Republics and Communities - Turks, Turkish Nations, Turk Societies". Khazaria.com. 2012-05-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகா_குடியரசு&oldid=3791647" இலிருந்து மீள்விக்கப்பட்டது