உருசியக் குடியரசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியக் குடியரசுகள்
Republics of Russia
Republics of Russia1.png

1. அடிகேயா
2. அல்த்தாய்
3. பாஷ்கொர்டொஸ்தான்
4. புரியாத்தியா
5. தாகெஸ்தான்
6. இங்குசேத்தியா
7. கபர்தினோ-பல்கரீயா
8. கால்மீக்கியா

9. காராசாய்-செர்கெஸ்ஸியா
10. கரேலியா
11. கோமி
12. மாரீ எல்
13. மொர்தோவியா
14. சகா
15. வடக்கு ஒசேத்திய-அலனீயா
16. தர்தாரிஸ்தான்

17. துவா
18. உத்மூர்த்தியா
19. அக்காசியா
20. செச்சினியா
21. சுவாசியா
22. கிரிமியா (உக்ரைனின் பகுதியாக ஐநா அங்கீகரித்துள்ளது.)

வகைமாநிலம்
அமைவிடம்உருசியா
எண்ணிக்கை22
மக்கள்தொகை206,195 (அல்த்தாய்) – 4,072,102 (பாஷ்கொர்டொஸ்தான்)
பரப்புகள்3,000 km2 (1,200 sq mi) (இங்குசேத்தியா) – 3,287,590 km2 (1,269,350 sq mi) (சகா)
அரசுகுடியரசு அரசாங்கம்
உட்பிரிவுகள்நிருவாகம்: மாவட்டங்கள், ஊர்களும் நகரங்களும், புறநகர்கள், செல்சோவியத்கள்; மாநகரசபைகள்: வட்டாரங்கள், மாநகர மாவட்டங்கள், நகரக் குடிருப்புகள், கிராமக் குடியிருப்புகள்

உருசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, உருசியக் கூட்டமைப்பு 85 கூட்டாட்சி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 குடியரசுகள் ஆகும். பெரும்பாலான குடியரசுகள் உருசியர்களல்லாத இனக்குழுக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், பல குடியரசுகளில் உருசியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குடியரசு ஒன்றின் சுதேசிய இனத்தவரின் பெயரைக்கொண்ட ஒரு குடியரசு "பெயரளவிலான தேசியம்" ஆகக் கருதப்படுகிறது.

அரசமைப்பு நிலை[தொகு]

ஏனைய உருசிய நடுவண் அமைப்புகளைப் போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது ஆட்சி மொழியைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.[1] ஏனைய நடுவண் அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் நடுவண் அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது.[2]

உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "நடுவண் மாவட்டங்கள்" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.[3]

கிரிமியாவின் நிலை[தொகு]

2014 மார்ச் 18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் கிரிமியா குடியரசும், செவஸ்தப்போலும் உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன.[4][5] பெரும்பாலான உலக நாடுகளும், உக்ரைன் அரசும் கிரிமியாவை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன.[6][7]

முன்னாள் தன்னாட்சிக் குடியரசுகளும் தன்னாட்சி மாகாணங்களும்[தொகு]

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உருசிய சோவியத் நடுவண் சோசலிசக் குடியரசு மூன்று வகையான "சுயாட்சி" நிருவாக அமைப்புகளைக் கொண்டிருந்தது. அவை: தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சி மாகாணங்கள் (ஓப்லஸ்துகள்), தன்னாட்சி ஓக்குருகுகள் என்பனவையாகும்.

சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒவ்வொரு தன்னாட்சிக் குடியரசும் அதே பெயரில் குடியரசானது. (செச்சினிய-இங்கூசு சோவியத் தன்னாட்சி சோசலிசக் குடியரசு செச்சினியா, இங்குசேத்தியா என இரண்டு குடியரசுகளாயின.) பல "தன்னாட்சி மாகாணங்கள்" (அடிகேயா, அல்த்தாய், காராசாய்-செர்கெஸ்ஸியா, அக்காசியா) ஆகியனவும் குடியரசுகள் ஆயின.

மக்கள்தொகையியல்[தொகு]

குடியரசு கண்டம் பெயரளவு தேசியம்1 பெயரளவு தேசியம்: வீதம் (2010) பெயரளவு தேசியம்: மொழிக் குழு பெயரளவு தேசியம்: முக்கிய சமயம் உருசிய இனம் / மொத்த மக்கள்தொகை (2010) மக்கள்தொகை (2010)4
அடிகேயா ஐரோப்பா அதிகே 25.2% காக்கசியம் பழமைவாதக் கிறித்தவம், சுன்னி இசுலாம் 63.6% 440,388
அல்த்தாய் ஆசியா அல்த்தாய் 34.5% துருக்கியம் புர்க்கானியம், திபெத்திய பௌத்தம், சாமனியம், பழமைவாதக் கிறித்தவம் 56.6% 206,195
பாஷ்கொர்டொஸ்தான் ஐரோப்பா பாசுக்கீர் 29.5% துருக்கியம் சுன்னி இசுலாம் 36.1% 4,072,102
புரியாத்தியா ஆசியா புரியாத்துகள் 30.0% மங்கோலியம் திபெத்திய பௌத்தம், சாமனியம், ஒங்கோலிசு எனப்படும் சிறிய உருசிய மரபுவழித் திருச்சபை சிறுபான்மையினம் 66.1% 972,658
செச்சினியா ஐரோப்பா செச்சினியர்2 95.3% காக்கசியம் சுன்னி இசுலாம், சூபித்துவம் 1.9% 1,103,686
சுவாசியா ஐரோப்பா சுவாசியர் 67.7% துருக்கியம் உருசிய மரபுவழித் திருச்சபை, இசுலாம், சாமனியம் 26.9% 1,251,599
கிரிமியா ஐரோப்பா கிரிமியத் தத்தார் 10.6%7 துருக்கியம் பழமைவாதக் கிறித்தவம், இசுலாம் 67.9%7 2,284,769
தாகெஸ்தான் ஐரோப்பா 10 சுதேசியர்3 88.0% காக்காசியம், துருக்கியம்5 சுன்னி இசுலாம், யூதம் (மலையக யூதர்களும் யூத தாத்துகளும் சேர்த்து) 3.6% 2,576,531
இங்குசேத்தியா ஐரோப்பா இங்கூசு மக்கள்2 94.1% காக்கசியம் சுன்னி இசுலாம், சூபித்துவம் 0.8% 467,294
கபர்தினோ-பல்கரீயா ஐரோப்பா கபர்து, பால்க்கர் 69.9% (கபர்து மக்கள் 57.2%, பல்க்கர் மக்கள் 12.7%) காக்கசியம், துருக்கியம் சுன்னி இசுலாம், உருசிய மரபுவழித் திருச்சபை6 22.5% 859,802
கால்மீக்கியா ஐரோப்பா கால்மிக் மக்கள் 57.4% மங்கோலியம் திபெத்திய பௌத்தம் 30.2% 289,464
காராசாய்-செர்கெஸ்ஸியா ஐரோப்பா கரச்சாய், செர்க்கெசு 52.9% (கரச்சாய் 41.0%, செர்க்கெசு 11.9%) துருக்கியம், காக்கசியம் சுன்னி இசுலாம் 31.6% 478,517
கரேலியா ஐரோப்பா கரேலியர் 7.4% யூரலியம் உருசிய மரபுவழித் திருச்சபை 82.2% 643,548
அக்காசியா ஆசியா காக்கசு 12.1% துருக்கியம் சாமனியம், உருசிய மரபுவழித் திருச்சபை 81.7% 532,403
கோமி ஐரோப்பா கோமி மக்கள் 23.7% யூரலியம் உருசிய மரபுவழித் திருச்சபை, சாமனியம் 65.1% 901,189
மாரீ எல் ஐரோப்பா மாரி மக்கள் 43.9% யூரலியம் உருசிய மரபுவழித் திருச்சபை, சுதேசிய புறச்சமயம், மரியா வழிபாடு 47.4% 696,357
மொர்தோவியா ஐரோப்பா மோர்துவின் 40.0% யூரலியம் உருசிய மரபுவழித் திருச்சபை 53.4% 834,819
வடக்கு ஒசேத்திய-அலனீயா ஐரோப்பா ஒசேத்தியர் 65.1% ஈரானியர் கிழக்கு மரபுவழி திருச்சபை, சுன்னி இசுலாம் சிறுபான்மை 20.8% 712,877
சகா குடியரசு ஆசியா யாக்குத்துகள் 49.9% துருக்கியம் உருசிய மரபுவழித் திருச்சபை, சாமனியம் 37.8% 958,291
தர்தாரிஸ்தான் ஐரோப்பா தத்தார்கள் 53.2% துருக்கியம் சுன்னி இசுலாம், உருசிய மரபுவழித் திருச்சபை 39.7% 3,786,358
துவா ஆசியா துவான்கள் 82.0% துருக்கியம் திபெத்திய பௌத்தம், சாமனியம், சிறிய உருசிய மரபுவழித் திருச்சபை சிறுபான்மை 16.3% 307,930
உத்மூர்த்தியா ஐரோப்பா உத்மூர்த்துகள் 28.0% யூரலியம் உருசிய மரபுவழித் திருச்சபை 62.2% 1,522,761
குறிப்புகள்:
 1. கபர்தினோ-பல்கரீயா, காராசாய்-செர்கெஸ்ஸியா, தாகெஸ்தான் ஆகியன ஒன்றுக்கு மேற்பட்ட பெயரளவிலான இனத்தைக் கொண்டுள்ளன.
 2. முன்னாள் சோவியத் செச்சினிய-இங்குசு சோசலிசக் குடியரசு இரண்டு பெயரளவிலான இனங்களைக் கொண்டிருந்தன. இது 1992 ஏப்ரலில் செச்சினியா, இங்குசேத்தியா என இரண்டு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டன.
 3. தாகெசுத்தானின் 10 பெரும் சுதேசிய இனக்குழுக்கள்: ஆகுல்கள், ஆவார்கள், தார்கின்கள், கூமிக்குகள், லாக்சுகள், லெசுகின்கள், நோகாய்கள், ரூத்துல்கள், தபசரான்கள், த்சாகூர்சுகள்
 4. இந்த அட்டவணையில் அனைத்து மக்கள்தொகைகளும் மூன்று பொருள்-இலக்கங்களைக் கொண்டுள்ளன.
 5. பல்க்கர் மக்கள், கரச்சாய், கூமிக்குகள், அசர்பைஜான்கள், நோகாய்கள் ஆகியோர் துர்க்கியர்கள் ஆவர். ஆகுல்கள், ஆவார்கள், செர்க்கெசுக்கள், தார்கின்கள், லாக்சுகள், லெசுகின்கள், ரூத்துல்கள், தபசரான்கள், சாக்கூர்கள் ஆகியோர் காக்கசியர்கள் ஆவர்.
 6. கபர்துக்களும், பெரும்பான்மை பால்க்கர்களும் முசுலிம்கள் ஆவர். சில பால்க்கர்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.
 7. கிரிமியா குடியரசில் பெயரளவு இனக்குழுக்கள் கிடையாது. உருசிய மொழியைத் தவிர்த்து அங்கு கிரிமியத் தத்தார், உக்குரேனிய மொழி ஆகியன அதிகாரபூர்வ மொழிகள்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Russian Constitution Chapter 3". 24 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Regional presidents to choose new job titles". RT International. 7 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. Remington, Thomas F. (2010) Politics in Russia, 6th edition. Boston: Pearson Education. pp. 82
 4. Kremlin.ru. Договор между Российской Федерацией и Республикой Крым о принятии в Российскую Федерацию Республики Крым и образовании в составе Российской Федерации новых субъектов (Treaty Between the Russian Federation and the Republic of Crimea on Ascension to the Russian Federation of the Republic of Crimea and on Establishment of New Subjects Within the Russian Federation) (உருசிய மொழியில்)
 5. Steve Gutterman and Pavel Polityuk (18 March 2014). "Putin signs Crimea treaty as Ukraine serviceman dies in attack". Reuters. 24 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 6. U.N. General Assembly declares Crimea secession vote invalid பரணிடப்பட்டது 2014-03-30 at the வந்தவழி இயந்திரம். Reuters. 27 March 2014.
 7. "PACE: News". Assembly.coe.int. 2015-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-18 அன்று பார்க்கப்பட்டது.