துவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவா குடியரசு
Tyva Republic
குடியரசு
Республика Тыва
Other transcription(s)
 • TyvanТыва Республика
துவா குடியரசு Tyva Republic-இன் கொடி
கொடி
துவா குடியரசு Tyva Republic-இன் சின்னம்
சின்னம்
பண்: Men – Tyva Men
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்சைபீரிய கூட்டமைப்பு மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதிகிழக்கு சைபீரியா[2]
தலை நகரம்கைசல்
அரசு
 • நிர்வாகம்Great Khural[3]
 • Chairman of the Government[5]ஷோல்பன் கரா-ஓல்[4]
பரப்பளவு[6]
 • மொத்தம்1,70,500 km2 (65,800 sq mi)
பரப்பளவு தரவரிசை21st
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்3,07,930
 • Estimate (2018)[8]3,21,722 (+4.5%)
 • தரவரிசை77th
 • அடர்த்தி1.8/km2 (4.7/sq mi)
 • நகர்ப்புறம்53.1%
 • நாட்டுப்புறம்46.9%
நேர வலயம்[9] (ஒசநே+7)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-TY
அனுமதி இலக்கத்தகடு17
அலுவல் மொழிகள்உருசியம்;[10] துவன் மொழி[11]
இணையதளம்http://gov.tuva.ru/

துவா குடியரசு (Tyva Republic ரஷியன் : Республика Тыва, Tr. Respublika Tyva; [rʲɪspublʲɪkə tɨva] ; துவன் : Тыва Республика, Tyva Respublika, [təvɑ rispublikɑ] ), Tyva அல்லது துவா ( Tuvan : Тыва, ரஷியன் : Тува), என்பது ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உட் குடியரசு ( ஒரு அரசாக ரஷியன் கூட்டமைப்பு அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டது,)[12] இது நிலவியல் அமைப்பின்படி மத்திய ஆசியாவிலும், தெற்கு, சைபீரியா பகுதியிலும் அமைந்துள்ளது. இது தன் எல்லைகளை இரஷ்ய குடியரசின் அல்த்தாய் குடியரசு , ஹக்காசியா குடியரசு , க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசம் , இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து , மற்றும் புரியாத்தியா குடியரசு ஆகியவற்றுடனும், தெற்குப் பகுதியில் மங்கோலியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் தலைநகரம் கைஸ்வல் ( Kyzyl ) ஆகும். மக்கள் தொகை: 307,930 ( 2010 கணக்கெடுப்பின்படி ).[7] 1921 முதல் 1944 வரை டன்னு துவா என்ற பெயரில், ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடாக இருந்தது. அதிகாரப்பூர்வமாக துவா மக்கள் குடியரசு என்ற பெயர். இதை இதன் அண்டை நாடுகளான சோவியத் ஒன்றியம் மற்றும் மங்கோலியா ஆகியன மட்டும் அங்கீகரித்து இருந்தன .[13] இதன் புவியியலில் காடுகள், மலைகள், புல்வெளிகள் பெரிய அளவில் இடம்பெற்றவை. பெரும்பாலான மக்கள் துவான் இனத்தவர் என்றாலும், இரஷ்ய மொழி பரவலாக பேசப்படுகிறது. துவாவின் ஆட்சியாளர் கிரேட் குரல் எனப்படுவார். இவரின் ஆட்சிக்காலம் நான்கு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய தலைவர் ஆவார் சோல்பான் காரா-ஊல் ஆவார்.

நிலவியல்[தொகு]

இக் குடியரசு தெற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கைசைல்( Kyzyl ) ஆகும் இக்குடியரசு புவியியல்ரீதியாக மத்திய ஆசியாவில் உள்ளது. குடியரசின் கிழக்கு பகுதி உயர்ந்தும் காடுகளை கொண்டும், மேற்கு பகுதி உலர்த்த தாழ்நிலமாகவும் உள்ளது.

  • எல்லைகள்:
  • இரஷ்ய கூட்டமைப்பின் உள்பகுதிகளான: காஹக்காசியா குடியரசு, க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசம், இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து, புரியாத்தியா குடியரசு, அல்த்தாய் குடியரசு ஆகியவாகும்.
  • சர்வதேச எல்லையான மங்கோலியா எல்லை (எல்லை கோடு நீளம்: 1.305 கிலோமீட்டர் (811 மைல்)
  • அதி உயரமான இடம்: மோங்குன்-டைகா மலை உயரம் 3.970 மீட்டர் (13,020 அடி)
  • குடியரசின் அதிகபட்ச நீளம் வடக்கு → தெற்கு : 450 கிலோமீட்டர் (280 மைல்)
  • அதிகபட்ச நீளம் கிழக்கு → மேற்கு: 700 கிலோமீட்டர் (430 மைல்)
  • பரப்பளவு: 170.427 சதுர கிலோமீட்டர் (65,802 சதுர மைல்)

மலைகள்[தொகு]

குடியரசின் பகுதிகள் மலைகளை அடிப்படையாகக் கொண்டவை 600 மீட்டர் உயரம் கொண்ட, சயான் மற்றும் டன்னு-ஓலா முதன்மையானவை. இக்குடியரசின் பரப்பளவில் மலைகள் மற்றும் மலைசார்ந்த பகுதிகள் 80% கொண்டுள்ளது. மொன்குன்-டைகா மலை 'வெள்ளி மலை' (3,970 மீ) என அழைக்கப்படுகிறது. குடியரசின் அதிக உயரமான மலையான இது அதன் பனிப்பாறைகளின் சிறப்பில் இருந்து இப் பெயர் பெற்றது.

இயற்கை வளங்கள்[தொகு]

முதன்மையான இயற்கை கனிம வளங்கள் பின்வருமாறு நிலக்கரி , இரும்பு தாது, தங்கம், கோபால்ட். கல்நார் போன்றவை முன்னர் முதன்மையாக இருந்தது. இங்கு ஓநாய்கள் மற்றும் கரடிகள், பனிச் சிறுத்தை, தரை அணில், பறக்கும் நரி எனும் விலங்கு, கழுகுகள், மீன்கள் போனறவை மிகுதியாகக் காணப்படும் விலங்குகள் ஆகும்.

காலநிலை[தொகு]

  • சராசரி சனவரி வெப்பநிலை: -32 டிகிரி செல்சியஸ் (-26 °F),
  • சராசரி ஜூலை வெப்பநிலை: +18 டிகிரி செல்சியஸ் (64 °F),
  • சராசரி ஆண்டு மழையளவு : 150 மில்லி மீட்டர் (5.9) (சமவெளியில்) 1,000 மில்லி மீட்டர் (39 அங்குலம்) ( மலைப்பகுதிகளில்)
  • பெரும்பாலான பகுதிகள் நிரந்தரமாக பனிமூடியே இருக்கும்.

மதம்[தொகு]

குடியரசின் டைவா மக்கள் மத்தியில் இரண்டு மதங்கள் பரவலாக செல்வாக்கு பெற்று உள்ளன அவை திபெத்திய பௌத்தம் மற்றும் ஷமானிஸம் ஆகும் . திபெத்திய புத்தமதத்தின் இன்றைய ஆன்மீக தலைவர் தென்சின் க்யாட்சோ என்பவர் இவர் பதினான்காம் தலாய் லாமாவாக செப்டம்பர் 1992 முதல் இருந்துவருகிறார்.பதினான்காம் தலாய் லாமா மூன்று நாட்கள் டைவா வந்து தங்கி இருந்தார்.[14][15] செப்டம்பர் 20 ஆம் தேதி, துவாவின் புதிய மஞ்சள்-நீல-வெள்ளைக் கொடியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். அதிகாரப்பூர்வமாக மூன்று நாட்களுக்கு தத்தெடுக்கப்பட்டிருந்தார்.[16] 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், திபெத்திய புத்த மதம் இங்கு புகழ் பெற்றது.பல புதிய மற்றும் கோயில்கள் கட்டப்பட்டன. புதியதாக பலர் துறவு மேற்கொண்டு மதப் பயிற்சி பெற்றனர். மத நடைமுறைகள் சோவியத் காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது செழித்தோங்கி வருகிறது.[17][18] 2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி[19][20] குடியரசின் மக்கள் தொகையில் 61.8% புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர், 8% டென்கிரிசம் அல்லது தைவான் ஷமானிஸம் , 1.5% உருசிய மரபுவழித் திருச்சபை, அல்லது மற்ற வடிவங்களில் கிறித்துவம் , 1% பிராட்டஸ்டண்ட் . கூடுதலாக, 7.7% பேர் கணக்கெடுப்பின்போது மதத்தைக் குறிப்பிடாதவர்கள். மக்கள் தொகையில் 8% மதம் இல்லை என்பவர்களும், 12% நாத்திகர்கள் ஆவர்.[19]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Constitution, Article 10.2
  4. Official website of the Government of the Tyva Republic. Sholban Valeryevich Kara-ool பரணிடப்பட்டது 2011-03-09 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  5. Constitution, Article 10.3
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Constitution, Article 5.1
  12. "Chapter 1. The Fundamentals of the Constitutional System | The Constitution of the Russian Federation". Constitution.ru.
  13. http://www.jstor.org/discover/10.2307/152275?sid=21105809346003&uid=4&uid=2
  14. "Dalai Lama". Avantart.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  15. "BBC Report on the Dalai Lama in Tuva". Fotuva.org. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. The World Encyclopedia of Flags, ISBN 1-84038-415-8.
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-08-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-01.
  18. "Tyvans keen to protect traditions". BBC News. September 19, 2009. http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8254398.stm. பார்த்த நாள்: November 16, 2012. 
  19. 19.0 19.1 Arena – Atlas of Religions and Nationalities in Russia, Sreda
  20. "2012 Survey Maps", Ogonek, RU: Kommersant, no. 34, p. 5243, August 27, 2012, archived from the original on மார்ச் 20, 2017, பார்க்கப்பட்ட நாள் September 24, 2012 {{citation}}: Check date values in: |archive-date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=துவா&oldid=3792098" இலிருந்து மீள்விக்கப்பட்டது