யூதர்களின் தன்னாட்சி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதர்களின் தன்னாட்சி மாகாணம்
Jewish Autonomous Oblast
சுயாட்சி மாகாணம்
Еврейская автономная область
யூதர்களின் தன்னாட்சி மாகாணம் Jewish Autonomous Oblast-இன் கொடி
கொடி
யூதர்களின் தன்னாட்சி மாகாணம் Jewish Autonomous Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: இல்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தூரக்கிழக்கு[1]
பொருளாதாரப் பகுதிதூரக்கிழக்கு[2]
நிர்வாக மையம்பைரோபிட்ஜன்[4]
அரசு
 • நிர்வாகம்சட்ட மன்றம்[5]
 • ஆளுநர்[7]அலெக்சாந்தர் லிவின்டால்[6]
பரப்பளவு
 • மொத்தம்36,000 km2 (14,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை61வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்1,76,558
 • மதிப்பீடு 
(2018)[10]
1,62,014 (−8.2%)
 • தரவரிசை80வது
 • அடர்த்தி4.9/km2 (13/sq mi)
 • நகர்ப்புறம்
67.6%
 • நாட்டுப்புறம்
32.4%
நேர வலயம்ஒசநே+10 ([11])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-YEV
அனுமதி இலக்கத்தகடு79
OKTMO ஐடி99000000
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.eao.ru

யூதர்களின் தன்னாட்சி மாகாணம் (Jewish Autonomous Oblast, உருசியம்: Евре́йская автоно́мная о́бласть) என்பது உருசியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டாட்சி மாகாணம் ஆகும். இது உருசிய தூரக்கிழக்கெல்லையில் உருசியாவின் கபதோஸ்க் கிராய் மற்றும் அமூர் மாகாணம் மற்றும் சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணம் போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது "யேவ்ரே", "பைரோபிடிஜான்"[14] என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் பைரோபிடிஜான் ஆகும். 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 176,558 ஆகும்.[9] இது உருசிய மக்கள் தொகையில் 0.1% ஆகும். யூதர்களின் இந்த மாகாணம் மட்டுமே உருசியக் கூட்டமைப்பில் தன்னாட்சி மாகாணமாக உள்ளது.[15] உலகில் இசுரேலுக்கு வெளியே உள்ள ஒரு அதிகாரப்பூர்வ யூத தன்னாட்சி மாகாணம் இதுவாகும்.

சோவியத் ஆட்சியாளர்களால் ஸ்டாலின் காலத்தில் அதன் தேசியக் கொள்கையால் இந்த யூத மாகாணம் 1934 இல் நிறுவப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தில் உள்ள யூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது.[16] 1939 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தில், 17,695 யூத மதத்தினர் வாழ்ந்து வந்தனர் (மாகாண மொத்த மக்கள் தொகையில் 16%). யூதர்களின் மக்கள் தொகை 1948 இல் ஏறக்குறைய 30,000 ஆக உயர்ந்து, மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் காற்பகுதியாக அதிகரித்தனர்.[17]

1953 இல் ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பிறகு மாகாணத்தில் யூதமக்களின் எண்ணிக்கை சரிவடையத் துவங்கியது. 1959 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் யூத மக்களின் தொகை 14,259 என 50% வரை குறைந்தது.[18] 2002 ஆண்டுவாக்கில் யூதர்களின் எண்ணிக்கை 2,327 (மாகாண மக்கள் தொகையில் 1.2%) ஆகவும், உருசிய மரபினரின் எண்ணிக்கை 90% ஆகவும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின் ஜெருசலம் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை, யூதமாகாணத்தில் அக்காலகட்டத்தில் ஏறக்குறை 4,000 யூதர்கள் வசிப்பதாகக் குறிப்பிட்டது.[19] மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் மோர்டிசாய் சீனியர் இருந்த 2002 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் யூத மாகாணத்தில் யூத மதமும், கலாச்சாரமும் மறுமலர்ச்சியடைந்தன.[19] என்றாலும், பெடரேசன் ஆப் ஜுவிஷ் கம்யூனிடி ஆப் சிஐஎஸ்சின் இதழ், தற்போது யூத மாகாணத்தில் யூதர்கள் மிக்குறைவான அளவே வாழ்கின்றனர் என்றும், குறிப்பாக பைரோபிடிஜன் நகரம் மற்றும் அருகிலுள்ள வால்ட்கியாம் கிராமத்திலும் ஓரளவு யூதர்கள் வாழ்வதாகவும் குறிப்பிட்டது.[20] 2010 ஆம் ஆண்டைய உருசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்த மாகாணத்தில் வெறும் 1,628 யூதர்கள் மட்டுமே (1%) வாழ்வதாகவும் உருசிய மரபினர் 92.7% பேர் வாழ்வதாகவும் தெரியவந்தது.[21] மேலும் ரஷிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு வெளியிட்ட தகவலின் படி, 97 பேர் இத்திய மொழி பேசினார், 312 பேர் எபிரேயம் பேசினார், மேலும் 54 பேர் குறிப்பிடப்படாத யூத மொழிகளைப் பேசினர்.[22]

நிலவியல்[தொகு]

தட்பவெட்பம்[தொகு]

இந்தப் பிரதேசத்தில் வீசும் கிழக்கு ஆசியப் பருவக்காற்றால்-இதன் தட்பவெப்பநிலை, சூடான, ஈரப்பதமான, கோடைக்காலத்தைக் கொண்டுள்ளது; குளிர் காலத்தில் குளிர்ந்த, உலர்ந்த காலநிலை நிலவுகிறது.

வரலாறு[தொகு]

இராணுவ குடியேற்றங்கள் மற்றும் சைபீரிய தொடர்வண்டி பாதை அமைப்பும்[தொகு]

அமுர் வடகரையும், இன்றைய யூதர்களின் தன்னாட்சி பிரதேசம் ஆகியவை உட்பட்ட பகுதிகள் 1858–1860 கால பெய்ஜிங் ஒப்பந்தங்களுக்கு பிறகு உருசியப் பேரரசுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

1858 திசம்பரில் உருசிய அரசாங்கம் உருசியாவின் தென்கிழக்கு பகுதிகளான உஸ்சுரி ஆறுகள் தொடர்புடைய சைபீரியா, அமூர் ஆகிய பகுதிகளைப் பாதுகாக்க அமுர் கோசாக்குகள் உருவாக்க அங்கிகாரம் வழங்கியது. இந்த இராணுவ குடியேற்றங்கள் டிரானஸ்பேய்கலா பகுதியில் இருந்து. 1858–82, காலகட்டத்தில் அறுபத்து மூன்று குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1858 ராட்டி குடியிருப்புகள், மற்றும் 1860 காலகட்டத்தின் குடியிருப்புகள் அடங்கும். நிலவியலாளர்களும், இயற்கை தாவரவியலாளர்களின் உதவியுடன் புதிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களின் சாதனையின் ஒரு பகுதியாக அமுர் நில வரைபடம் தயாரிக்கப்பட்டது.

யூதர்களின் தன்னாட்சி மாகாணமும் அதன் அதன் தலைநகரும் குறிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ் சைபீரியன் இருப்புப் பாதை கட்டுமானம் 1898 இல் துவக்கப்பட்டது. இப்பாதை சிட்டா மற்றும் விலாடிவொஸ்டொக் ஆகியவற்றை இணைக்கும்வகையில் இரு முணைகளிளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இடையில் வந்து இணையுமாறு முடிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் இப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாகவும், குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அடித்தளம் ஏற்படுத்தப்பட்டது. தொடர் வண்டிப்பாதை அமைக்கும்பணி 1916 அக்டோபரில் நிறைவுற்று, காபரோஸ்க்கை கடக்கும் 2,590 மீட்டர் நீளமுள்ள கபரோவிஸ்க் பாலக் கட்டுமானத்துடன் நிறைவடைந்த்து. புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் உள்ளூர் விவசாயிகளாவர். வேறு தொழில்கள் என்றால் மர அறுப்பு ஆலை, சுதாரா ஆற்றுப் பகுதியில் தங்கம் நோண்டுதல், மற்றும் சிறிய தொடர்வண்டி பணிமனைகள் போன்றவை ஆகும். உருசிய உள்நாட்டுப் போரின்போது, இப்பகுதியில் கொடூரமான போர்கள் நடந்தன. 1926 மற்றும் 1927 ஆண்டுகளில் நிலமை சீரானது என்றாலும் பொருளாதார வளர்ச்சி குன்றியே காணப்பட்டது.

யூதர்களின் குடியேற்றமும் வளர்ச்சியும்[தொகு]

முதலில் உக்ரைன் மற்றும் கிரிமியா பகுதியில் யூதர்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனால் உள்ளூரில் எழுந்த எதிர்ப்பினால், அரசுக் குழுக்கள் குடியேற்றத்துக்காக வேறு இடங்களைப் பரிசீலித்து, இறுதியில் பைரோபிட்ஜன் தேர்வுசெய்யப்பட்டது.[23] இரண்டு யூத மாவட்டங்கள் கிரிமியாவிலும், மூன்று மாவட்டங்கள் தெற்கு உக்ரைனிலும் உருவாக்கப்பட்டன.[24]

1928 மார்ச் 28 இல் சோவியத் ஒன்றியத்தின் பொது நிர்வாகக் குழுவில் "யூத தொழிலாளர்களுக்கு தூரக்கிழக்கில் உள்ள அமூர் நதியருகில் காலி இடத்தில் குடியிருப்புகளை உருவாக்கப்படும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தினினால் எல்லைப் பகுதியில் யூத பிராந்திய நிர்வாக அலகு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.[25][26] மேலும் எதிர்காலத்தில் ஜாவோவை (சோவியத் ஒன்றியத்தில் யூதர்கள் வசிக்கும் ஒரு இடம்) அடிப்படையாகக் கொண்டு யூத குடியரசு அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.[27]

1930 ஆகத்து 30 இல் சோவியத் ஒன்றியத்தின் பொதுக் குழுவில் இந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. மாநில திட்டக் குழுவால் பைரோபிட்ஜன் தேசிய வட்டாரத்தை தனி பொருளாதார அலகாக கருதப்பட்டது. 1932 ஆண்டு முதல் இப்பகுதியின் வளர்ச்சி குறித்து திட்டமிடப்பட்டது.[26] வட அமெரிக்க யூத கம்யூனிச அமைப்பால் சோவியத் ஒன்றிய யூத குடியிருப்பில் வெற்றிகரமாக ஜார்ஜ் கோவல் குடும்பத்தினர் போன்றோரைக் கொண்ட ஒரு யூதக் குடியிருப்பு 1932 இல் அமைக்கப்பட்டது.[28] இதில் சோவியத் ஒன்றியத்தைச் சேராத யூதர்கள் 1,200 பேர் பைரோபிட்ஜன் நகரில் குடியேற்றப்பட்டனர்.[29]


யூதர்களின் தன்னாட்சி மாகாணத்தில் மதங்கள் (2012)[30][31]

  பொதுவான கிருத்துவர் (9%)
  மத ஈடுபாடு அற்றவர்கள் (35%)
  யூதம் (0.2%)
  பிறர் (5.2%)

1934 மே 7, அன்று உருசிய கூட்டமைப்பின் பொது நிர்வாக குழு தீர்மானத்தை ஏற்றதைத் தொடர்ந்து, யூத தன்னாட்சி கபரோவ்ஸ்க் பிரதேசம் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, யூத தன்னாட்சிப் (ஜாடி) உருசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.[26]

ஜோசப் ஸ்டாலினின் தேசியக் கொள்கையின்படி, ஒவ்வொரு தேசிய இனக்குழுவினருக்கும் அவர்களது கலாச்சாரத்தை பாதுகாக்க ஒரு தனிப்பிரதேசத்தைப் பெறும்வகையில் பணிகள் இருந்தன. இது சோவியத்துக்கு நிலவிய இரண்டு அச்சுறுத்தல்களுக்கு பதிலாக அமையும் வகையிலானது ஆகும்

 1. யூதம், நாத்திகமே உத்தியோக பூர்வமான கொள்கை
 2. சியோனிசம், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என தனி நாடுவேண்டும் என வாதிடும் தேசியவாத்த்துக்கு எதிர்வினை

சோவியத்துக்கள் ஒரு பாட்டாளி வர்க்க யூத கலாச்சாரத்தை உருவாக்க முடியும், அங்கு ஒரு புதிய "சோவியத் சீயோன்", அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. எபிரேயம் தேசிய தேசிய மொழியாகவும் அந்த மொழி மற்றும் இலக்கியம் மற்றும் கலை கலாச்சாரம் முதன்மை வெளிப்பாடு ஆகியன சமய முக்கியத்துவத்துக்கு பதிலாக அமையும் என கருதப்பட்டது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மக்கள் தொகை:. 176,558 (2010 கணக்கெடுப்பு) 190,915 (2002 கணக்கெடுப்பு); 215,937 (1989 கணக்கெடுப்பு)

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாகாணத்தில் 160.185 உருசிய மரபினத்தவர் (92.7%) என பெரிய குழுவாக உள்ளனர், 4.871 பேர் உக்ரைனியர்கள் (2.8%), மற்றும் 1,628 பேர் யூத இனத்தவர் (1%) [9] 3.832 பேர் நிர்வாக தரவுத்தளங்களில் இனம் குறித்து அறிவிக்கவில்லை.[32]

2012 முக்கிய புள்ளி விவரங்கள்
 • பிறப்பு: 2 445 (1000 ஒன்றுக்கு 14.0)
 • இறப்பு: 2 636 (1000 ஒன்றுக்கு 15.1) [57]

மொத்த கருத்தரிப்பு விகிதம்:[33]
2009 – 1.67 | 2010 – 1.67 | 2011 – 1.79 | 2012 – 1.84 | 2013 – 1.86 | 2014 – 1.95 | 2015 – 2.02

சமயம்[தொகு]

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் படி[30] மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 22.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபைக் கிறித்தவர்களாகவும்,, 6% பேர் கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்களாகவோ அல்லது வேறு திருச்சபையில் உறுப்பினராகவோ உள்ளனர். 9% பேர் பொதுவான கிறித்தவர்களாக உள்ளனர். யூதம் 0.2% மக்களின் சமயமாக உள்ளது. இது தவிர 35% மத நம்பிக்கையற்றவர்கள், 22% பேர் நாத்திகர், 5.2% தங்கள் சமயத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[30]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
 2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
 3. While Article 7 of the Charter of the Jewish Autonomous Oblast states that the autonomous oblast has its own anthem, the entries submitted for the 2011–2012 anthem creation contest were of such a low quality that no anthem had ultimately been adopted.
 4. Charter of the Jewish Autonomous Oblast, Article 5
 5. Charter of the Jewish Autonomous Oblast, Article 15
 6. Official website of the Jewish Autonomous Oblast. Alexander Borisovich Levintal பரணிடப்பட்டது 2021-04-17 at the வந்தவழி இயந்திரம், Governor of the Jewish Autonomous Oblast (உருசிய மொழியில்)
 7. Charter of the Jewish Autonomous Oblast, Article 22
 8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
 9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
 11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
 12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
 13. Charter of the Jewish Autonomous Oblast, Article 4
 14. http://www.yivoencyclopedia.org/article.aspx/Birobidzhan
 15. Constitution of the Russian Federation, Article 65
 16. "The National and State Structure". USSR '86 Yearbook. Novosti Press Agency. 1986.
 17. James Brook, Birobidzhan Journal;A Promised Land in Siberia?
 18. "Всесоюзная перепись населения 1959 года. Национальный состав населения по регионам России". Демоскоп. பார்க்கப்பட்ட நாள் 2008-11-28.
 19. 19.0 19.1 Yiddish returns to Birobidzhan
 20. журнал «Лехаим». Борис Котлерман. Биробиджан, или ЕврейскаЯ автономнаЯ область?
 21. "Информационные материалы об окончательных итогах Всероссийской переписи населения 2010 года". Archived from the original on 2020-05-01. பார்க்கப்பட்ட நாள் 2013-04-19.
 22. "Статистический бюллетень "Национальный состав и владение языками, гражданство населения Еврейской автономной области"" (in ரஷியன்). Russian Federal State Statistics Service. 30 October 2013. In document "5. ВЛАДЕНИЕ ЯЗЫКАМИ НАСЕЛЕНИЕМ ОБЛАСТИ.pdf". Archived from the original (RAR, PDF) on 2 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2016. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)
 23. Birobidzhan – the Almost Soviet Jewish Autonomous Region, February 2004, retrieved 8 September 2015.
 24. Yaacov Ro'i (2004). Jews and Jewish Life in Russia and the Soviet Union. Frank Cass&Co, Ltd. p. 193.
 25. Maroney, Eric (2010). The Other Zions : the Lost Histories of Jewish Nations (2009 ed.). Lanham: Rowman & Littlefield Publishers. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-0045-6.
 26. 26.0 26.1 26.2 Establishment and Development of the JAR பரணிடப்பட்டது 2007-12-20 at the வந்தவழி இயந்திரம் Jewish Autonomous Region official government website. Accessed 2007-08-30.
 27. А.
 28. Michael Walsh George Koval: Atomic Spy Unmasked பரணிடப்பட்டது 2013-04-11 at Archive-It Smithsonian (magazine) May 2009
 29. Arthur Rosen, [www./75mag/birobidzhan/birobidzhan.htm], February 2004
 30. 30.0 30.1 30.2 Arena – Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
 31. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
 32. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-19.
 33. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2016-11-01.