உருசிய உள்நாட்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசிய உள்நாட்டுப் போர்
முதல் உலகப் போர் மற்றும் 1917–23 காலகட்ட புரட்சிகள் பகுதி

போரின்போது செஞ்சேனை
நாள் 7 நவம்பர் (25 அக்டோபர்) 1917 – அக்டோபர் 1922[1]
இடம் முன்னாள் உருசியப் பேரரசு, மங்கோலியா, துவா, பெர்சியா
நிலப்பகுதி
மாற்றங்கள்
சோவியத் ஒன்றியத்தின் நிறுவுகை; பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா மற்றும் போலந்து நாடுகளின் விடுதலை[2]
பிரிவினர்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசு மற்றும் பிற சோவியத் குடியரசுகள்

புரட்சி உக்ரானிய எழுச்சிப் படை (1918–20)
இடதுசாரி சோசலிச புரட்சியாளர்கள் (மார்ச்சு 1918 வரை)
பசும் படையினர் (1919 வரை)

உருசியா வெள்ளை இயக்கம்
உள்ளிட்டவை
 • தற்காலிக உருசிய அரசு
 • உருசியா தென் உருசியாவின் படைத்துறை
 • உருசியா சைபீரிய படைத்துறை
 • உருசியா கோமுச்சின் மக்கள் படை
 • உருசியா அரசியலமைப்பு மன்றத்தின் உறுப்பினர்கள்
 • சைபீரியாவின் தன்னாட்சி அரசு
 • டான் கொசாக்சு
 • கூபன் கொசாக்சு
 • அலாஷ் தன்னாட்சி

புதியதாக உருவான குடியரசுகள்

உள்ளிட்டவை

கூட்டணி இடையீடு

செருமானிய ஆதரவு படைகள்


தளபதிகள், தலைவர்கள்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு விளாடிமிர் லெனின்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு லியோன் திரொட்ஸ்கி
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு மிக்கைல் துக்காசெவ்சுகி

நெசுடர் மக்னோ

உருசியா அலெக்சாண்டர் கொல்சக்  
உருசியா லாவ்ர் கோர்னிலோவ்  
உருசியா அன்டன் டெனிகன்
உருசியா பியோடர் ராங்கிள்

உருசியா நிக்கோலாய் யுடெனிச்

பலம்
3,000,000[3] 2,400,000 வெள்ளை உருசியர்கள், 255,000 கூட்டணி குறுக்கீட்டாளர்கள்.
இழப்புகள்
1,212,824 உயிரிழப்பு

தரவுகள் முழுமையாக இல்லை.[3]

குறைந்தது 1,500,000

உருசிய உள்நாட்டுப் போர் (Russian Civil War) எனப்படுவது நவம்பர் 7 (அக்டோபர் 25) 1917 முதல் அக்டோபர் 1922 வரை[1] முன்னாள் உருசியப் பேரரசில் போல்சேவிக் செஞ்சேனைக்கும் வெண்சேனைக்கும் இடையே நிகழ்ந்த பலகட்சிப் போரை குறிப்பதாகும். பல வெளிநாட்டு படைகள், குறிப்பாக கூட்டணி படைகளும் செருமனிசார் படைகளும் செஞ்சேனையுடன் போரிட்டன.[4] செஞ்சேனை வெண்சேனையை உக்ரைனிலும் அலெக்சாண்டர் கோல்செக் தலைமையில் அமைந்த அணியை சைபீரியாவிலும் 1919இல் வென்றது. மிஞ்சிய வெண்சேனையை பியோடர் நிகோலயெவிச் ராங்கெல் வழிநடத்தினார்; 1920 குளிர்காலத்தில் இந்த அணியையும் கிரீமியாவில் செஞ்சேனை வென்றது. உருசியப் பேரரசு உடைந்தநிலையில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகின; இவையும் இப்போரில் பங்கேற்றன.[2] இவற்றில் பல – பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்துஇறைமையுள்ள நாடுகளாக நிறுவப்பட்டன. உருசியப் பேரரசின் மிஞ்சியப் பகுதிகள் சோவியத் ஒன்றியமாக ஒன்றிணைக்கப்பட்டன.

பின்னணி[தொகு]

1905 புரட்சி[தொகு]

1905 ஆம் ஆண்டில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஜார் மன்னனின் அரண்மனைக்கு ஒரு மனு கொடுக்கச் சென்றபோது, அவர்கள் கோசாக் குதிரைவீரர்களால் சுடப்பட்டு, புரட்சி வெடித்தது. அது கடைசியில் நசுக்கப்பட்டு ஜாரின் சர்வாதிகாரம் அதிகமாயிற்று. 1905 ஆம் ஆண்டில் உருசிய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் தலைமையிலான முடியாட்சி அரசான ரஷ்யப் பேரரசுக்கு எதிராக உருசியா முழுவதும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சி மற்றும் மக்கள் கிளர்ச்சிகளைக் குறிக்கும். ரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அமைதிப் பேரணி பெரும்புரட்சியாக வெடித்தது. இருந்தபோதிலும் ரஷ்ய பேரரசு அரசாங்க நடவடிக்கைகளால் இந்த புரட்சி நசுக்கப்பட்டதுடன் ஜார் மன்னரின் சர்வாதிகாரம் அதிகமாக வழிவகுத்தது. டூமாவின் அதிகாரங்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. 1832 ஆம் ஆண்டு அடிப்படை விதிகள் பெரும்பகுதி திருத்தம் செய்யப்பட்டு அரசியல் சாசனம் 1906 என்னும் பெயரில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பெப்ரவரி புரட்சி, 1917[தொகு]

ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் தமது சார் மணி மகுடத்தைத் துறந்தபிறகு 1917 பெப்ரவரிப் புரட்சியின்போது உருசிய இடைக்கால அரசு நிறுவப்பட்டது.

1917, பெப்ரவரியில், முதல் உலகப் போரின் ஆள் அழிவுகளாலும், தோல்விகளாலும், முடக்கங்களினாலும் புரட்சி வெடித்தது. இதனால் சார் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. இப்புரட்சி தன்னிச்சையான மக்கள் புரட்சியாகும். இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. நடந்த குழப்பத்தில், டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். ஸாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டதால் கடைசி ஸார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்டபோதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரினர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது. இந்தக் குழப்பமான நிலையில் ரஷ்யா சண்டையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர்.

சோவியத்துகளின் தலைவராக முதலில் கெரன்சுகி பதவியேற்றார். அவர் போல்சுவிக்கு கட்சித் தலைவர்களை கைது செய்ய முயன்றதால் லெனின் தலைமையில் போல்சுவிக்குகள் போராட்டம் செய்து உருசிய ஆட்சியைக் கைப்பற்றினர்.

செஞ்சேனை உருவாக்கம்[தொகு]

அக்டோபர் புரட்சியை அடுத்து பழைய உருசிய அரச படைத்துறை செயலிழக்கப்பட்டது. தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்ட போல்செவிக் சிவப்புக் காவலர் படையே முதன்மை இராணுவப் படையாக இருந்தது. இதற்கு துணையாக அரசு பாதுகாப்புப் பிரிவான ஆயுதமேந்திய செக்கா இராணுவப்பிரிவு இருந்தது. சனவரியில் போரில் குறிப்பிடத்தக்க இழப்புகளுக்குப் பிறகு போர்த் தளபதி லியோன் டிராவ்சுகி தலைமையில் சிவப்புப் பாதுகாவலர் படை தொழில்சிறப்பு மிக்க போர்ப்படையாக பாட்டாளி மற்றும் விவசாயிகளது செஞ்சேனை உருவாக்கப்பட்டது.

போல்செவிக்குகளுக்கு எதிரான இயக்கங்கள்[தொகு]

உள்நாட்டுப் போர்[தொகு]

அக்டோபர் 1917 புரட்சி[தொகு]

பெப்ரவரி புரட்சியினால் கட்டுடைந்த சமூக சக்திகள், புதிய இடைக்கால அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டார்கள். இந்த வெறுப்புகளை பயன்படுத்தி, உருசிய சமூக ஜனநாயக கட்சியில் பெரும்பான்மையினர், (உருசிய மொழியில் பெரும்பான்மையினர் போல்செவிக்குகள் எனப்பட்டனர்) விளாடிமீர் லெனின் தலைமையில் 1917 அக்டோபரில் ஆட்சியை திடீரென்று கைப்பற்றினர். போல்செவிக் கட்சி ஆயுதமேந்திய பாட்டாளிகள் மற்றும் படைத்துறையிலிருந்து வெளியேறிய இராணுவத்தினரைக் கொண்டு அமைக்கப்பெற்ற செஞ்சேனை மூலம் பெட்ரோகிராட் எனப்படும் செயின்ட் பீட்டர்சுபெர்கை கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து பிற நகரங்களையும் சிற்றூர்களையும் கைப்பற்றறினர். இது அக்டோபர் புரட்சி என்றழைக்கப்படுகிறது. சனவரி 1918இல் போல்செவிக்குகள் உருசிய அரசியலமைப்பு மன்றத்தைக் கலைத்தனர். தொழிலாளர் சங்கங்களை (சோவியத்=தொழிலாளர்) புதிய அரசு சட்டவாக்க மன்றங்களாக அறிவித்தனர்.

இரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1937)[தொகு]

1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரன்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நீருவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.

மூலம்[தொகு]

 • முனைவர் A. சுவாமிநாதன். நாகரிக வரலாறு (கி. பி. 1453 - 1990 வரை). 2003: சுபா பதிப்பகம். பக். 139 - 153. 

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Mawdsley, pp. 3, 230
 2. 2.0 2.1 Bullock, p. 7 "Peripheral regions of the former Russian Empire that had broken away to form new nations had to fight for independence: Finland, Poland, Estonia, Lithuania, Latvia, Belarus, Ukraine, Georgia and Azerbaijan."
 3. 3.0 3.1 G.F. Krivosheev, Soviet Casualties and Combat Losses in the Twentieth Century, pp. 7–38.
 4. Russian Civil War பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online 2012

மேலும் அறிய[தொகு]

 • Vladimir N. Brovkin. Behind the Front Lines of the Civil War: Political Parties and Social Movements in Russia, 1918–1922. Princeton University Press, 1994. ISBN 0-691-03278-5
 • David Bullock. The Russian Civil War 1918–22. Osprey Publishing, 2008. ISBN 978-1-84603-271-4
 • T.N. Dupuy. The Encyclopedia of Military History (many editions) Harper & Row Publishers.
 • Peter Kenez. Civil War in South Russia, 1918: The First Year of the Volunteer Army, Berkeley, University of California Press, 1971.
 • Peter Kenez. Civil War in South Russia, 1919–1920: The Defeat of the Whites, Berkeley, University of California Press, 1977.
 • W. Bruce Lincoln. Red Victory.
 • Evan Mawdsley. The Russian Civil War. New York: Pegasus Books, 2007.
 • George Stewart. The White Armies of Russia: A Chronicle of Counter-Revolution and Allied Intervention.
 • David R. Stone. "The Russian Civil War, 1917–1921," in The Military History of the Soviet Union.
 • Geoffrey Swain. The Origins of the Russian Civil War.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_உள்நாட்டுப்_போர்&oldid=3925895" இலிருந்து மீள்விக்கப்பட்டது