சூலை நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலை நாட்கள்
உருசியப் புரட்சி பகுதி

பெட்ரோகிராடு, 16 சூலை 1917
நாள் 16–20 சூலை 1917
இடம் பெட்ரோகிராடு, உருசிய இடைக்கால அரசு
அரசின் வெற்றி, மறியல்களும் வேலையிறுத்தங்களும் அடக்குமுறையால் தடுக்கப்படுதல், தொழிலாளர்கள், மாலுமிகள் மற்றும் போல்செவிக்குகளின் கைதுகள்.
பிரிவினர்
போல்செவிக் கட்சி
சார்பற்ற தொழிலாளர்கள், மாலுமிகள், படைவீரர்கள்
செங்காவலர்கள்
போல்செவிக் இராணுவ அமைப்பு
உருசியா உருசிய இடைக்கால அரசு
உருசியா சோசலிச புரட்சிகர கட்சி
உருசியா மென்சேவிக்குகள்
உருசியா கருப்பு நூற்றுவர்
தளபதிகள், தலைவர்கள்
விளாடிமிர் லெனின்
லியோன் திரொட்ஸ்கி
பவல் டைபென்கோ
கிரிகோரி சின்னோவீவ்
கலகவாதிகள்
உருசியா அலெக்சாண்டர் கெரென்சுகி
பலம்
500,000 ஆயுதமில்லா போராட்டக்காரர்கள், 4,000–5,000 செங்காவலர் படைவீரர்கள், சில நூறு கலக மாலுமிகள், 12,000 படை வீரர்களும் கீழ்நிலை படை அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர், விசுவாச படைவீரர்கள், அதிகாரிகள், கொசாக்சுகள் மற்றும் கருப்பு நூற்றுவர்
இழப்புகள்
700 உயிரிழப்பு அல்லது காயமுற்ற போராட்டக்காரர்கள், 16 கருப்பு நூற்றுவரால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் 100 கைதுகள் குறைந்தளவில்
போராட்டத்தின் முடிவில் கருப்பு நூற்றுவர் படையினால் போல்செவிக் செய்தித்தாள் பிராவ்டாவின் கட்டிடமும் மத்திய குழுவின் அலுவலகமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது

சூலை நாட்கள் என்பது 1917இல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில், சூலை மூன்றுக்கும் சூலை 7க்கும் இடையே(யூலியன் நாட்காட்டி) (16 சூலை– 20 சூலை, கிரெகொரியின் நாட்காட்டி), உருசிய இடைக்கால அரசை எதிர்த்து தாமாக எழுந்த போராட்டக்காரர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையைக் குறிப்பிடுகிறது. இந்தப் போராட்டங்களுக்கு போல்செவிக்குகள் தலைமை தாங்கினர்.

அமைதியான முறையில் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களின் மீது இராணுவம் தனது தாக்குதலை நிகழ்த்தியது. போல்செவிக்குகளுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாண்டது. போல்செவிக்குகளின் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் தலைமறைவானார்; மற்றத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[1][2] சூலை நாட்களின் இறுதியில் அக்டோபர் புரட்சியின் முந்தைய நாட்களில் போல்செவிக்குகளின் செல்வாக்கில் தற்காலிக இறக்கம் ஏற்பட்டதுடன் வளர்ச்சியும் தடைபட்டது.

மேலும் அறிய[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. A History of Western Society. Chapter Outlines. Chapter 27: The Great Break: War and Revolution, Seventh Edition. John P. McKay, University of Illinois, Urbana-Champaign; Bennett D. Hill, Georgetown University; John Buckler, University of Illinois, Urbana-Champaign
  2. "1917 சூலையில் அரசுக்கெதிரான அரைகுறை போல்செவிக்கு எழுச்சி தோல்வியடைந்தது. லியோன் திரொட்ஸ்கி சிறை சென்றார், ஆனால் லெனின் பின்லாந்திற்கு தப்பிச் சென்றார்." (Key Themes of the Twentieth Century by Philip Sauvain. p.54)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலை_நாட்கள்&oldid=1830601" இலிருந்து மீள்விக்கப்பட்டது