உள்ளடக்கத்துக்குச் செல்

கெய்லோங்சியாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேலொங்சியாங் மாகாணம்
黑龙江省
பெயர் transcription(s)
 • சீனம்黑龙江省 (Hēilóngjiāng Shěng)
 • சுருக்கம் (pinyin: Hēi)
Map showing the location of ஹேலொங்சியாங் மாகாணம்
சீனாவில் அமைவிடம்: ஹேலொங்சியாங் மாகாணம்
பெயர்ச்சூட்டு hēi—கறுப்பு
lóng—டிராகன்
jiāng—ஆறு
அமூர் ஆறு
தலைநகரம்சிசிஹார் (1949-1953) ஹார்பின் (1954-தற்போதுவரை)
பெரிய நகரம்ஹார்பின்
பிரிவுகள்13 அரச தலைவர், 130 கவுண்டி மட்டம், 1274 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்வாங் கியாங்குய்
 • ஆளுநர்லு ஹான்
பரப்பளவு
 • மொத்தம்4,54,800 km2 (1,75,600 sq mi)
 • பரப்பளவு தரவரிசை6 வது
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்3,83,12,224
 • தரவரிசை15 வது
 • அடர்த்தி84/km2 (220/sq mi)
  அடர்த்தி தரவரிசை28 வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான்: 95%
மஞ்சு: 3%
கொரியர்கள்: 1%
மங்கோலியர்: 0.4%
ஊய்: 0.3%
 • மொழிகளும் கிளைமொழிகளும்வடகிழக்கு மாண்டரின், சீலு மாண்டரின், சியாவ்லியாவ் மாண்டரின்
ஐஎசுஓ 3166 குறியீடுCN-23
GDP (2014)CNY 1.504 டிரில்லியன்
US$ 244.8 பில்லியன் (16வது)
 • per capitaCNY 39,164
US$ 6,375 (16 வது)
HDI (2010)0.704[3] (உயர்) (12 வது)
இணையதளம்www.hlj.gov.cn
கெய்லோங்சியாங்
குளிர்கால் இரவில் ஹார்பினில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனித்தூவி உலகம்
நவீன சீனம் 黑龙江
பண்டைய சீனம் 黑龍江
PostalHeilungkiang
Literal meaning"கறுப்பு டிராகன் ஆறு"

ஹெய்லோங்ஜியாங் அல்லது கெய்லோங்சியாங் அல்லது ஹேலொங்சியாங் (எளிய சீனம்: 黑龙江பின்யின்: Hēilóngjiāng, ஆங்கில மொழி: Heilongjiang) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் வடகிழக்கில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. "ஹெய்லோங்ஜியாங்" என்பதன் பொருள் கறுப்பு டிராகன் ஆறு என்பதாகும். இது அமூர் ஆற்றுக்கு சீனர்கள் சூட்டிய பெயராகும்.

ஹெய்லோங்ஜியாங்கின் எல்லைகளாக தெற்கில் ஜிலிங் மேற்கில் உள் மங்கோலியா மாகாணங்களும் வடக்கு மற்றும் கிழக்கில் இரசிய நாடும் உள்ளன. தெற்கில் சீன மக்கள் குடியரசையும் வடக்கில் ரசியாவையும் கொண்ட அமூர் ஆறு இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது.

வரலாறு

[தொகு]

பண்டைய காலத்தைய கற்றறிந்த நாகரிகங்களிடமிருந்து வெகுதொலைவில் ஹெய்லோங்ஜியாங் அமைந்திருந்ததால் இப்பகுதியைப்பற்றிய தகவல்கள் குறைவாக உள்ளன. பண்டைய சீனப்பதிவுகள் மற்றும் பிறசான்றுகளின்படி ஹெய்லோங்ஜியாங்கில் புயியோ, மொஹெ, கித்தான் போன்ற வாழ்ந்துள்ளனர். மங்கோலிய தோங்கு மக்கள் உள் மங்கோலியா மற்றும் ஹெய்லோங்ஜியாங்கின் மேற்கு பகுதியில் வாழ்ந்துள்ளனர்.[4] சில மன்சு அல்லது மங்கோலியப் பெயர்கள் உள்ளன.[5] ஹெய்லோங்ஜியாங்கின் கிழக்கு பகுதி பால்ஹாயி அரசால் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைக்காலப்பகுதியில் ஆளப்பட்டது. வடக்கு சீனா முழுவதும் ஆண்டுவந்த சீனாவின் ஜின் மரபின் (1115-1234) தோற்றம் நவீன ஹெய்லோங்ஜியாங்கின் எல்லைகளுக்குள் உள்ளது. ஹெய்லோங்ஜியாங்கிக்கான ஆட்சியமைப்பு 1683 இல் மஞ்சு இனக்குழுவின் சிங் அரசமரபு காலத்தில், சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது.

நிலவியல்

[தொகு]

ஹெய்லோங்ஜியாங் பல்வேறுபட்ட நிலப்பகுதிகளைக் கொண்டது. மாகாணத்தின் பெரும்பகுதி பெரிய கிங்கான் மலைத்தொடர் மற்றும் சிறிய கிங்கான் மலைத்தொடர், சான்குவாங்கய் மலைகள், லவோயி மலைகள், வாண்டா மலைகள் போன்றவை நிலவியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் ஜிலின் மாகாணத்தின் எல்லையில் 1,690 மீட்டர் (5,540 அடி) உயரம் கொண்ட தாதுடிங்சி மலையாகும். பெரிய வாண்டா மலைத்தொடரில் சீனாவின் மீதமுள்ள பெரிய கன்னிக் காட்டை கொண்டு, சீனாவின் முதன்மையான வனவியல் தொழில் பகுதியாக உள்ளது. மாகாணத்தின் கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் ஒப்பீட்டளவில் உயரத்தில் குறைவாகவும் சமதளமாகவும் உள்ளன.

இது ஒரு ஈரப்பத கண்ட தட்பவெப்பநிலை கொண்டதாக உள்ளது எனினும் தொலைதூர வடக்குப்பகுதிகளில் துணைவடதுருவப் பருவநிலை நிலவுகின்றது. இங்கு குளிர்காலம் நீண்டதாகவும் கடுமையாகவும் கோடைக்காலம் குறுகியதாகவும் இதவெப்பமாகவும் இருக்கும். சனவரி மாத சராசரி வெப்பநிலை -31 முதல் -15 ° செல்சியஸ் (−24 முதல் 5 °பாரங்கீட்) வரை இருக்கும். கோடையில் சராசரி சூலைமாத வெப்பநிலை 18 முதல் 23 ° செல்சியஸ் (64 முதல் 73 °பாரங்கீட்) வரை இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 400 முதல் 700 மில்லி மீட்டர் (16 முதல் 28 அங்குலம்) கோடைக் காலத்தில்தான் மிகுதியாக மழை பொழிகிறது. ஆண்டு முழுவதும் தெளிவான வானிலை காணப்படுகிறது.

மாகாணத்தின் பெரிய நகரங்கள் ஹார்பின், தாச்சிங், சிசிஹார், மூதஞ்சியாங், சியமூசு, சீஸீ, ஷுங்யாசென், ஹுகாங், சீதைஹு, யீச்சூன், ஹைய்ஹு ஆகும்.

போக்குவரத்து

[தொகு]

38,000 கிலோ மீட்டர் நீளத்திற்குப் புதிய சாலைகளை உருவாக்கி ஹெய்லோங்ஜியாங்கின் மொத்த சாலைகளின் நீளம் 2.3 மில்லியன் கிலோமீட்டராக விரிவாக்கும் ஒரு சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டம் 2006 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இம்மாகாணத்தில் ஆசிய-ஐரோப்பா கண்டப்பாலத்தின் ஒருபகுதி உள்ளிட்ட 5,300 கிலோமீட்டர் நீள 60 தொடர்வண்டி பாதைகள் உள்ளன. ஹார்பின்-தாலியென் அதிவிரைவுத் தொடர்வண்டிப் போக்குவரத்து பணிகள் 2012 இல் முடிக்கப்பட்டது. ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹார்பினில் இருந்து நீண்டு 23 நிறுத்தங்களுடன் சாங்சுவன் மற்றும் ஷென்யாங் வழியாக லியோனிங் மாகாணத்திலுள்ள தாலியென் வரை முடிவடைகிறது. இதில் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 37 மில்லியன் மக்களும், 2030 இல் ஆண்டுக்கு 51 மில்லியன் மக்களும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணத்தின் முதன்மையான வானூர்தி நிலையங்கள், ஹார்பின் தைப்பிங் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிசிஹார் வானூர்தி நிலையம் , மூதஞ்சியாங் வானூர்தி நிலையம், சியமூசு வானூர்தி நிலையம், ஹைய்ஹு வானூர்தி நிலையம் ஆகியனவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆறு மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட ஹார்பின் பன்னாட்டு வானூர்தி நிலையம் எழுபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கின்றது.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண்மையை இப்பகுதியில் நிலவும் அதன் குளிர் காலநிலை கட்டுப்படுத்துகிறது. இங்கு சோயாபீன்ஸ், மக்காச்சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவைற்றை அடிப்படையாக கொண்ட வேளாண்மை நடக்கிறது. இங்கு பணப்பயிர்களான பீட்ரூட் , ஆளி விதை, சூரியகாந்தி ஆகியவையும் விளைவிக்கப்படுகினறன.

ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் மரம் வெட்டும் தொழில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. குறிப்பாக பைன் மரம், கொரிய பைன் மரம், லார்ச் மரம் ஆகியன முதன்மையான மரங்கள் ஆகும். மாகாணத்தில் வனவளம் பெரும்பாலும் தாசிங்கான் மலைகள் மற்றும் சியாவோசிங்கான் மலைகள் போன்ற பகுதிகளில் உள்ளது. இக்காடுகள் பல விலங்கு இனங்களின், குறிப்பாக சைபீரியப் புலி, செந்தலைக் கொக்கு, லின்க்ஸ் பூனை ஆகியவற்றின் உறைவிடமாக உள்ளது.

ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் மந்தைக் குதிரைகள் மற்றும் கால்நடைகள் மையமாக உள்ளது; மாகாணத்தில் பால் மாடுகள் பெரிய எண்ணிக்கையில் உள்ளன. சீனாவின் அனைத்து மாகாணங்களைவிட இங்கு பால் உற்பத்தி மிகுதியாக உள்ளது. பெட்ரோலியம் ஹெய்லோங்ஜியாங்கின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமம் ஆகும். மாகாணத்தின் தாச்சிங் எண்ணெய் வயல்கள் சீனாவின் பெட்ரோலிய உற்பத்தியில் ஒரு முதன்மை இடத்தை வகிக்கிறது. மேலும் நிலக்கரி, தங்கம், கடுங்கரி போன்றவை மாகாணத்தில் கிடைக்கும் இதர முதன்மையான கனிமங்கள் ஆகும். ஹெய்லோங்ஜியாங் மாகாணம் காற்றாலை மின்சார உற்பத்தி ஆற்றல் உள்ள பகுதியாகும். இம்மாகாணத்தின் காற்றாலை ஆற்றல் சதுர மீட்டருக்கு 200 வாட் ஆகும்.

ஹெய்லோங்ஜியாங் வடகிழக்கு சீனாவின் பகுதியாக உள்ளது, இம்மாகாணம் பாரம்பரிய தொழில்துறையை அடிப்படையாககொண்டது. தற்போது நிலக்கரி, பெட்ரோலியம், மரம் வெட்டுதல், பொறிகள், உணவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வருகிறது. இதன் அமைவிடத்தால் ஹெய்லோங்ஜியாங் உரசியாவுடனான தொழில் தொடர்புக்கு ஒரு முக்கியமான நுழைவாயிலாக உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் ஹான் சீனர், மற்ற இன சிறுபான்மையினர் மஞ்சு இனக்குழு, கொரியர்கள், மங்கோலியர், ஊய் மக்கள், தவோர் மக்கள், சீபோ மக்கள், எலுன்சுன் மக்கள், ஹுஜு மக்கள், ரஷ்யர்கள் ஆவர்.

இனக்குழுக்கள்
ஹெய்லோங்ஜியாங்கின் இனக்குழுவினர் (2000 கணக்கெடுப்பு)
தேசிய இனம் மக்கள் தொகை விழுக்காடு
ஹான் சீனர் 34,465,039 95.20%
மஞ்சு மக்கள் 1,037,080 2.86%
கொரியர்கள் 388,458 1.07%
மங்கோலியர் 141,495 0.39%
ஊய் மக்கள் 124,003 0.34%
தவோர் மக்கள் 43,608 0.12%
சீபோ மக்கள் 8,886 0.03%

இங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.[6]

சமயம்

[தொகு]

ஹெய்லோங்ஜியாங்கிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் சமயம் அல்லாதவர்களாகவோ அல்லது சீன நாட்டுப்புற மதங்களான, தாவோயியத்தை கடைபிடிப்பவர்களாகவோ உள்ளனர். பல மஞ்சு மக்கள் மன்சு ஷமானிஸத்தைப் பின்பற்றுகின்றனர். சீன புத்தம், திபெத்திய பௌத்தம் ஆகியன இம்மாகாணத்தில் முதன்மை இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doing Business in China – Survey". Ministry Of Commerce – People's Republic Of China. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2013.
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "《2013中国人类发展报告》" (PDF) (in சீனம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  4. Origins of Minority Ethnic Groups in Heilongjiang
  5. "浅谈黑龙江省地名的特点". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-22.
  6. சீனநாட்டின் அறிவியல் மற்றும் தொழினுட்பத்துறையின் மக்கள் மற்றும் சமூகப் புள்ளியியல் பிரிவுச்செயலகம் (国家统计局人口和社会科技统计司) மற்றும் சீனாவின் மாநில பொருளாதார வளர்ச்சிப்பிரிவின் மாந்தரினக்குழும விவகார ஆணையம் (国家民族事务委员会经济发展司), பதிப்பு. சீனாவின் 2000 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியல் ("2000年人口普查中国民族人口资料"). 2 தொகுப்புகள். பெய்ஜிங்: மாந்தரினக்குழும பதிப்பகம் (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்லோங்சியாங்&oldid=3929190" இலிருந்து மீள்விக்கப்பட்டது