ஹெய்நான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெய்நான் என்பது சீனாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இது சீனாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது மண்வளம் மிக்க பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 1,67,000 சதுர கி.மீ ஆகும். சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. பொருளாதார அளவில் சீனாவின் ஐந்தாவது பெரிய மாகாணம் இது. இதன் பொருளாதார வளர்ச்சிக்கு உழவுத் தொழில், சுற்றுலா, தொழிற்சாலைகள் உதவுகின்றன. இது 17 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பத்து கோடி மக்கள் வசிக்கின்றனர். சீன பௌத்தம், தாவோயிசம் உள்ளிட்ட மதங்களைப் பின்பற்றுகின்றனர். இங்குள்ளோர் மாண்டரின் மொழியினை சீனத்தின் வட்டார வழக்கில் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெய்நான்&oldid=1970752" இலிருந்து மீள்விக்கப்பட்டது