உள்ளடக்கத்துக்குச் செல்

குவாங்டொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவாங்டாங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவாங்டொங் மாகாணம்
广东省
பெயர் transcription(s)
 • சீனம்广东省 (Guǎngdōng Shěng)
 • சுருக்கம்simplified Chinese: ; traditional Chinese: (pinyin: Yuè, Jyutping: Jyut6, Yale: Yuht)
 • கண்டோனீயம் ஜியுட்பிங்Gwong2 Dung1 Saang2
 • கண்டோனீய யேல்Gwóngdūng Sáang
 • கேசிய மொழி PinyimGong3 Dung1 Sen3
 • தியோச்சூ Peng'imGuang2 Dong1 Sên2
Map showing the location of குவாங்டொங் மாகாணம்
சீனாவில் அமைவிடம்: குவாங்டொங் மாகாணம்
பெயர்ச்சூட்டு广 guǎng – "பரந்த"
dōng – "கிழக்கு"
Lit. "கிழக்குப் பெருவெளி"
தலைநகரம்குவாங்சோ
பெரிய நகரம்சென்சென்
பிரிவுகள்21 அரச தலைவர், 121 கவுண்டி மட்டம், 1642 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்ஹு சுன்ஹுஹா
 • ஆளுநர்சூ சாவோடான்
பரப்பளவு
 • மொத்தம்1,79,800 km2 (69,400 sq mi)
 • பரப்பளவு தரவரிசை15 வது
மக்கள்தொகை
 (2014)[2]
 • மொத்தம்10,64,40,000
 • தரவரிசை1 வது
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
  அடர்த்தி தரவரிசை7 வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் – 99%
சுவாங் – 0.7%
யாவோ – 0.2%
 • மொழிகளும் கிளைமொழிகளும்கண்டோனீயம், கேசிய மொழி, தியோச்சூ, லைச்சௌ மின், துஹுவா, மாண்டரின் மொழி, சுவாங்கு மொழி
ஐஎசுஓ 3166 குறியீடுCN-44
GDP (2014)CNY 6,779 டிரில்லியன்
US$ 1,104 டிரில்லியன்[3] (1st)
 • per capitaCNY 63,452
US$ 10,330 (8 வது)
HDI (2010)0.730[4] (உயர்) (7 வது)
இணையதளம்http://www.gd.gov.cn/
(எளிய சீனம்)
குவாங்டொங்
எளிய சீனம் 广东
சீன எழுத்துமுறை 廣東

குவாங்டொங் (சீன மொழி: 广东; பாரம்பரிய சீனம்: 廣東; ஆங்கில மொழி: Guangdong; பின்யின்: Guǎngdōng; ஜியுட்பிங்: 2 gwong 1 gwong) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென் சீனக்கடற்கரையை ஒட்டி உள்ள மாகாணங்களுள் ஒன்று. இது முன்னர் ஆங்கிலத்தில் கேன்டன் (Canton) அல்லது குவாங்டுங் (Kwangtung) என அழைக்கப்பட்டது.

நிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட [5][6] குவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.[7]

மாகாணத் தலைநகராக குவாங்சௌ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். 1989 முதல், குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

பெயர்

[தொகு]

"குவாங்" என்ற சொல்லுக்கு "விரிவடைவது" அல்லது "பரந்த" என்று பொருள், "டாங்" என்ற சொல் "கிழக்கு" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]

நிலவியல்

[தொகு]

குவாங்டொங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கிமீ (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்தில் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.

குவாங்டொங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.

குவாங்டொங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.

பொருளாதாரம்

[தொகு]

குவாங்டொங்ஙின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உண்ணாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டொங் சீனாவின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர பகுதி ஆகியவை ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

குவாங்டொங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது.[5][6] பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டொங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும். இந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர் ஆவர். குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.[9]

சமயம்

[தொகு]

2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி[10] குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.[11] 2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doing Business in China – Survey". Ministry Of Commerce – People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "China's Provincial GDP Figures in 2011 | China Briefing News". China-briefing.com. 27 January 2012. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  4. "《2013中国人类发展报告》" (PDF) (in சீனம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  5. 5.0 5.1 English people.com.cn
  6. 6.0 6.1 "Chinadaily.com". Chinadaily.com. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  7. http://gd.sina.com.cn/news/m/2014-05-22/0539101433.html
  8. Rongxing Gao (2013). Regional China: A Business and Economic Handbook. Palgrave Macmillan. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-28767-0.
  9. "China's excess males, sex selective abortion, and one child policy: analysis of data from 2005 national intercensus survey – Zhu et al. 338". bmj.com. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  10. Chinese Family Panel Studies 2012: 当代中国宗教状况报告——基于CFPS(2012)调查数据 பரணிடப்பட்டது 2016-04-23 at the வந்தவழி இயந்திரம். p. 013
  11. Note that this includes சீனா's predominant religious category, தாவோயியம்
  12. Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Results reported by: Xiuhua Wang (2015, p. 15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாங்டொங்&oldid=3924874" இலிருந்து மீள்விக்கப்பட்டது