ஹுனான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுனான் மாகாணம்
Hunan Province

湖南省
மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம்湖南省 (Húnán Shěng)
 • சுருக்கம் (pinyin: ஷியாங்)
Map showing the location of ஹுனான் மாகாணம் Hunan Province
சீனாவில் அமைவிடம்: ஹுனான் மாகாணம்
Hunan Province
பெயர்ச்சூட்டு hú – lake
nán – south
"south of the lake"
தலைநகரம்சாங்ஷா
பெரிய நகரம்சாங்ஷா
பிரிவுகள்14 அரச தலைவர், 122 கவுண்டி மட்டம், 2576 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்ஷு ஷோயுஷிங்
 • ஆளுநர்டு ஷியாஹாவோ
பரப்பளவு[1]
 • மொத்தம்2,10,000 km2 (80,000 sq mi)
பரப்பளவு தரவரிசை10 வது
மக்கள்தொகை (2014)[2]
 • மொத்தம்67,370,000
 • தரவரிசை7 வது
 • அடர்த்தி320/km2 (830/sq mi)
 • அடர்த்தி தரவரிசை13 வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் – 90%
துஜா – 4%
மொங் – 3%
தோங் – 1%
யாவோ – 1%
ஏனையோர் – 1%
 • மொழிகளும் கிளைமொழிகளும்சீன பேச்சு வழக்குகள்: சியாங், கான், தென்மேற்கு மன்டரின், சோசுவா டுகா, வக்சியாங், ககா. சீனமற்ற மொழிகள்: கோ சியங், டுயா, மெயின், டோங்
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-43
GDP (2014)CNY 2.705 டிரில்லியன்
US$ 440.29 பில்லியன் (10 வது)
 • per capitaCNY 37,475
US$ 6,100 (20 வது)
HDI (2010)0.681[3] (medium) (18வது)
இணையதளம்www.enghunan.gov.cn
ஹுனான் மாகாணம்
சீன எழுத்துமுறை 湖南

ஹுனான் மாகாணம் (சீனம்: 湖南பின்யின்: Húnán, ஆங்கில மொழி: Hunan Province) என்பது சீன மக்கள் குடியரசு நாட்டின் தென்மத்திய சீனப்பகுதியிலுள்ள ஒரு மாகாணங்களுள் ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. (இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான் என்று ஏற்பட்டது.)[4] ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது.[5] ஷியாங் ஆறு இந்த மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் ஹூபேய் மாகாணமும், கிழக்கில் ஜியாங்சி மாகாணமும், தென்கிழக்கில் குவாங்டாங் மாகாணமும், தென்மேற்கில் குவாங்ஸி மாகாணமும், மேற்கே குயிசூ மாகாணமும், வடமேற்கில் சோங்கிங் நகரமும் அமைந்துள்ளன. மாகாணத் தலைநகர் சாங்ஷா ஆகும்.

வரலாறு[தொகு]

ஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில், தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் முதன்முதலில் குடியேறினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிக்காலத்தில், இப்பகுதி சூ அரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு ஆன் அரசுமரபின் ஆட்சியின் கீழ் வந்தது.

நிலவியல்[தொகு]

யாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்குத் தீர்க்கரேகை, மற்றும் 24° 37'–30° 08' வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. மாகாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்). இது சீனமாகாணங்களின் பரப்பளவில் 10 ஆவது பெரிய மாகாணமாகும். வடமேற்கில் ஊலிங் மலைகள், மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள், கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள் என மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. மாகாணத்தில் 80% பகுதிகளில் மலைப்பகுதிகள் பரவி உள்ளன. முழு மாகாணத்திலும் 20% ற்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.

ஹுனான் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டில், அயன அயல் மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்தினையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

ஹுனானின் பாரம்பரிய பயிர்கள் அரிசி மற்றும் பருத்தி ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் இம்மாகாணத்தில் இருந்து ருபார்ப், கஸ்தூரி, தேன், புகையிலை, சணல் , பறவைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.[6] தோங்டிங் ஏரி பகுதி இரேமிப் உற்பத்தி மையமாகவும், ஹுனான் தேயிலை சாகுபடிக்கான ஒரு முக்கிய மையமாகவும் உள்ளது.

அண்மைய ஆண்டுகளில் விவசாயப் பொருட்களிலிருந்து ஹுனான் மாகாணம் சீனாவின் கடலோர மாநிலங்கள் போன்று உற்பத்தி பிரிவுக்கு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எஃகு, இயந்திரங்கள், மின்னணு உற்பத்தி போன்றவற்றில் ஒரு முதன்மையான மையமாக குவாங்டாங் மற்றும் ஜேஜியாங் போல உயர்ந்துள்த்து.[7]

லிங்ஷீஜியாங் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக ஸ்டிபினிடி கனிமம் கொண்ட முக்கிய மையங்களில் ஒன்றாகும் மேலும் அந்திமனியை பிரித்தெடுத்தலும் நடைபெறுகிறது. ஹுனான் சர்வதேச அளவில் கான்கிரீட் குழாய்கள், கிரேன்கள் போன்ற கட்டுமான உபகரணங்களைத் தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. இங்கு செயல்படும் நிறுவனங்களில் சில சோனி குழுமம், சூம்லின், சன்வார்ட் ஆகியன. சோனி குழுமம் உலகில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். லியாங் நிறுவனம் பட்டாசு, வாணவேடிக்கைத் தயாரிப்புகளில் உலகில் முதன்மை நிறுவனமாக உள்ளது.[8][9] 2011 இல் மாகாணத்தின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.90 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 300 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 20.226 யுவான் (அமெரிக்க $ 2,961) என்று இருந்தது.[10]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2000 ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹுனான் மாகாணத்தின் மக்கள் தொகை 64.400.700 ஆகும்.மாகாணத்தில் நாற்பத்தியோரு இனக் குழுக்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 1990 இல் 6.17% (3,742,700) என்று இருந்த்து. கணக்கெடுப்பின்படி, 89,79% (57,540,000) மக்கள் ஹான் சீனர் ஆவர், மக்கள் தொகையில் 10.21% (6,575,300) சிறுபான்மை இனக் குழுவினர் ஆவர். சிறுபான்மை குழுவினரில் துஜியா, மையாவோ, டாங், யாவ், பாய், ஹுய், ஜுவாங், உய்குரி போன்ற இனத்தினர் உள்ளனர்.

மதம்[தொகு]
ஹுனானில் சமயம்[11][note 1]

  சீனப்பழமை மதம் (20.19%)
  பிற சமயத்தவரும் சமயமற்றவர்களும்[note 2] (79.04%)

மாகாணத்தில் சீனப்பழமை மதம், தாவோயிசம், சீன பௌத்தம் ஆகியவையே பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள்தொகையில் 20.19% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.77% கிறித்தவர்கள் உள்ளனர்.[11] அறிக்கையில் மத விவரங்களை கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 79.04% ஆவர். இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது புத்தமதம், கன்பூசியிசம், தாவோ, நாட்டுப்பற மதம், ஆகியவற்றை கடைபிடிப்பவர்களாக இருக்கலாம். சிறுபான்மை முஸ்லிம்கள் உள்ளனர்.

சுற்றுலா[தொகு]

வுலிங்யுவான் ஆயிரக்கணக்கான உயரமான மணற்கற் தூண்கள்.

இந்த மாகாணம் சீனப்பெருநிலத்தின் தென் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஹுனான் இதன் நீண்ட அதன் இயற்கை அழகால் அறியப்படுகிறது. இது வடக்கில் யாங்சே ஆறாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் மலைகள் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் கலவை சீனாவில் மிக அழகான மாகாணங்களில் ஒன்றாக இதை ஆக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவந்தது. அரிசி, தேயிலை, ஆரஞ்சு ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சீனாவின் முதல் முழு கண்ணாடி தொங்கு பாலம் இம்மாகாணத்தில் உள்ள ஷின்யுசாய் தேசிய பூங்காவில் திறக்கப்பட்டது.[12]

குறிப்புகள்[தொகு]

 1. The data was collected by the Chinese General Social Survey (CGSS) of 2009 and by the Chinese Spiritual Life Survey (CSLS) of 2007, reported and assembled by Xiuhua Wang (2015)[11] in order to confront the proportion of people identifying with two similar social structures: ① Christian churches, and ② the traditional Chinese religion of the lineage (i. e. people believing and worshipping ancestral deities often organised into lineage "churches" and ancestral shrines). Data for other religions with a significant presence in China (deity cults, Buddhism, Taoism, folk religious sects, Islam, et. al.) was not reported by Wang.
 2. This may include:

மேற்கோள்கள்[தொகு]

 1. "Doing Business in China – Survey". Ministry Of Commerce – People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. "National Data: Annual by Province". National Bureau of Statistics of China. 29 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013.
 3. "China Human Development Report 2013" 《2013中国人类发展报告》 (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2013. Archived from the original (PDF) on 2013-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
 4. (சீனம்) Origin of the Names of China's Provinces பரணிடப்பட்டது 2016-04-27 at the வந்தவழி இயந்திரம், பீப்புள்ஸ் டெய்லி.
 5. "湖南被誉为三湘四水的由来". Archived from the original on 2008-02-21. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
 6. Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. பக். 123. http://www.wdl.org/en/item/7317/view/1/123/. 
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
 8. http://www.enghunan.gov.cn/
 9. http://www.baike.com/wiki/%E6%B9%96%E5%8D%97%E7%9C%81
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
 11. 11.0 11.1 11.2 China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: Xiuhua Wang (2015, p. 15)
 12. "China's first glass-bottom bridge opens – CNN.com". CNN. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hunan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுனான்_மாகாணம்&oldid=3792636" இலிருந்து மீள்விக்கப்பட்டது