உள்ளடக்கத்துக்குச் செல்

யாவோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாவோ மக்கள் (Yao people) என்பவர்கள் சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இன சிறுபான்மையினரில் ஒன்றாவர். இவர்கள் சீனாவின் தென்மேற்கு மற்றும் தெற்கு மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் வியட்நாம் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 54 இனக்குழுக்களில் ஒன்றாவர்.

2010 சீன சனத்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 28 இலட்சம் யாவோ மக்கள் சீனாவில் இருந்தனர். 2019 வியட்நாமிய சனத்தொகைக் கணக்கெடுப்பில், அந்த நாட்டில் ஏறத்தாழ ஒன்பது இலட்சம் யாவோ மக்கள் இருந்தனர். மேலும் அமெரிக்காவில் ஏறத்தாழ அறுபது ஆயிரம் யாவோக்கள் பெரும்பாலும் மேற்கு கடலோர மாநிலங்களில் வசிக்கின்றனர்.

வரலாறு[தொகு]

யாவோ மக்களின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முன் ஹுனானில் தொடங்கியது.[1] மிங் வம்சத்திற்கு எதிரான மியாவ் கிளர்ச்சியின் போது கிளர்ச்சியாளர்களில் யாவோ மற்றும் உமாங்கு மக்கள் இருந்தனர். ஹான் சீனர்கள் தென் சீனாவில் விரிவடைந்ததால், யாவோ மக்கள் வடக்கே ஹுனான் மற்றும் குய்சோவுக்கும், தெற்கே குவாங்டாங் மற்றும் குவாங்சிக்கும் இடையே உள்ள மலைப்பகுதிகளில் குடியேறினர்.[2] 1890 ஆம் ஆண்டில், குவாங்டாங் அரசாங்கம் வடமேற்கு குவாங்டாங்கில் யாவோ மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.[3]


லாவோஸ் உள்நாட்டுப் போரின் போது, லாவோஸின் யாவோ பழங்குடியினர் அமெரிக்கப் படைகளுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தனர். அவர்கள் பொதுவுடைமை அரசுக்கு எதிராக தென் வியட்நாம் அரசுக்கு ஆதரவாகப் போராடினார்கள்.[4] இதன் காரணமாக போர் முடிந்தவுடன் புதிதாக பதவி ஏற்ற  பொதுவுடைமை அரசாங்கம் யாவோ பழங்குடி குழுக்களை குறிவைத்து விரட்டியது. இது இதனால் இந்த மக்கள் அண்டை நாடானதாய்லாந்தில் குடியேற முற்பட்டனர்.

இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தாய்லாந்து அரசாங்கத்திடம் இருந்து அகதி அந்தஸ்தைப் பெற்ற பிறகு பல யாவோ மக்கள் அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் குடியேறிய பெரும்பாலானவர்கள் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், முக்கியமாக மத்திய மற்றும் வடக்கு கலிபோர்னியாவில்குடியேறினர்.

கலாச்சாரம்[தொகு]

யாவோ மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் உழவு மூலம் நெல் சாகுபடி செய்கிறார்கள். மேலும், யாவோ மக்கள் அருகில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டையாடுவதில் ஈடுபடுகின்றனர்.[5] சொங் ஆட்சியின் போது (1127-1279), ஒரு ஏகாதிபத்திய சீனப் பார்வையாளர், இண்டிகோவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தனித்துவமான மெல்லிய நீல நிற ஆடைகளை யாவோ மக்கள் அணிந்திருப்பதாக விவரித்தார்.[6]

யாவோ மக்கள் பெரும்பாலும் தாவோயியசமயத்தை பின்பற்றுகிறார்கள்.[7] யாவோ மக்கள்பான் வாங் திருவிழாவை ஆண்டுதோறும் பத்தாவது சந்திர மாதத்தின் பதினாறாம் நாளில் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழா யாவோ மக்களின் புராண மூலக் கதையைக் கொண்டாடுகிறது. மேலும் இந்த திருவிழா ஒரு நல்ல அறுவடையைக் கொண்டாடுவதற்கும், தங்கள் முன்னோர்களை வணங்குவதற்கும் ஒரு மகிழ்ச்சியான விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Theobald, Ulrich. "Man 蠻". www.chinaknowledge.de (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-14.
  2. Wiens, Herold Jacob. Han Chinese expansion in South China.
  3. The Chinese times, Volume 4.
  4. "Independent Lens . DEATH OF A SHAMAN . The Mien". PBS. Archived from the original on 14 February 2018. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
  5. "Yao" in Ethnohistorical Dictionary of China (ed. James Stuart Olson: Greenwood Press, 1998), p. 374.
  6. Sean Marsh, Imperial China and Its Southern Neighbours ( eds. Victor H. Mair & Liam Kelley: Institute of Southeast Asian Studies, 2015), p. 96.
  7. Deborah A. Sommer, "Taoism and the Arts" in The Oxford Handbook of Religion and the Arts (ed. Frank Burch Brown: Oxford University Press, 2014), p. 384.
  8. Liming Wei, Chinese Festivals (Cambridge University Press, 2011), pp. 106-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவோ_மக்கள்&oldid=3899038" இலிருந்து மீள்விக்கப்பட்டது