உள்ளடக்கத்துக்குச் செல்

நின்ஷியா தன்னாட்சிப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நின்ஷியா
தன்னாட்சிப் பகுதி
Ningxia Hui Autonomous Region
宁夏回族自治区
Name transcription(s)
 • Chinese宁夏回族自治区 (Níngxià Huízú Zìzhìqū)
 • Abbreviationஎளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: பின்யின்: Níng
Map showing the location of the Ningxia Hui Autonomous Region
Map showing the location of the
Ningxia Hui Autonomous Region
பெயர்ச்சூட்டு níng—tranquil
xià—Western Xia
"Tranquil Xia"
Capital
(and largest city)
இன்சுவான்
Divisions5 prefectures, 21 கவுண்டி, 219 நகரியம்
அரசு
 • செயலர்லிஜியாஹுவா
 • ஆளுநர்லியு ஹுய்
பரப்பளவு
 • மொத்தம்66,399.73 km2 (25,637.08 sq mi)
 • பரப்பளவு தரவரிசை27வது
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்63,01,350
 • மதிப்பீடு 
(31 திசம்பர் 2014)[3]
66,20,000
 • தரவரிசை29வது
 • அடர்த்தி89.1/km2 (231/sq mi)
  அடர்த்தி தரவரிசை25வது
Demographics
 • இனக்குழுவினர்ஹான்: 62%
ஊய்: 34%
மஞ்சு இனக்குழு: 0.4%
 • Languages and dialectsLanyin Mandarin, Zhongyuan Mandarin
ஐஎசுஓ 3166 குறியீடுCN-64
GDP (2011)CNY 206.0 billion
US$ 32.7 billion (29th)
 - per capitaCNY 26,860
US$ 3,968 (17th)
HDI (2010)0.674[4] (medium) (21st)
இணையதளம்http://www.nx.gov.cn/
நின்ஷியா தன்னாட்சிப் பகுதி
எளிய சீனம்
சீன எழுத்துமுறை
Ningxia Hui Autonomous Region
Simplified Chinese 宁夏回族自治区
Traditional Chinese 寧夏回族自治區
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

நின்ஷியா( Ningxia சீனம்: 宁夏 அதிகாரப்பூர்வமாக நின்ஷியா ஹுய் தன்னாட்சி பகுதி (NHAR), என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த ஒரு தன்னாட்சி பகுதி ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் ஒரு மாகாணமாக இருந்த இது , 1954 இல், கான்சு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது ஆனால் 1958 ஆம் ஆண்டு கான்சுவில் இருந்து தனியாக பிர்க்கப்பட்டு, ஒரு தன்னாட்சி பிராந்தியம் என்ற தகுதியோடு புதிதாய் ஊய் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 சீன தேசிய இனங்களில் ஊய் மக்களும் அடங்குவர். நிங்ஜியா பகுதியை கிழக்கில் ஷான்சி, தெற்கு மற்றும் மேற்கில் கான்சு, வடக்கில் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி போன்றவை சூழ்ந்துள்ளன. இதன் பரப்பளவு 66.400 சதுர கிலோமீட்டர் (25,600 சதுர மைல்) ஆகும். [1]

வரலாறு

[தொகு]

நிங்ஜியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் சின் அரசமரபு காலத்தில் 3 வது நூற்றாண்டில் வெல்லப்பட்டன. தாங் அரசமரபு காலத்தில் பல பெரிய நகரங்கள் நிறுவப்பட்டன.

நிலவியல்

[தொகு]

நிங்ஜியா மாகாணத்தின் எல்லைகளாக சென்சி மாகாணம் மற்றும் கான்சு , மற்றும் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி உள்ளது . மஞ்சள் ஆறு நிங்ஜியா வழியாக பாய்கிறது. நிங்ஜியா சுற்றுச்சூழல் ஆய்வாளர்களால் குறைந்தத அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிங்ஜியா உள்ள சில தாவர இனங்களின் வயது 40,000 வரை இருக்க்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிங்ஜியா ஒப்பீட்டளவில் உலர்ந்த, பாலைவனம் போன்ற பகுதியாக உள்ளது. இதனால் பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வட பகுதியில் மஞ்சள் ஆறு பாய்வதால், வேளாண்மைக்கு உதவியாக உள்ளது. லான்சு மற்றும் பவோடு ஆகியவற்றை இணைக்கும் இருப்புப்பாதை இப்பிராந்தியத்தை கடந்து செல்கிறது. மஞ்சலாற்றின் குறுக்கே ஒரு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 16 திசம்பர் 1920 அன்று , 8.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், சுமார் 200,000 பேர்வரை கொல்லப்பட்டனர்.

காலநிலை

[தொகு]

இந்த பிராந்தியம் கடலில் இருந்து 1,200 கிலோமீட்டர் (750 மைல்) தொலைவில் உள்ளது. கண்ட தட்பவெப்பநிலை கொண்டுள்ளது. சராசரி கோடை வெப்பநிலை 17 முதல் 24 °செல்சியஸ் வரை (63 முதல் 75 °பாரங்கீட்) சூலை மாதத்தில் உயரும். சராசரி குளிர்கால வெப்பநிலை −7 முதல் −15 °செல்சியஸ் (19 முதல் 5 °பாரங்கீட்) வரை சனவரி மாதம் வீழ்ச்சியடையும். பருவகால தீவிர வெப்பநிலை குளிர்காலத்தில் −30 °செல்சியஸ் (−22 °பாரங்கீட்) வரை வீழ்ச்சியடையும். கோடைக்காலத்தில் 39 °செல்சியஸ் (102 °பாரங்கீட்) வரை உயரும். சராசரி ஆண்டு மழையளவு 190 முதல் 700 (7.5 முதல் 27.6 அங்குலம்) பிராந்தியத்தின் தென்பகுதியில் கூடுதல் மழைபொழிவு உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

நின்ஷியா வின் உள்நாட்டு உற்பத்தி என்பது சீன ஆட்சிப்பிரிவுகள்ல் குறைந்த அளவு உற்பத்தி பகுதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ( திபெத் கடைசி இடத்தை வகிக்கிறது ) அதன் அண்டை பகுதிகளான உள் மங்கோலியா மற்றும் ஷான்சி போன்றவை நாட்டின் பொருளாதாரத்தில் உறுதிமிக்க அளவில் வளர்ந்து வருகின்றன். [16] 2011 ல் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது வெறும் 200,0 பில்லியன் யுவான் (அமெரிக்க $ 32.7 பில்லியன்) என்று இருந்தது, மற்றும் ஒரு நபர் உள்நாட்டு உற்பத்தி என்பது 21.470 யுவான் (அமெரிக்க $ 3,143) என்று இருந்தது. தேசிய பொருளாதாரத்தில் இந்த பகுதியின் பங்கு 0.44% ஆகும். [16] வேறு பல வளர்ச்சி குன்றிய மாகாணங்களில் உள்ளது போலல்லாமல், நின்ஷியாவில் தொழிலாளர்களுக்கான ஊதிய செலவு கூடுதலாக உள்ளது இதன் வளர்ர்சியை கடினமாக்கியுள்ளது.

சமயம்

[தொகு]




நின்ஷியாவில் சமயம் (2010 ஆண்டு நிலவரம்)

  கிறித்துவர்கள்[6] (1.17%)

நின்ஷியா உள்ள ஊய் மக்களிடையே பெரும்பான்மை மதமாக இஸ்லாம் விளங்குகிறது. ஹான் சீனர் மத்தியில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு மக்கட்தொகைரீதியான ஆய்வின் படி, மாகாணத்தின் மக்கள் தொகையில் 34% முஸ்லீம்கள் உள்ளனர். [5] 2004 ஆண்டின் சீன பொது சமூக கணக்கெடுப்பு படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 1.17% கிறித்துவர் ஆவர். [6]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 "Administrative Divisions (2013)". Ningxia Statistical Yearbook 2014. Statistical Bureau of Ningxia. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2015.
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 27 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "National Data". National Bureau of Statistics of China. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2015.
  4. "《2013中国人类发展报告》" (PDF) (in சீனம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
  5. 5.0 5.1 Min Junqing. The Present Situation and Characteristics of Contemporary Islam in China. JISMOR, 8. 2010 Islam by province, page 29. Data from: Yang Zongde, Study on Current Muslim Population in China, Jinan Muslim, 2, 2010.
  6. 6.0 6.1 China General Social Survey 2004. Report by: Xiuhua Wang (2015, p. 15)