குவாங்ஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம்
Guangxi Zhuang Autonomous Region

广西壮族自治区
தன்னாட்சிப் பகுதி
Name transcription(s)
 • சீனம்广西壮族自治区
 • சுருக்கம்桂 (pinyin: Guì, சுவாங்கு: Gvei)
 • சுவாங்குGvangjsih Bouxcuengh Swcigih
 • கண்டோனீயம் யூத்பிங்gwong2 sai1 zong3 zuk6 zi6 zi6 keoi1
 • கண்டோனீய யேல்Gwóngsaì Jongjuhk Jihjihkeuī
குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலத்தின் அமைவிடத்தைக் குறிக்கும் நிலவரைபடம்
குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலத்தின் அமைவிடத்தைக் குறிக்கும் நிலவரைபடம்
பெயர்ச்சூட்டு"Guangnan Xi Lu" (ஒரு "லூ" என்பது சொங் அரசமரபு காலத்தில் ஒரு மாகாணம் அல்லது மாநிலத்திற்கு இணையாகும்)
广 = பரந்த
西 = மேற்கு
சரியான பொருளில், "பெருவெளியின் மேற்கு" (பெருவெளியின் கிழக்கில் குவாங்டாங்)
தலைநகர்
(பெரிய நகரம்)
நண்ணிங்
Divisions14 மாவட்டம், 109 கவுண்டி, 1396 நகரியங்கள்
அரசு
 • செயலாளர்பெங் சிங்குவா
 • ஆளுநர்சென் ஊ
பரப்பளவு[1]
 • மொத்தம்2,36,700 km2 (91,400 sq mi)
பரப்பளவு தரவரிசை9 வது
மக்கள்தொகை (1 நவம்பர் 2010)[2]
 • மொத்தம்4,60,26,600
 • Estimate (31 திசம்பர் 2014)[3]4,75,40,000
 • தரவரிசை11 வது
 • அடர்த்தி207/km2 (540/sq mi)
 • அடர்த்தி தரவரிசை20 வது
மக்கள் வகைப்பாடு
 • இனக்குழுவினர்குவாங்சி மக்கள்: ஹான் சீனர் – 62%
சுவாங் – 32%
யவோ – 3%
மியாவோ – 1%
தொங் – 0.7%
வியட்நாமியர் – 0.6%
கோலாவோ – 0.4%
 • மொழிகள்தென்மேற்கு மாண்டரின், கண்டோனீயம், பிங்குவா, சுவாங்கு
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-45
GDP (2013)CNY 1.44 டிரில்லியன்
US$ 234.91 பில்லியன் (18 வது)
 - per capitaCNY 30,769
US$ 5,019 (27 வது)
HDI (2010)0.658[4] (நடுத்தரம்) (26th)
இணையதளம்குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம்
(எளிய சீனம்)
குவாங்ஷி
நவீன சீனம் 广西
பண்டைய சீனம் 廣西
PostalKwangsi
Literal meaning"மேற்குப் பெருவெளி"
Guangxi Zhuang Autonomous Region
நவீன சீனம் 广西壮族自治区
பண்டைய சீனம் 廣西壯族自治區
PostalKwangsi Chuang Autonomous Region

குவாங்சி (சீனம்: 广西; சுவாங்கு: Gvangjsih ஆங்கில மொழி: Guangxi) அலுவல்முறையில் குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம் என அழைக்கப்படும் பகுதி ஒரு சீன தன்னாட்சி பிராந்தியம் ஆகும். இது தென் மத்திய சீனாவில், வியட்நாமை ஒட்டியுள்ளது. முன்னர் ஒரு மாகாணமாக இருந்தது இப்பகுதி 1958 இல் தன்னாட்சி மண்டலமாக மாறியது.

குவாங்சி சீனாவின் தென்கடைக்கோடியில் மலைசார்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளதால் சீன நாகரிகத்தின் எல்லையாக வரலாற்றுக் காலந்தொட்டு இருந்துவருகின்றது. இதன் தற்போதைய பெயரில் உள்ள "குவாங்" என்ற சொல்லின் பொருள் "விரிவான" அல்லது "பரந்த" என்பதாகும். இந்த பெயர் கி.பி 226 இல் இப்பகுதி குவாங்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிக்கு மாகாண நிலை யுவான் அரசமரபு காலத்தில் வழங்கப்பட்டது, எனினும் இருபதாம் நூற்றாண்டு வரை இப்பகுதி கட்டுப்பாடற்ற ஒரு திறந்த நிலப்பரப்பாகக் கருதப்பட்டது.

வரலாறு[தொகு]

சீனக்குறிப்புகளின் படி இப்பகுதியில் "பை யூயே" (நூறு யூயே) எனப்படும் ஒரு கலவையான பழங்குடிக் குழுக்கள் வாழ்ந்துவந்தனர். சின் அரசமரபின் காலத்தில் இது முதன் முதலில் சீனாவின் பகுதியாக மாறியது.

நிலவியல்[தொகு]

நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்சியின் எல்லைகளாக மேற்கில் யுன்னான், வடக்கே குயிசூ, வடகிழக்கில் ஹுனான், கிழக்கில் குவாங்டாங் ஆகிய சீன மாகாணங்களும், தென்மேற்கு எல்லையாக வியட்நாம் நாடும் உள்ளன. தெற்கில் பெய்பூ வன் எனச் சீனர்களால் அழைக்கப்படும் வளைகுடா உள்ளது. குவாங்சியின் பெய்பூ வன்னில் ஒரு குறுகிய கடற்கரையைக் கொண்டுள்ளது. பெய்ஹை, சின்ச்சௌ, பாங்சங்காங் போன்ற முக்கிய துறைமுகங்கள் இங்குள்ளன.

குவாங்சியின் பகுதிகள் ஓரளவு மலைப்பகுதிகளைக் கொண்டது. தன்னாட்சி பகுதியின் மிக உயர்ந்த இடம் யுச்சங் மலைத்தொடரிலுள்ள "மாவோர்ஷென்" மலை 2,141 மீட்டர் (7,024 அடி) ஆகும். பல ஆறுகள் மலைகள் வழியாகப் பாய்ந்து பள்ளத்தாக்குகளை உருவாக்கிச்செல்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை மேற்கு நதியின் துணை ஆறுகளாகும்.

வியட்நாம் எல்லையில் உள்ள "பான் யுயெ பூபு" என்று சீனர்களாலும் "தாக் பான் ஜியோக்" என்று வியட்நாமியர்களாலும் அழைக்கப்படும் அருவி இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. குவாங்சி மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டது. பொதுவாக கோடைக்காலம் நீண்டதாகவும், வெப்பமாகவும் இருக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை 17 முதல் 23 ° செல்சியஸ் ஆகும். ஆண்டு சராசரி மழையளவு 1250 முதல் 1750 மிமீ ஆகும். முக்கிய நகரங்கள் நண்ணிங், லியூச்சௌ, குய்லின், பெய்ஹை போன்றவை ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

ஹான் சீனர்களே பெரிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களில் முதன்மைத் துணைக்குழுக்கள் பேசும் வட்டார மொழிகள் தென்மேற்கு மாண்டரின் மற்றும் யூயே வகை சீனம்.

மண்டலத்தில் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சுவாங் இனக்குழுவினர் வாழ்கின்றனர். இவர்களே சீனாவின் பெரிய சிறுபான்மை இனத்தவர் ஆவர். இந்த இனக்குழுவினரின் மொத்த எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் குவாங்சி தன்னாட்சிப் பகுதியிலேயே வாழ்கின்றனர். தொங் மற்றும் மியாவோ சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழ்பவர்கள். இவர்களல்லாது இங்குள்ள பிறஇனக்குழுக்கள் யாவோ, ஹுய், யீ (லோலோ), ஷுயெ மற்றும் சிங் (வியட்நாம்). ஆகிய மக்களாவர்.

சமயம்[தொகு]

குவாங்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புறச் சமயங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. சுவாங் இனக்குழுவினரில் பெரும்பாலானவர்கள் சுவாங் பழங்குடியின சமயத்தை பின்பற்றுகின்றனர். தங்கள் மூதாதையக் கடவுளான புலுவோதுவோவை (布洛陀) வணங்குகின்றனர்.

2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 40.48% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 0.26% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[6] மக்கள் தொகையில் 58.26% பேர் சமயம் பற்றிய விவரங்களை கொடுக்கவில்லை, இவர்கள் சமயமற்றவர்களாகவோ இயற்கையை வழிபடுவோர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்தமதம், கன்பூசியம், தாவோ போன்றவற்றைப் பின்பற்றுவோர்களாகவோ அல்லது சிறுபான்மையினரான முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.

பொருளாதாரம்[தொகு]

குவாங்சியின் தலைநகரும், தொழில் மையமான நண்ணிங் நகரத்தின் தோற்றம்

குவாங்சியின் முதன்மை பயிர்கள் அரிசி, மக்காச்சோளம், வள்ளிக்கிழங்கு போன்றவையும் கரும்பு, வேர்க்கடலை , புகையிலை, புளிச்சைகீரை போன்ற பணப்பயிர்களையும் விளைவிக்கின்றனர்.. உலகில் விளையும் சோம்பில் 85 விழுக்காடு குவாங்சியில் விளைவிக்கப்படுகிறது. இதில் வைரஸ் எதிர்ப்புக்கு முக்கிய மூலப்பொருளான டாமிஃபுலு உள்ளது.[7]

குவாங்சி இரும்பு அல்லாத உலோகங்களின் முதன்மை உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். சீனாவின் தகரம் மற்றும் மாங்கனீசு இருப்பில் குவாங்சி மாகாணத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.[8] லியூச்சௌ நகரம் மோட்டார் வாகன உற்பத்தியில் முதன்மைத் தொழில்துறை மையமாக உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் இங்கு வாகன உற்பத்தி நிறுவனத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் பெரிய உருக்கு ஆலையும் அதைச்சார்ந்த தொழிலகங்களும் உள்ளன.

குவாங்சியின் மாகாண அரசு மாகாணத்தில் உற்பத்தித் துறையை விரிவாக்க விரும்புகிறது, சீனாவின் 2011 ஆண்டைய ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவில் மாகாணத்தின் பெய்பூ வளைகுடா பொருளாதார மண்டலத்திற்காக 2.6 டிரில்லியன் ரென்மின்பி ஓதுக்கீடு செய்யப்பட்டது.[8] அண்மைய ஆண்டுகளில் குவாங்சியின் பொருளாதாரம் அதன் பணக்கார அண்டை ஆட்சிப் பகுதிகளின் கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது. 2011 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1171.4 பில்லியன் யுவான் (அமெரிக்க $ 185.9 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 15,800 யுவான் கொண்டு சீனாவில் 18 ஆவது இடத்திலுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doing Business in China – Survey". Ministry Of Commerce – People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "广西2010年第六次全国人口普查主要数据公报" (in சீனம்). Guangxi Statistical Bureau. 1 July 2011. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "National Data". National Bureau of Statistics of China. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  4. "《2013中国人类发展报告》" (PDF) (in சீனம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
  5. "7–1. Natural Resources (2014)". Guangxi Statistical Yearbook 2015. Guangxi Statistical Bureau. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: Xiuhua Wang (2015, p. 15)
  7. http://epaper.gxnews.com.cn/ngjb/html/2009–05/07/node_303.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.0 8.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாங்ஷி&oldid=3929127" இலிருந்து மீள்விக்கப்பட்டது