உருசிய வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம்
வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம்
Северо-Кавказский федеральный округ | |
---|---|
![]() வடக்கு காகசியன் நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
உருவாக்கம் | 19 சனவரி 2010 |
நிர்வாக மையம் | பியாடிகோர்ஸ்க் |
அரசு | |
• சனாதிபதியின் தூதர் | யூரி சைகா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,70,400 km2 (65,800 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 8வது |
மக்கள்தொகை (2010 கணக்ககெடுப்பு) | |
• மொத்தம் | 94,28,826 |
• தரவரிசை | 7வது |
• அடர்த்தி | 55/km2 (140/sq mi) |
• நகர்ப்புறம் | 49.2% |
• நாட்டுப்புறம் | 50.8% |
Federal subjects | 7 contained |
பொருளாதார வட்டாரங்கள் | 1 contained |
ம.மே.சு. (2018) | 0.794[2] high · 8th |
இணையதளம் | skfo |
வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் (North Caucasian Federal District,உருசியம்: Се́веро-Кавка́зский федера́льный о́круг, Severo-Kavkazsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தீவிர தெற்கு உருசியாவில், வடக்கு காகசஸின் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நடுவண் மாவட்டம் 19 சனவரி 2010 அன்று தெற்கு நடுவண் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. நடுவண் மாவட்டத்தில் உள்ளடக்கிய பகுதிகளின் மக்கள் தொகையானது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,428,826 ஆக இருந்தது. பரப்பளவு 170,400 சதுர கிலோமீட்டர்கள் (65,800 sq mi) ஆகும். தற்போதைய ஜனாதிபதி தூதர் யூரி சைகா ஆவார்.

மக்கள்வகைப்பாடு
[தொகு]2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் உருசிய இனத்தவர் 2,854,040 (30.26%) என மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களாக உள்ளனர். ஆனால் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசத்தில் 80% பெரும்பான்மையாக உருசியர்கள் உள்ளனர். மேலும் வடக்கு ஒசேத்திய-அலனீயா, கபர்தினோ-பல்கரீயா, மற்றும் காராசாய்-செர்கெஸ்ஸியா போன்ற பகுதிகளில் உருசியர்களின் எண்ணிக்கை 20% என குறைவாகவே உள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் செச்சன மொழி பேசும் முஸ்லீம் இனத்தினரும், பழங்குடி குழுவினருமே உள்ளனர். மேலும் வடக்கு காகசஸ் நடுவண் மாவட்டமே உருசியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும்.
நடுவண் பகுதி பிரிவுகள்
[தொகு]link=|வடக்கு காகசியன் கூட்டாட்சி மாவட்டம் வரைபடம் உருசிய அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. | ||||||
---|---|---|---|---|---|---|
# | கொடி | மாகாணங்கள் | பரப்பளவு கிமீ 2இல் | மக்கள் தொகை 2010 கணக்கெடுப்பின்படி |
மக்கள் தொகை ஜன., 1, 2012 கணக்கீடின்படி |
தலைநகரம் / நிர்வாக மையம் |
1 | ![]() |
தாகெஸ்தான் குடியரசு | 50,300 | 2,910,249 | 2,931,291 | மகச்சலா |
2 | ![]() |
இங்குசேத்தியா குடியரசு | 3,600 | 412,520 | 429,458 | மாகஸ் |
3 | ![]() |
கபார்டினோ-பால்கரியன் குடியரசு | 12,500 | 859,939 | 859,149 | நல்சிக் |
4 | ![]() |
கராச்சே-செர்கெஸ் குடியரசு | 14,300 | 477,859 | 474,787 | செர்கெஸ்க் |
5 | ![]() |
வடக்கு ஒசேஷியா-அலானியா குடியரசு | 8,000 | 712,980 | 709,398 | விளாடிகாவ்காஸ் |
6 | ![]() |
ஸ்தாவ்ரபோல் பிரதேசம் | 66,200 | 2,786,281 | 2,786,727 | ஸ்டாவ்ரோபோல் |
7 | ![]() |
செச்சென் குடியரசு | 15,600 | 1,268,989 | 1,303,423 | குரோசுனி |
மொத்த கருவுறுதல் வீதம்
[தொகு]- 2005 - 1.64
- 2010 - 1.99
- 2015 - 1.98
- 2019 - 1.78
குறிப்புகள்
[தொகு]- ↑ "1.1. ОСНОВНЫЕ СОЦИАЛЬНО-ЭКОНОМИЧЕСКИЕ ПОКАЗАТЕЛИ в 2014 г." [MAIN SOCIOECONOMIC INDICATORS 2014]. Regions of Russia. Socioeconomic indicators - 2015 (in ரஷியன்). Russian Federal State Statistics Service. Archived from the original on 26 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.