நவம்பர் 2006
Appearance
நவம்பர் 2006 செய்தித் தொகுப்பு
[தொகு]- நவம்பர் 29, 2006 - கூகிள் விடைகள் சேவை நிறுத்தம்[தொடர்பிழந்த இணைப்பு].
- நவம்பர் 27, 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2006 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத் தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
- நவம்பர் 24, 2006 - முறையின்றியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட வீடுகளினால் சென்னை மாநகரமானது வாழ இயலாத நகரமாக உள்ளதாக தமிழக அரசின் மீது உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.
- நவம்பர் 10, 2006 - யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை இந்திய நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
- நவம்பர் 8, 2006 - வாகரையில் இடம்பெயர்ந்த தமிழர்கள், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் 53 பேர் உயிரிழந்தனர்; 130 பேர் படுகாயமுற்றனர். பார்க்க - வாகரை குண்டுத்தாக்குதல்
- நவம்பர் 5, 2006 - பாக்தாத் நீதிமன்றம் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தது.