நடராஜா ரவிராஜ்
நடராஜா ரவிராஜ் Nadarajah Raviraj | |
---|---|
![]() | |
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2006 | |
பின்வந்தவர் | ந. சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
யாழ்ப்பாண நகர முதல்வர் | |
பதவியில் 2001–2001 | |
முன்னவர் | பொன் சிவபாலன், தமிழர் விடுதலைக் கூட்டணி |
யாழ்ப்பாண நகர துணை முதல்வர் | |
பதவியில் 1998–2001 | |
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 1998–2001 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூன் 25, 1962 சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | நவம்பர் 10, 2006 கொழும்பு, இலங்கை | (அகவை 44)
தேசியம் | ஈழத்தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
படித்த கல்வி நிறுவனங்கள் | சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி யாழ் பரி யோவான் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | சைவம் |
நடராஜா ரவிராஜ் (Nadaraja Raviraj, ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
அரசியலில் இணைவு[தொகு]
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
படுகொலை[தொகு]
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.[1] கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.
ஒரு டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.[2] இலங்கை படைத்துறையின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.[3]
விருதுகள்[தொகு]
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழங்கப்பட்டது.
பங்களிப்பு[தொகு]
இவர் தென்மராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வீதி புனரமைப்பு மற்றும் மின்சார புனரமைப்பு போன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தென்மராட்சியின் பல சிறிய கிராமங்கள் வளர்ச்சி அடைய காரணமாயிருந்தன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "MP Raviraj Assassinated". Department of Government Information. 10 நவம்பர் 2006. http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=1116&Itemid=44.
- ↑ "TNA Parliamentarian Raviraj Gunned Down". Media Center for National Security. 10 நவம்பர் 2006. Archived from the original on 2012-02-05. https://web.archive.org/web/20120205014910/http://www.nationalsecurity.lk/fullnews.php?id=2133.
- ↑ "TNA Parliamentarian Nadarajah Raviraj shot dead near Military Police HQ". LankaeNews. 10 நவம்பர் 2006. Archived from the original on 2007-09-28. https://web.archive.org/web/20070928085652/http://www.lankaenews.com/English/news.php?id=3325.
வெளி இணைப்புகள்[தொகு]
- த.தே.கூ. நாடளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை பரணிடப்பட்டது 2006-11-20 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lankan MP killed in Colombo (BBC)
- Tragic demise of Nadarajah Raviraj in Colombo பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- ரவிராஜூக்கு "மாமனிதர்" விருது பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்
- யாழில் ரவிராஜின் புகழுடல் பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. ரவிராஜ் கொலை வழக்கில் 3 இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது பரணிடப்பட்டது 2015-04-03 at the வந்தவழி இயந்திரம்
- 1962 பிறப்புகள்
- 2006 இறப்புகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- மாமனிதர் விருது பெற்றவர்கள்
- இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- கொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கை இந்துக்கள்
- தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாண முதல்வர்கள்