டிசம்பர் 2015
<< | திசம்பர் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
டிசம்பர் 2015 (December 2015), 2015 ஆம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- டிசம்பர் 4 (கார்த்திகை 18) - மெய்ப்பொருள் நாயனார் குருபூசை
- டிசம்பர் 6 (கார்த்திகை 20) - ஆனாய நாயனார் குருபூசை
- டிசம்பர் 10 (கார்த்திகை 24) - போதாயன அமாவாசை
- டிசம்பர் 12 (கார்த்திகை 26) - மூர்க்க நாயனார் குருபூசை
- டிசம்பர் 13 (கார்த்திகை 27) - சிறப்புலி நாயனார் குருபூசை
- டிசம்பர் 25 - நத்தார்
நிகழ்வுகள்
[தொகு]- டிசம்பர் 31:
- அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் பக்கமாக வரலாறு காணா பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் உணவு விடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. 14 பேர் காயமடைந்தனர். (சீஎனென்)
- டிசம்பர் 30:
- சிரிய உள்நாட்டுப் போர்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அசிரியக் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட பல தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். (ஆர்டி)
- டிசம்பர் 29:
- பாக்கித்தான், மார்தான் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- கினியில் எபோலா தீநுண்ம நோய் முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)
- டிசம்பர் 28:
- சிரியாவின் ஓம்சு நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கொரியப் பெண்களை அடிமைகளாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சையை சப்பானும், தென் கொரியாவும் சுமுகமாகத் தீர்க்க முடிவு செய்தன. சப்பானியப் பிரதமர் சின்சோ அபே "ஆறுதலளிக்கும் பெண்கள்" அமைப்பிடம் பொதுவான மன்னிப்பு கேட்பதாகவும், ஒரு பில்லியன் யென் உதவித்தொகை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. (ராய்ட்டர்சு)
- டிசம்பர் 27:
- ஈராக்கியப் படைகள் தாம் ரமாதி நகரை இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். (ராய்ட்டர்சு)
- டிசம்பர் 26:
- ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீ பரவியதில் 116 வீடுகள் தீக்கிரையாகின. (ஸ்கை நியூசு)
- டிசம்பர் 25:
- சிரிய உள்நாட்டுப் போர்: டமாஸ்கஸ் நகரின் கிழக்கே உருசியா மேற்கொண்ட வான்தாக்குதலில் ஜாயிசு அல்-இசுலாம் இயக்கத்தின் நிறுவனர், பிரதித் தலைவர் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். (நியூஸ் ஹப்)
- ஆப்கானித்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற 6.3-அளவு நிலநடுக்கத்தினால் பாக்கித்தான், பெசாவர் நகரில் 17 பேர் உயிரிழந்தனர், ஆப்கானித்தானில் 5 பேர் காயமடைந்தனர். (என்பிசி), (சீஎனென்)
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பாக்கித்தானுக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்டார். (சீஎனென்) (தி இந்து)
- டிசம்பர் 24:
- சவூதி அரேபியாவின் ஜிசான் நகர மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (அல்ஜசீரா) (ராய்ட்டர்சு)
- நைஜீரியாவில் எல்பிஜி வாயுக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (பிபிசி) (வங்கார்டு)
- ஈரான், தெகுரான் நகரில் 1979 ஆம் ஆண்டில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 53 அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் $4.4 மில்லியன் டாலர்களை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. (ஏபிசி)
- டிசம்பர் 23:
- ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரைத் தாம் கைது செய்துள்ளதாக ஆத்திரேலியக் காவல்துறையினர் அறிவித்தனர். (ஏபிசி) (ராய்ட்டர்சு)
- சோமாலியா, தஜிகிஸ்தான், புரூணை ஆகிய இசுலாமிய நாடுகள் கிறித்துமசு பண்டிகையைக் கொண்டாடுவதைத் தடை செய்துள்ளன. மீறுபவர்களுக்கு ஆகக் கூடியது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை அறிவித்தன. (கார்டியன்)
- டிசம்பர் 22:
- ராஞ்சி நோக்கிச் சென்ற இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் ஒன்று புது தில்லிக்கு வெளியே வீழ்ந்ததில் விமானத்தில் பயணம் செய்த அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)(ஏபி)
- டெங்கு தடுப்பு மருந்தைப் பயன்படுத்த பிலிப்பீன்சு அனுமதி அளித்தது. உலகிலேயே டெங்கு தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக (மெக்சிக்கோவிற்கு அடுத்தபடியாக) பிலிப்பீன்சு விளங்குகிறது. (ராப்பிலர்) (சீஎனென்)
- கொலொம்பியாவில் மருத்துவத்திற்காகக் கஞ்சா வளர்ப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. (பிபிசி)
- விண்வெளிப் பயணத்தை முடித்த பின்னர் ராக்கெட்டை மீண்டும் தரையில் பாதுகாப்பாக இறக்கும் சாதனையை அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் எசுபேசுஎக்சு படைத்துள்ளது. (என்பிசி)
- டிசம்பர் 21:
- ஆப்கானித்தான் பார்வான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது ஆறு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு) (வாசிங்டன் போஸ்ட்)
- ஈராக்கின் மோசுல் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இசுலாமிய அரசுப் போராளிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- ஓரின, மற்றும் இருபால் சேர்க்கை ஆண்களிடம் இருந்து குருதிக் கொடை பெறுவதற்கு 32-ஆண்டுகளாக இருந்த தடையை அமெரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது. (கார்டியன்),(வாசிங்டன் போஸ்ட்)
- சுலோவீனியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்க இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 36% மக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். (சீஎனென்)
- டிசம்பர் 20:
- உருசியா ஏவியதாக நம்பப்படும் ஏவுகணைகள் சிரியாவின் வடமேற்கே போராளிகள் வசமுள்ள இத்லிப் நகரில் உள்ள சந்தைப் பகுதியைத் தாக்கியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சீனாவின் சென்சென் நகரில் இடம்பெற்ற நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் சேதமடைந்தன. குறைந்தது 91 பேரைக் காணவில்லை. (சீஎனென்)
- நோர்வேயின் சுவால்பார்து தீவில் பனிச்சரிவு ஏற்பட்டதில், ஒருவர் கொல்லப்பட்டார். பல வீடுகள் சேதமடைந்தன. (ஏபி)
- இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுக் கடற்பரப்பில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியது. மூவர் கொல்லப்பட்டனர், 39 பேர் மீட்கப்பட்டனர், 77 பேரைக் காணவில்லை. (பெனார்நியூசு)
- இலங்கையின் வடக்கே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் "தமிழ் மக்கள் பேரவை" என்ற அரசியல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. (ஐலண்டு)
- டிசம்பர் 19:
- ஈராக்கில் அமெரிக்கப் போர் விமானம் தவறுதலாகத் தாக்கியதில் 10 ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் ப்கொல்லப்பட்டனர். (வாசிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 18:
- ஏமனில் இருந்து சவூதி அரேபியா நோக்கி இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் ஒன்று நஜ்ரான் நகரருகே வீழ்ந்தது. மற்றையது சவூதி வான் காப்புப் பிரிவினரால் தடுகிகப்பட்டது. (ஏஎஃப்பி)
- அன்னை தெரேசா புனிதர் பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர் என வத்திக்கான் அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி),(இந்து)
- டிசம்பர் 17:
- லிபியாவில் சண்டையிடும் குழுக்கள் சில தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் அமைக்கும் நோக்கில் ஐநா-ஆதரவு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன. (ராய்ட்டர்சு) (அல் அராபியா)
- நைஜரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசுத்தலைவர் அறிவித்துள்ளார். (கார்டியன்)
- மெக்சிக்கோவின் சியாப்பாசு மாநிலத்தில் 6.4-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. சேத விபரங்கள் இல்லை. (ராய்ட்டர்சு)
- ஆண்டுதோறும் குருதிப் பரிசோதனை செய்வது பெண்களுக்கு ஏற்படும் சூல்பைப் புற்றுநோயை 20 விழுக்காடுகள் குறைக்கும் என இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளர்கள் தெரிவித்தனர். (சிபிஎஸ்)
- டிசம்பர் 16:
- மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா தொழினுட்பப் பணியாளர் ஒருவர் ஏர்பஸ் ஏ319 விமானத்தின் இயந்திரத்தினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். (பிடிஐ)
- அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் வணிக வான்போக்குவரத்துக்களை மீண்டும் கொண்டுவர இரு நாடுகளும் உடன்பட்டன. (ஏபி)
- உருசியாவில் இருந்து லாத்வியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் பொருட்டு லாத்வியா உருசியாவினுடனான எல்லையின் மூன்றில் ஒரு பகுதிக்கு சுவர் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தது. (பிசினெசு இன்சைடர்)
- டிசம்பர் 15:
- தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, மலேசியா, பாக்கித்தான் உட்பட 34-நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இசுலாமிய இராணுவக் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்தது. (எஸ்பிஎஸ்)
- உருசிய, அமெரிக்க, மற்றும் பிரித்தானிய விண்வெளி வீரர்கள் மூவரை ஏற்றிக் கொண்டு சோயுஸ் டிஎம்ஏ-19எம் பைக்கனூரில் இருந்து அனைத்துலக விண்வெளி நிலையம் நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது. (டெய்லி டெலிகிராப்)
- டிசம்பர் 6:
- ஏமனில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஏடன் மாநில ஆளுனர் கொல்லப்பட்டார். இசுலாமிய அரசு உரிமை கோரியுள்ளது. (ராய்ட்டர்சு), (பிபிசி)
- பின்லாந்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் மாதம் €800 வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. (யாகூ)
- 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்: சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் வெள்ளம் வடிந்ததை அடுத்து உள்நாட்டு சேவைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. (ஐபிஎன்), (ஏஏபி)
- ஆர்மீனியாவில் சனாதிபதி ஆட்சிக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறையை அறிமுகப்படுத்த பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. (ரேடியோ லிபர்ட்டி)
- டிசம்பர் 5:
- இசுலாமிய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மோசுல் நகரத்திற்கு அருகில் உள்ள வடக்கு ஈராக் பகுதியில் இருந்து துருக்கிப் படைகள் வெளியேற வேண்டும் ஈராக்கிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. (ராய்ட்டர்சு)
- சாட்டில் இடம்பெற்ற மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- 300 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக கொலொம்பியா அறிவித்துள்ளது. (என்பிஆர்)
- இலங்கையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிந்ததை அடுத்து, பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டன. (பிபிசி)
- 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்:
- சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். (ஏபி)
- தமிழ்நாட்டில் இறந்தோரின் எண்ணிக்கை 280ஐத் தாண்டியது. சென்னையின் அரைவாசிக்கும் அதிகமான நகரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. (மலே மெயில்), (கல்ஃப் டுடே
- ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, மழை, மற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இலண்டனில் கடும் காற்றில் சிக்கிய நபர் ஒருவர் பேருந்தில் மோதி உயிரிழந்தார். (பிபிசி),(பிபிசி)
- டிசம்பர் 4:
- ஆப்கானித்தானின் மத்திய வர்தாக் மாகாணத்தில் நடத்தப்பட்ட மோர்ட்டார் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் (டோலோ)
- எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உணவகம் ஒன்றின் மீது எரிகுண்டு வீசப்பட்டதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்: சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தண்ணீர், உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. (டைம்சு ஒஃப் இந்தியா)
- டிசம்பர் 3:
- ஐக்கிய இராச்சியத்தின் விமானப் படையினர் சிரியாவில் இசுலாமிய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல்கள் நடத்தின. (ஸ்கை)
- உருசியா தனது எஸ்-300 ஏவுகணைகளை ஈரானுக்கு வழங்கியது. (ராய்ட்டர்சு)
- தனது காதலியைக் கொன்ற குற்றத்திற்காக தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (என்பிசி)
- 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்:
- சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பமாயின. (பிபிசி),(பிபிசி)
- வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை தமிழ்நாட்டில் குறைந்தது 269 பேரும், ஆந்திராவில் 54 பேரும் உயிரிழந்தனர் என இந்திய நடுவண் உட்துறை அமைச்சர் அறிவித்தார். (இண்டியன் எக்சுபிரசு)
- டிசம்பர் 2:
- ஏமனின் தெற்கு அபிய மாநிலத்தின் தலைநகர் சிங்ஜிபார் நகரை அல் காயிதா போராளிகள் வசம் வந்தது. (சீஎனென்)
- சிரியாவில் இசுலாமிய அரசுப் போராளிகளின் தளங்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 397-223 என்ற கணக்கில் வாக்களித்தது. (ஜர்னல்)
- நவம்பர் 2015 தென்னிந்திய மழை வெள்ளம்:
- இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வரலாறு காணாத அளவு இடம்பெற்ற மழை வீழ்ச்சியினால் சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறைந்தது 188 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். (தி இந்து)
- சென்னையின் தாழ்பகுதிகளில் இந்தியக் கடற்படை, மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். (என்டிடிவி),(ஐபிஎன்)
- வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்பட்டது. (பிபிசி)
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- டிசம்பர் 1:
- அசர்பைஜான் பாதுகாப்புப் படையினர் தலைநகர் பக்கூவின் புறநகரான நர்தரானில் இசுலாமியப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். (தாஸ்)
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- டிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- டிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- டிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- டிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்