சின்சோ அபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்சோ அபே
Shinzo Abe
2020 இல் அபே
சப்பான் பிரதமர்
பதவியில்
26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020
ஆட்சியாளர்கள்
Deputyடாரோ ஆசோ
முன்னையவர்யோஷிஹிகோ நோடா
பின்னவர்யோசிகிதே சூகா
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
ஆட்சியாளர்அக்கிகித்தோ
முன்னையவர்ஜூனிசிரோ கொய்சுமி
பின்னவர்யாசுவோ ஃபுக்குடா
தாராண்மைவாத சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில்
26 செப்டம்பர் 2012 – 14 செப்டம்பர் 2020
முன்னையவர்சதக்காசு தனிகாக்கி
பின்னவர்யோசிகிதே சூகா
பதவியில்
20 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
முன்னையவர்யுனிச்சீரோ கொய்சூமி
பின்னவர்யாசுவோ ஃபுக்குடா
அமைச்சரவை தலைமைச் செயலாளர்
பதவியில்
31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006
பிரதமர்யுனிச்சீரோ கொய்சூமி
யமகூச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
20 அக்டோபர் 1996 – 8 சூலை 2022
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதி4-வது மாவட்டம்
பெரும்பான்மை86,258 (58.40%)
பதவியில்
18 சூலை 1993 – 20 அக்டோபர் 1996
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்மசகிக்கோ கோமுரா
தொகுதி1-வது மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அபே சின்சோ

(1954-09-21)21 செப்டம்பர் 1954
சிஞ்சுக்கு, தோக்கியோ, யப்பான்
இறப்பு8 சூலை 2022(2022-07-08) (அகவை 67)
கசிகாரா, நாரா, யப்பான்
காரணம் of deathசுட்டுக்கொலை
அரசியல் கட்சிதாராண்மைவாத சனநாயகக் கட்சி
துணைவர்அக்கி அபே (திரு. 1987)
பெற்றோர்s
  • சிந்தாரோ அபே (father)
  • யோக்கோ அபே (mother)
முன்னாள் கல்லூரி
கையெழுத்து

ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo) (21 செப்டம்பர் 1954 - 8 சூலை 2022) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[1] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.

இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[2]

மீண்டும் பிரதமர் பதவியில்[தொகு]

திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[4]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[5]

இறப்பு[தொகு]

8 சூலை 2022 அன்று காலை தோக்கியோவிலிருந்து தெற்கில் 300 மைல் தொலைவில் உள்ள தெற்கு நாராவில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தாராளவாத மக்களாட்சி கட்சியின் கேய் சட்டோவுக்காக பேசிக்கொண்டிருந்த போது 41 வயதுடைய நாட்டு துப்பாக்கி மூலம் முன்னாள் இராணுவ வீரர் யமகாமியால் உள்ளூர் நேரம் 11.30இக்கு இருமுறை சுடப்பட்டார்.[6] அதிக இரத்த இழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shinzo Abe to Succeed Koizumi as Japan's Next Prime Minister Bloomberg
  2. "பத்ம விருதுகள்". தி இந்து. சனவரி 21, 2021. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி,2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. http://tamil24news.com/news/?p=48788[தொடர்பிழந்த இணைப்பு] ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து
  4. Profile: Shinzo Abe பிபிசி செய்திகள்
  5. Shinzo Abe the Chief Cabinet Secretary பரணிடப்பட்டது 2011-04-12 at the வந்தவழி இயந்திரம் சினோசோ அபேயின் தளம்
  6. "'Shinzo Abe: Japan ex-leader's alleged killer held grudge against group - police". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-07-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
  7. "Shinzo Abe: Killing of Japan's ex-PM described as 'barbaric'". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-07-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்சோ_அபே&oldid=3860804" இலிருந்து மீள்விக்கப்பட்டது