உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம்
Федеральное космическое агентство России
Roscosmos logo ru.svg
உரோசுகோசுமோசின் சின்னம்
உரிமையாளர் உருசியா
நிறுவியது1992
(முன்னதாக சோவியத் விண்வெளித் திட்டம், 1931-1991)
தலைமையகம்இஷ்செப்கின் சாலை 42, மாஸ்கோ
முதன்மை விண்வெளி நிலையம்பைக்கனூர் விண்வெளி நிலையம்
பிளெசெட்ஸ்க் விண்வெளி நிலையம்
மேலாளர்ஒலெக் ஓசுடாபென்கோ
செலவு169.8 பில்லியன் RUB ($5.6 பில்லியன்) (2013)[1]
இணையதளம்roscosmos.ru

உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் (Russian Federal Space Agency, உருசியம்: Федеральное космическое агентство России), வழமையாக உரோசுகோசுமோசு (Роскосмос Russpace) [ஆங்கில சுருக்குப் பெயர்களாக FKA (ФКА) மற்றும் RKA (РКА)] உருசியாவின் விண்வெளி அறிவியல் திட்டத்திற்கும் பொதுவான விண்வெளியியல் ஆய்வுக்கும் பொறுப்புள்ள அரசு அமைப்பாகும். இது முன்னதாக உருசிய வான்பயண விண்வெளி நிறுவனம் (உருசியம்: Российское авиационно-космическое агентство) என அழைக்கப்பட்டு வந்தது.

இதன் தலைமையகம் மாஸ்கோவில் அமைந்துள்ளது. முதன்மையான திட்டக் கட்டுப்பாடு விண்பயண இயக்க மையம் அண்மையிலுள்ள கோரோலெவ் நகரில் அமைந்துள்ளது. காகரின் வானோடிகள் பயிற்சி மையம் (GCTC) இசுடார் சிட்டியில் அமைந்துள்ளது. விண்வெளி உந்துகைகளுக்கு கசக்ஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வெளி நிலையமும் (பெரும்பாலான ஏவல்கள், ஆளுள்ளதும் ஆளில்லாததும், இங்கிருந்தே நிகழ்கின்றன) வடக்கு உருசியாவிலுள்ள பிளெசெட்ஸ்க் விண்வெளி நிலையமும் (Plesetsk Cosmodrome) (முதன்மையாக ஆளில்லா படைத்துறை பயன்பாடுகளுக்கு) பயன்படுத்தப்படுகின்றன.

அக்டோபர் 10, 2013 முதல் பொது இயக்குனராக ஒலெக் ஓஸ்டாபென்கோ பொறுப்பேற்றுள்ளார்.

உருசிய (சோவியத்) விண்வெளி வரலாற்றுக் காட்சிக்கூடம்[தொகு]

நபர்கள்[தொகு]

விண்கலங்கள்[தொகு]

ஏவுகை வாகனங்கள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]