சோயூசு ஏவுகலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோயூசு
ஏவுதளத்தில் உள்ளதோர் சோயூசு-யூ ஏவுகலம்
ஏவுதளத்தில் உள்ளதோர் சோயூசு-யூ ஏவுகலம்
தரவுகள்
இயக்கம் செலுத்து வாகனம்
அமைப்பு ஓகேபி
டிஎஸ்எஸ்கேபி-புரோக்கிரசு
நாடு  சோவியத் ஒன்றியம்
 உருசியா
அளவு


படிகள் 3
Associated Rockets
திட்டம் R-7
ஏவு வரலாறு
நிலை செயற்பாட்டில்
ஏவல் பகுதி பைக்கோனுர் விண்வெளி ஏவுதளம்,
முதல் பயணம் 28 நவம்பர் 1966
Notable payloads சோயூசு விண்கலம்
புரோகிரஸ் விண்கலம்

சோயூசு (Soyuz, உருசியம்: Союз, பொருள்: "ஒன்றியம்", GRAU குறியீடு 11A511) ஓகேபி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு டிஎஸ்எஸ்கேபி-புரோக்கிரசால் தயாரிக்கப்படும் மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்புகள் ஆகும். சோயூசு ஏவுகலம் தான் உலகில் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் செலுத்து வாகனம் ஆகும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.[1]

2011இல் ஐக்கிய அமெரிக்க விண்ணோடத் திட்டம் முடிவுக்கு வந்தநிலையில் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் விண்ணோடிகளின் போக்குவரத்திற்கு சோயூசு ஏவுகலங்கள் மட்டுமே உள்ளன.

சோயூசுத் திட்டத்தின் அங்கமாக மனிதர் பயணிக்கும் சோயூசு விண்கலங்களை விண்ணிற்கு ஏவ சோயூசு ஏவூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு தானியங்கு புரோகிரசு வழங்கல் விண்கலங்களை செலுத்தவும் இசுடார்செம், ஆரியனிசுப்பேசு நிறவனங்களால் வணிகமுறையில் சந்தைப்படுத்தப்பட்டு இயக்கப்படும் செய்மதி ஏவுதல்களுக்கும் பயனாகிறது. அனைத்து சோயூசு ஏவூர்திகளும் ஆர்பி-1, நீர்ம ஆக்சிசன் உந்துப்பொருளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதற்கு அமெரிக்கக் காங்கிரசு நூலகம் ஏ-2 என்ற குறியீட்டை வழங்கியுள்ளது. சோயூசு இரக ஏவூர்திகள் ஆர்-7 குடும்பத்தைச் சேர்ந்தவை.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Soyuz launch vehicle: The most reliable means of space travel". ஐரோப்பாan Space Agency. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயூசு_ஏவுகலங்கள்&oldid=3044195" இலிருந்து மீள்விக்கப்பட்டது