ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
Jump to navigation
Jump to search
![]() | |
உரிமையாளர் | 18 ஐரோப்பிய நாடுகள்
|
---|---|
நிறுவியது | 1975 |
தலைமையகம் | பாரிசு |
முதன்மை விண்வெளி நிலையம் | கயானா விண்வெளி மையம் |
மேலாளர் | சான்-சாக் டோர்டெயின் |
செலவு | ▲ €3.99 பில்லியன் (2011)[1] |
அலுவலக மொழி(கள்) | ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு[2] |
இணையதளம் | www.esa.int |
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency, சுருக்கமாக ஈசா (ESA) விண்வெளி ஆய்வுக்காக 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் தற்போது 18 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதன் தலைமை அலுவலகம் பாரிசில் உள்ளது. 2,000 பேர் வரை இங்கு பணியாற்றுகிறார்கள்[1].
ஈசாவின் விண்வெளித் திட்டங்களில், விண்வெளிக்கான மனிதப் பயணம், முக்கியமாக அனைத்துலக விண்வெளி நிலையம் ஊடாக மனிதர்களை அனுப்புதல், கோள்கள், மற்றும் சந்திரன், ஏனைய விண்பொருட்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புதல், பூமியை ஆராய்தல், தொலைத்தொடர்பு ஆகியவை முக்கியமானவையாகும். பிரெஞ்சு கயானாவில் உள்ல கயானா விண்வெளி மையத்தை இது நிருவகித்து வருகிறது. ஆரியான் 5 என்ற ஏவுகலத்தை ஆரியான்ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் ஊடாக நிருவகித்து வருகிறது.
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 de Selding, Peter (21 January 2011). "ESA Budget Rises to $4B as 14 Nations Boost Contributions". Spaceflight Now.
- ↑ "Convention for the establishment of a European Space Agency" (PDF). ESA (2003). பார்த்த நாள் 2008-12-29.