உள்ளடக்கத்துக்குச் செல்

இடாய்ச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடாய்ச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இடாய்ட்சு (செருமன்)
Deutsch
உச்சரிப்பு[dɔʏtʃ]
நாடு(கள்)இடாய்ட்சுலாந்து, ஆத்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி (Province of Bolzano-Bozen) லெய்செஸ்டீன், லக்சம்பர்க், டென்மார்க், பெல்ச்சியம்
பிராந்தியம்German-speaking Europe, German diaspora worldwide
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி: ஏறக்குறைய 105 மில்லியன்[1][2]
தாய்மொழியாக இல்லாதோர் பேசும் தொகை: ஏறத்தாழ 80 மில்லியன்[1]  (date missing)
இலத்தீன் எழுத்து (இடாய்ட்சுக் கிளை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ஆஸ்திரியா ஆஸ்திரியா

பெல்ஜியம் பெல்ஜியம்
இத்தாலி Province of Bolzano-Bozen, இத்தாலி
செருமனி செருமனி
லீக்கின்ஸ்டைன் லெய்செஸ்டீன்
லக்சம்பர்க் லக்சம்பர்க்
சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
(official and working language)


ஏனைய நாடுகள்:

Krahule/Blaufuß, சிலோவாக்கியா (Official municipal language)[3]
நமீபியா (National language; official language 1984–90)[4]
போலந்து (Auxiliary language in 17 municipalities in Opole Voivodeship)[5]
வத்திக்கான் நகர் (Administrative and commanding language of the Swiss Guard)[6]


Recognised minority language in:

செக் குடியரசு செக் குடியரசு[7]
டென்மார்க் டென்மார்க்[8]
அங்கேரி அங்கேரி[9]

நமீபியா நமீபியா[10]
உருமேனியா ருமேனியா[11]
சிலோவாக்கியா சுலோவாக்கியா,[1][3]
போலந்து போலந்து
மொழி கட்டுப்பாடுRat für deutsche Rechtschreibung
மொழிக் குறியீடுகள்
ISO 639-1de
ISO 639-2ger (B)
deu (T)
ISO 639-3Variously:
deu — New High German
gmh — Middle High German
goh — Old High German
gct — Alemán Coloniero
bar — Austro-Bavarian
cim — Cimbrian
geh — Hutterite German
ksh — Kölsch
nds — Low German
sli — Lower Silesian
ltz — Luxembourgish
vmf — Main-Franconian
mhn — Mócheno
pfl — Palatinate German
pdc — Pennsylvania German
pdt — Plautdietsch
swg — Swabian German
gsw — Swiss German
uln — Unserdeutsch
sxu — Upper Saxon
wae — Walser German
wep — Westphalian
  அரசகரும மற்றும் பெரும்பான்மை மொழி
  அரசகரும மற்றும் சிறுபான்மை மொழி
  பரவலாகப் பேசப்படும் இடங்கள்
  பிராந்தியங்கள்

இடாய்ச்சு மொழி (ஜெர்மன், Deutsch - டாய்ட்ஷ்) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும்.[12] ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.[13] பல சொற்கள் இலத்தீன், கிரேக்கத்திலிருந்தும், சில சொற்கள் பிரெஞ்சு, ஆங்கிலத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இடாய்ச்சு மொழியைப் போலவே உள்ள மொழிகள் இலுகுசெம்பூர்கிய மொழி, டச்சு, பிரிசியன், ஆங்கிலம் மற்றும் இசுகாண்டிநேவிய மொழிகளாகும்.

இடாய்ச்சு இலத்தீன் அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது.

ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது.

இடாய்ச்சு மொழி ஜெர்மனி, ஆசுதிரியா, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளில் அலுவல்மொழியாகவும் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இத்தாலி, சுலோவீனியா, அங்கேரி, நமீபியா, போலந்து போன்ற பல நாடுகளில் சிறுபான்மை மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மிகவும் பயன்படுத்தப்படும் மொழியாக அறிவியலில் இரண்டாவதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் மூன்றாவதாகவும் உள்ளது; வணிகம் மற்றும் பண்பாட்டில் முதன்மையான மொழியாக விளங்குகின்றது. உலகளவில், புதிய நூல்கள் வெளியிடுவதில் இடாய்ச்சு மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகின் அனைத்து நூல்களிலும் (மின்னூல்கள் உட்பட) பத்தில் ஒன்று இடாய்ச்சில் உள்ளது.[14][15] இணையதளங்களில் உள்ளுரைக்காக மிகவும் பயன்படுத்தப்படும் மொழிகளில் மூன்றாவதாக உள்ளது.[16]

இடாய்ச்சு எழுத்துக்கள்

[தொகு]
a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
ä, ö, ü , ß = (ss)
Ä, Ö, Ü

a – அ
b – பே (ஆங்கில சொல் bay போன்ற உச்சரிப்பு)
c – சே (ஆங்கில சொல் say போன்ற உச்சரிப்பு)
d – டே (ஆங்கில சொல் day போன்ற உச்சரிப்பு)
e – ஏ
f – எவ் (ஆங்கில எழுத்து f போன்ற உச்சரிப்பு)
g – கே (ஆங்கில சொல் good போன்ற உச்சரிப்பு)
h – ஹா
i – ஈ
j – யோட்
k – கா
l – எல்
m – எம்
n – என்
o – ஒ
p – பே
q – கு
r – எர்
s – எஸ்
t – ரே (ஆங்கிலத்தில் tஏ)
u – உ
v – பௌ (ஆங்கிலத்தில் fஒள)
w – வே
x – இக்ஸ்
y – இப்சிலோன்
z – செட் (ஆங்கில சொல் set போன்ற உச்சரிப்பு)
ä – எய் (ஆங்கிலத்தில் eh)
ö – ஒய்
ü – உய்
தமிழில் இடாய்ச்சில் IPA
இடாய்ச்சு Deutsch /dɔɪ̯tʃ/
வணக்கம் Hallo /ˈhaloː/
நான் ஹன்ஸ் என்று அழைக்கப்படுகிறேன். Ich heiße Hans. /ʔɪç haɪ̯sə hans/
என் பெயர் ஹன்ஸ். Mein Name ist Hans. /maɪ̯n namə ʔɪst hans/
எப்படி இருக்கிறீர்கள்? Wie geht es Ihnen? (மரியாதையாக) /viː geːt es iːnən/
எப்படி இருக்கின்றாய்? Wie geht es dir? /viː geːt es iːnən/
காலை வணக்கம் Guten Morgen /ˈguːtən ˈmɔɐ̯gən/
இனிய நாள் ( பகல் வணக்கம்) Guten Tag /ˈguːtən taːk/
மாலை வணக்கம் Guten Abend /ˈguːtən ˈaːbənt/
இரவு வணக்கம் Gute Nacht /ˈguːtə naχt/
மீண்டும் சந்திப்போம் Auf Wiedersehen /ʔaʊ̯f ˈviːdɐˌzeːn/
தயவுசெய்து Bitte /ˈbɪtə/
நன்றி Danke /ˈdaŋkə/
அது Das /das/
எவ்வளவு? Wieviel? /vi fiːl/
ஆம் Ja /jaː/
இல்லை Nein /naɪ̯n/
தயவுசெய்து, எனக்கு அது வேண்டும் Ich möchte das, bitte /ʔɪç mœçtə das ˈbɪtə/
கழிவறை எங்கு இருக்கிறது? Wo ist die Toilette? /voː ʔɪst diː toa̯ˈlɛtə/
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? Sprechen Sie Englisch? /ˈʃprɛçən ziː ˈʔɛŋlɪʃ/
எனக்குப் புரியவில்லை Ich verstehe nicht /ʔɪç fɐˈʃteːə nɪçt/
மன்னிக்கவும் Entschuldigung /ʔɛntˈʃʊldɪgʊŋ/
எனக்குத் தெரியவில்லை Ich weiß nicht /ʔɪç vaɪ̯s nɪçt/
  • ja – ஆமாம் – யா
  • nein – இல்லை – னைன்
  • danke – நன்றி – டான்க
  • vielen Dank – மிக்க நன்றி – ஃவீலன் டான்க்
  • bitte schön – நன்றி – பிட்ட ஷேன்
  • bitte – தயவுசெய்து – பிட்ட
  • entschuldigen Sie – மன்னித்துவிடுங்கள் – என்ஷூல்டிகன் சீ
  • guten Tag – வணக்கம் – கூடன் டாக்
  • auf wiedersehen - மீண்டும் சந்திப்போம் – ஆஃப் விடர்சேகென்
  • tschüss – போய் வருகின்றேன் – சூஸ்
  • guten Morgen – காலை வணக்கம் – கூடன் மோர்கன்
  • gute Nacht – இரவு வணக்கம் – கூட்டெ நாஹ்ட்

இடாய்ச்சு இலக்கணம்

[தொகு]
Declension of the German definite articles, der, die and das ("the").

இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு மொழியில் சொற்கள் பால், இடம்,காலம் போன்றவற்றைப் பொறுத்து மாறும்; இம்மொழியில் ஆண், பெண், அஃறிணை என மூன்று பாலினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பல சொற்கள் வந்துள்ளன.

இடாய்ச்சு இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை.

யேர்மனிய மொழி der, die, das என்ற மூன்று Artikels ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம்.

இடாய்ச்சு மொழி பேசப்படும் நாடுகள்

[தொகு]

செருமனியின் குடிமைப்படுத்திய நமீபியாவிலும் செருமானியர்கள் புலம் பெயர்ந்த ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, டொமினிக்கன் குடியரசு, பிரேசில், அர்கெந்தீனா, பரகுவை, உருகுவை, சிலி, பெரு, வெனிசுவேலா, ஜோர்தான்,[17] தென்னாப்பிரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் இடாய்ச்சு மொழி பேசப்படுகின்றது. நமீபியாவில் செருமானிய நமீபியர்கள் இடாய்ச்சு கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர்.

நமீபியாவில் தினசரி வாழ்வில் இடாய்ச்சுப் பயன்படுத்தப்படுவதைக் காட்டும் படிமம்
ஐரோப்பா முழுமையிலும் இடாய்ச்சு அறிவு பெற்றோர். ஐரோப்பாவில் இடாய்ச்சைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 100 மில்லிநன் உள்ளனர்.

ஐரோப்பாவுக்கு வெளியே இடாய்ச்சு மொழியை பேசுவோரின் தொகையை உள்ளடக்கியப் பட்டியல்:

நாடு இடாய்ச்சு மொழி பேசுவோர் தொகை (ஐரோப்பாவுக்கு வெளியே)[18]
 ஐக்கிய அமெரிக்கா 5,000,000
 கனடா 450,000
 பிரேசில் 1,400,000
 அர்கெந்தீனா 250,000
 மெக்சிக்கோ 200,000
 ஆத்திரேலியா 110,000
 தென்னாப்பிரிக்கா 75,000 (ஜேர்மனியை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் மட்டும்)[18]
 சிலி 50,000
 பரகுவை 30,000
 நியூசிலாந்து 37,500
 நமீபியா 30,000 (ஜேர்மனியை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் மட்டும்)[18]
 யோர்தான் 50,000
 வெனிசுவேலா 10,000

இலக்கியம்

[தொகு]

நடுக்காலம் தொட்டே இடாய்ச்சு மொழி செருமானிய இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தியக் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக வால்தர் பொன் டெர் வொகெல்வீடு, வொல்பிரம் பொன் சென்பேக் போன்றோரைக் குறிப்பிடலாம்.

யாரெழுதியது என அறியப்படாத நிபெலுங்கென்லீடு இக்காலத்தின் முதன்மை படைப்பாக உள்ளது. 19வது நூற்றாண்டில் யேகப் வில்கெம் கிரிம் தொகுத்து வெளியிட்ட தேவதைக் கதைகள் உலகெங்கும் பிரபலமாயிற்று.

இறைமையியலாளர் லூதர் விவிலியத்தை இடாய்ச்சில் மொழிபெயர்த்தார். இவரே தற்கால "உயர் இடாய்ச்சு" மொழிக்கு வித்திட்டதாக பலராலும் கருதப்படுகின்றார். லெசிங், கேத்தா, சில்லர், கிளெய்ஸ்ட், ஹாஃப்மேன், பிரெக்ட், ஹைய்ன், சுமிட் மிகவும் அறியப்பட்ட இடாய்ச்சுக் கவிஞர்களும் எழுத்தாளர்களுமாக உள்ளனர். பதின்மூன்று இடாய்ச்சுக் கலைஞர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்: மொம்சன், ருடோல்ஃப் கிறிஸ்டோப் யூக்கென், பவுல் பொன் எய்சு, கெர்கார்ட் ஆப்ட்மான், கார்ல் இசுப்பிட்லெர், தாமசு மாண், நெல்லி சாக்ஸ், ஹேர்மன் ஹெசே, போல், கனெட்டி, குந்தர் கிராசு, எல்பிரீடு யெலைனெக் மற்றும் கெர்ட்டா முல்லர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 National Geographic Collegiate Atlas of the World. Willard, Ohio: R.R Donnelley & Sons Company. 2006. pp. 257–270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் Regular:0-7922-3662-9, 978-0-7922-3662-7. Deluxe:0-7922-7976-X, 978-0-7922-7976-1. {{cite book}}: Check |isbn= value: invalid character (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. SIL Ethnologue (2006). சீர்தரமான மொழியைப் பேசுவோர் 95 மில்லியன்; நடு, வடக்கு இடாய்ட்சு கிளைமொழிகள் பேசுவோரையும் சேர்த்து 95 மில்லியன்; கீழ் சாக்சன் (Low Saxon), இயிட்டிசியம் (Yiddish) பேசுவோரையும் சேர்த்து 120 மில்லியன்.
  3. 3.0 3.1 EUROPA – Allgemeine & berufliche Bildung – Regional- und Minderheitensprachen der Europäischen Union – Euromosaik-Studie
  4. "Deutsch in Namibia" (PDF) (in German). Supplement of the Allgemeine Zeitung. 2007-08-18. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-06-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Map on page of Polish Ministry of Interior and Administration (MSWiA)
  6. "Verein Deutsche Sprache e.V. - Prominente Mitglieder und Ehrenmitglieder". Archived from the original on 2009-07-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  7. EUROPA – Allgemeine & berufliche Bildung – Regional- und Minderheitensprachen der Europäischen Union – Euromosaik-Studie
  8. EUROPA – Education and Training – Europa – Regional and minority languages – Euromosaïc study
  9. http://ec.europa.eu/education/policies/lang/languages/langmin/euromosaic/hu_de.pdf
  10. "CIA World Fact book Profile: Namibia" பரணிடப்பட்டது 2020-04-23 at the வந்தவழி இயந்திரம் cia.gov Link accessed 2008-11-30
  11. SbZ – Deutsche Minderheit in Rumänien: „Zimmerpflanze oder Betreuungs-Objekt“ – Informationen zu Siebenbürgen und Rumänien
  12. "German 'should be a working language of EU', says Merkel's party". Telegraph.co.uk. 18 June 2013.
  13. ஐரோப்பிய ஆணையம் (2004). "Many tongues, one family. Languages in the European Union" (PDF). Europa (web portal). பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  14. "Why Learn German?". Goethe Institute. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  15. "Why Learn German?". SDSU – German Studies Department of European Studies. Archived from the original on 23 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  16. "Usage Statistics of Content Languages for Websites, January 2015".
  17. "Germans in Jordan – German expats in Jordan". InterNations. InterNations GmbH. 2013. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
  18. 18.0 18.1 18.2 Handwörterbuch des politischen Systems der Bundesrepublik (in German). Source lists "German expatriate citizens" only for Namibia and South Africa!

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இடாய்ச்சு மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடாய்ச்சு_மொழி&oldid=3938949" இலிருந்து மீள்விக்கப்பட்டது