பேச்சு:இடாய்ச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Globe of letters.svg இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இலங்கைத் தமிழர் ர ற வழக்கம்[தொகு]

குறிப்படத்தக்க எண்ணிக்கையுடைய இலங்கைத் தமிழர்கள் பின்வரும் உச்சரிப்பு/எழுத்து வழக்கத்தை உடையவர்கள். அவ்வழக்கம் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

  • t, ra, raa என்பதை ற், ற, றா எனவும்
  • r, ta, taa என்பதை எனவும் ர், ர, ரா கொள்வார்கள்.

பொதுவாக எழுத்து தமிழில் (தமிழ்நாட்டுத் தமிழர்) ta, taa என்பதற்கு ட டா என்பதை பயன்படுத்துவதே வழக்கம்.


  • ஜெர்மன் எழுத்துக்கள்
  • ஜெர்மன் ஒலியியல் (en:German phonology)

டாயிட்சு[தொகு]

தமிழில் ய்ச் ஒன்றாக வருமா? டாயிட்சு? டாய்ச்சு? எப்படி எழுதலாம்?--ரவி 02:26, 5 ஜூன் 2009 (UTC)

டாய்ச்சு சரியாகவுள்ளது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:27, 5 ஜூன் 2009 (UTC)
இக்கட்டுரையில் சில இடங்களில் இடாய்ச்சு எனவும், யேர்மனிய மொழி எனவும், ஜேர்மன் எனவும், ஜெர்மன் மொழி எனவும் உள்ளது, கட்டுரைத் தலைப்பில் உள்ளது போல அனைத்து இடங்களிலும், இடாய்ச்சு என மாற்றம் செய்யலாமே? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:33, 25 ஏப்ரல் 2012 (UTC)

பங்களிப்பு :)[தொகு]

Ik hou van jou என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம் என கேள்விப்பட்டேன். சரிதானா? சேர்க்கலாமா??--arafat 03:48, 8 ஜூலை 2009 (UTC)

Lieben என்றால் அன்பு செய்தல். Ich liebe dich என்றால் நான் உன்னைக் காதலிக்கின்றேன் என்று பொருள். (ich = நான்; du = நீ, du->dich = உன்னை; liebe என்பது காதலி என்னும் வினைச்சொல் நான் என்று வரும்பொழுது வரும் வடிவம். -கிறேன் என்பதுபோல)--செல்வா 03:58, 8 ஜூலை 2009 (UTC)

இடாய்ச்சு என்பது அதீத செயற்கைதனமான ஒலிபெயர்ப்பாக உள்ளது. ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் டொய்ச்சு என்றே கூறுகின்றனர். தான் டோன்றித் தனமான ஒலிபெயர்ப்புக்களை ஏற்றுக் கொள்ள இயலாது. கவனிக்கவும். --Iqbalselvan (பேச்சு) 02:13, 6 நவம்பர் 2013 (UTC)

இடாய்ச்சு (தமிழக வழக்கு), உடொய்ச்சு (ஈழத்தமிழர் வழக்கு).--Kanags \உரையாடுக 08:43, 6 நவம்பர் 2013 (UTC)
இடாய்ச்சு என்பது சரியாகப் படவில்லை, தமிழகத்தில் ஜெர்மன் மொழி என்று தான் பலரும் அறிகின்றனர். இதை ஏன் நாம் ஜெர்மன் ( செருமன் ) மொழி என்றே பயன்படுத்தக் கூடாது. --Winnan Tirunallur (பேச்சு) 18:41, 16 ஆகத்து 2015 (UTC)