உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெடிரிக் சில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெடிரிக் ஷில்லர்
பிறப்புயோகன் கிறிஸ்டோஃப் பிரெடிரிக் ஷில்லர்[1]
(1759-11-10)10 நவம்பர் 1759
மார்பாக் அம் நெகர், வுர்ட்டெம்பர்கு, செருமனி
இறப்பு9 மே 1805(1805-05-09) (அகவை 45)
வைமார், சாக்சு-வைமார்
தொழில்கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர்
தேசியம்செருமானியர்
இலக்கிய இயக்கம்புயலும் உந்துகையும் (இசுடர்ம் யுண்ட் டிராண்ட்), வைமார் செவ்வியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நி ராபர்சு
டான் கார்லோசு
வாலன்சுடைன் டிரைலஜி
மேரி இசுடீவர்ட்
வில்லியம் டெல்
துணைவர்சார்லட் ஃபொன் லெங்பெல்டு (1790–1805, இவரது மரணம்)
பிள்ளைகள்கார்ல் லுட்விக் பிரெடிரிக் (1793–1857), எர்னசுட்டு பிரெடிரிக் வில்லெம் (1796–1841), கரோலைன் லூயிசு பிரெடிரிக்கு (1799–1850), எமிலி என்றியட் லூயிசு (1804–1872)
குடும்பத்தினர்யோகன் காசுபர் ஷில்லர் (தந்தை), எலிசபெத் டோரோதியா ஷில்லர் (தாய்)
கையொப்பம்
கேத்தெவும் ஷில்லரும் (வலது) இணைந்த நினைவுச்சின்னம், வைமார்.

யோகன் கிறிசுடோப் பிரெடிரிக் பொன் சில்லர் (Johann Christoph Friedrich von Schiller, இடாய்ச்சு: [ˈjoːhan ˈkʁɪstɔf ˈfʁiːdʁɪç fɔn ˈʃɪlɐ]; 10 நவம்பர் 1759 – 9 மே 1805) செருமானிய கவிஞரும் மெய்யியலாளரும் வரலாற்றாளரும் நாடகாசிரியரும் ஆவார். தனது வாழ்நாளின் கடைசி பதினேழு ஆண்டுகளில் (1788–1805), சில்லருக்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவுடன் ஆக்கபூர்வ நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி அழகியல் குறித்து உரையாடி வந்தனர்; கேத்தெ வரைகோடுகளாக நிறுத்தி வைத்திருந்த ஆக்கங்களை கலைவடிவமாக முழுமையாக்க சில்லர் ஊக்குவித்தார். இந்த நட்பும் உரையாடல்களும் தற்போது வைமார் செவ்வியல் எனக் குறிக்கப்பெறும் வரலாறுக் காலத்திற்கு வழிவகுத்தன. இருவரும் இணைந்து தங்கள் மெய்யியல் கோட்பாடுகளை எதிர்த்தவர்களை நோக்கி இயற்றிய அங்கதமிக்க சிறு கவிதைகள் தொகுக்கப்பெற்று சீனியன் என அறியப்பெற்றது.

ஆக்கங்கள்

[தொகு]

நாடகங்கள்

[தொகு]
  • டீ ராய்பர் (திருடர்கள்) (1781)
  • கபாலுண்ட் லீபெ (கள்ளத்தொடர்பும் காதலும்) (1784)
  • டான் கார்லோசு (1787)
  • வாலென்சுடைன் (1800)
  • டீ யுன்ஃபிரா ஃபொன் ஆர்லியான்சு (ஆர்லியான்சின் பணிப்பெண்) (1801)
  • மாரியா இசுடீவர்ட்டு (1801)
  • டுரன்டாட் (1802)
  • டீ பிரௌட் ஃபொன் மெஸ்ஸினா (1803)
  • வில்லெம் டெல் (1804)
  • டெமெட்ரியசு (அவரது மரணத்தினால் முடிவுறவில்லை)

கவிதைகள்

[தொகு]
  • ஊடெ அன் டீ பிராய்டெ அல்லது மகிழ்ச்சிப் பா (1785) - இது பேத்தோவனின் ஒன்பதாவது சிம்பனியின் நான்காவது இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
  • தி ஆர்ட்டிஸ்ட்ஸ்
  • தி கிரேன்சு ஆப் இபிகுசு
  • தி பெல்
  • கொலம்பஸ்
  • ஹோப்
  • பீகாசுசு இன் ஹார்னெஸ்
  • தி கிளோவ்
  • நானி - இதற்கு பிராம்சு இசையமைத்தார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Lahnstein 1981, p. 18.

நூற்கோவை

[தொகு]
  • Lahnstein, Peter (January 1984) [1981]. Schillers Leben. Frankfurt am Main: Fischer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-596-25621-6.
  • Engel, Manfred: "Schiller und wir – Ferne aus großer Nähe". Oxford German Studies 37 (2008) 1: 37–49

Schiller's complete works are published in the following excellent editions:

  • Historical-critical edition by K. Goedeke (17 volumes, Stuttgart, 1867–76)
  • Säkular-Ausgabe edition by Von der Hellen (16 volumes, Stuttgart, 1904–05)
  • historical-critical edition by Günther and Witkowski (20 volumes, Leipzig, 1909–10).

Other valuable editions are:

  • the Hempel edition (1868–74)
  • the Boxberger edition, in Kürschners National-Literatur (12 volumes, Berlin, 1882–91)
  • the edition by Kutscher and Zisseler (15 parts, Berlin, 1908)
  • the Horenausgabe (16 volumes, Munich, 1910, et. seq.)
  • the edition of the Tempel Klassiker (13 volumes, Leipzig, 1910–11)
  • Helios Klassiker (6 volumes, Leipzig, 1911).

Documents and other memorials of Schiller are in the Goethe- und Schiller-Archiv in Weimar.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெடிரிக்_சில்லர்&oldid=3221353" இலிருந்து மீள்விக்கப்பட்டது