டேனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனிய மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1da
ISO 639-2dan
ISO 639-3dan

டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள செருமானிய மொழிகளின் துணைக் குழுவான, வட செருமானிய மொழிகளுள் (எசுக்காண்டினாவியா மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை செருமனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[2]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், அர்கெந்தீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ethnologue languages of the world". 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany[தொடர்பிழந்த இணைப்பு] and Minorities in Germany பரணிடப்பட்டது 2016-09-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனிய_மொழி&oldid=3584889" இருந்து மீள்விக்கப்பட்டது