விண்ணோடி
Jump to navigation
Jump to search
விண்ணோடி அல்லது விண்வெளி வீரர் மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர். இவர் விண்கலம் ஒன்றை ஓட்ட, வழிநடத்த, அல்லது அதில் சேவை செய்ய திறன் பெற்றவராக இருப்பார். விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யூரி ககாரின் என்ற உருசியர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் உருசிய நாட்டைச் சேர்ந்த வாலந்தீனா தெரசுகோவா என்பவர் ஆவார். இவர்கள் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரோனாட் (Astronaut) எனவும், உருசியத்தில் காஸ்மோனாட் (cosmonaut) எனவும் அழைக்கப்படுகின்றனர்...இரு சொற்களுமே பரவலாக புழக்கத்தில் உள்ளவை.