செலுத்து வாகனம்
ஏவூர்தி (Launch vehicle) அல்லது செலுத்து வாகனம் என்பது செயற்கைக்கோள்களை [புவி|[பூமி]]யிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். இவ்வாறு எடுத்துச் செல்லும் செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் புவியின் வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய ஏவூர்திகள் அதற்கென வடிவமைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகின்றன. ஏவுதளத்தில் ஏவூர்திக்கென சிறப்புக் கட்டுமாகஏர்பாடு செய்யப்பட்டிருக்கும்.[1] இந்த ஏவூர்தி பெரும்பாலும் இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். சிலநேரங்களில் நான்கு நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலான ஏவூர்திகள் ஒரு முறை பயன்படுத்துபவையாக இருக்கும். ஏனெனில் செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் உந்தித் தள்ளியபின் கீழே பூமியை நோக்கி விழும் ஏவூர்தி புவியின் வளிமண்டலத்துடனான உராய்வினால் அதன் பாகங்கள் எரிந்துவிழும். ஆனால் மறுமுறையும் பயன்படுத்தும் வகையிலான ஏவூர்திகளும் வடிவமைக்கப்படுகின்றன. சில ஏவூர்திகளில் மிகைஉந்திகளும் (Boosters) இணைக்கப்பட்டிருக்கும்.
வகைகள்
[தொகு]ஏவுதள அமைவிடம்
[தொகு]ஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய கஏவூர்திளை மூன்றாக வகைப்படுத்தலாம்.
- நிலத்திலிருந்து ஏவப்படுவது
- கடலிலிருந்து ஏவப்படுவது
- வானிலிருந்து ஏவப்படுவது.
உருவத்தைப் பொறுத்து
[தொகு]ஏவூர்தி உருவத்தைப் பொறுத்தும் வகைப்படுத்தலாம்.
- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்ச்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.
- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.[2]
- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.[2]
- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.[2]
- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.[2][3]
விதிகள்
[தொகு]சர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ See for example: "NASA Kills 'Wounded' Launch System Upgrade at KSC". Florida Today. Archived from the original on 2002-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
- ↑ 2.0 2.1 2.2 2.3 NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"
- ↑ HSF Final Report: Seeking a Human Spaceflight Program Worthy of a Great Nation, October 2009, Review of U.S. Human Spaceflight Plans Committee, p. 64-66: "5.2.1 The Need for Heavy Lift ... require a “super heavy-lift” launch vehicle ... range of 25 to 40 mt, setting a notional lower limit on the size of the super heavy-lift launch vehicle if refueling is available ... this strongly favors a minimum heavy-lift capacity of roughly 50 mt ..."