க. வி. விக்னேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி. வி. விக்னேஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சி. வி. விக்னேஸ்வரன்
C. V. Vigneswaran
C. V. Vigneswaran.jpg
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2020
இலங்கை, வட மாகாண சபை முதலமைச்சர்
பதவியில்
அக்டோபர் 7, 2013 – அக்டோபர் 24, 2018
ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி,
எச். எம். ஜி. எஸ். பலிகக்கார
ரெஜினால்ட் குரே
முன்னவர் எவருமில்லை (கொழும்பின் நேரடி ஆட்சி
பின்வந்தவர் ஆளுநர் ஆட்சி
இளைப்பாறிய நீதிபதி, இலங்கை மீயுயர் நீதிமன்றம்
பதவியில்
2001–2004
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 23, 1939 (1939-10-23) (அகவை 80)
புதுக்கடை, கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (முன்னாள்)
பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கைத் தமிழ் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 24 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடியும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[1] தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.[2]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார்.[3] தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார்.[4][5] லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.[3] இவரது மகன் இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான வாசுதேவ நாணயக்காரவின் மகளைத் திருமணம் செய்தவர்.[6][7]

நீதித்துறையில் பணி[தொகு]

1979 மே 7 இல் இவர் நீதித்துறையில் இணைந்தார்.[5][8] ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.[5][8] சனவரி 1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.[5][8] 1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார்.[5] 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார்.[5] உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேசுவரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

2001 மார்ச்சு மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[9] 2004 அக்டோபரில் இளைப்பாறினார்.[10]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 சூலை 15 இல் விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 1வது வட மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11][12][13] 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் கொழும்பில் அலரி மாளிகையில் 1வது வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.[14][15]

2015 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.[16] வட மாகாணசபையில் விக்னேசுவரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.[17]

2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர்,[1] விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.[2][18]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2013 மாகாணசபை வட மாகாண சபை ததேகூ 1,32,255 தெரிவு
2020 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 21,554 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது". பிபிசி தமிழ் (23-10-2018). பார்த்த நாள் 27-10-2018.
 2. 2.0 2.1 "தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்". பிபிசி தமிழ் (24-10-2018). பார்த்த நாள் 27-10-2018.
 3. 3.0 3.1 I’m not a politician, I only wish to serve my suffering people’, சண்டே டைம்ஸ், சூலை 22, 2013
 4. Bastians, Dharisha (31 அக்டோபர் 2004). "Justice on a razor's edge". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20041031/interviews.htm. 
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Fernando, Susitha R. (20 அக்டோபர் 2004). "Top Judge Hits Out at Judicial Process". டெய்லி மிரர் (Asian Human Rights Commission). http://newsletters.ahrchk.net/js/mainfile.php/0343/644/. 
 6. ரத்னஜீவன் ஹூல் (23 April 2013). "Mischief By Asian Tribune: The Northern Province Chief Minister Candidature". Colombo Telegraph. http://www.colombotelegraph.com/index.php/mischief-by-asian-tribune-the-northern-province-chief-minister-candidature/. 
 7. Rajasingham, K. T. (28 ஏப்ரல் 2013). "Simmering discontent within TNA threatens to explode". சண்டே ஒப்சேர்வர். http://www.sundayobserver.lk/2013/04/28/pol03.asp. 
 8. 8.0 8.1 8.2 Maniccavasagar, Chelvatamby (2 நவம்பர் 2004). "Justice Wigneswaran - a multi-faceted personality". டெய்லி நியூஸ். http://www.dailynews.lk/2004/11/02/fea07.html. 
 9. "S.C Judge says Tamil rights were snatched away". தமிழ்நெட். 8 மார்ச் 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5839. 
 10. "Veteran Supreme Court Judge retires". தமிழ்நெட். 20 October 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13186. 
 11. Justice Wigneswaran TNA CM candidate, டெய்லிமிரர், சூலை 15, 2013
 12. Rajasingham, K. T. (19 April 2013). "Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/node/62317. 
 13. Peiris, Harim (1 மே 2013). "TNA vs LTTE – The Northern Provincial Council stakes". தி ஐலண்டு. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048. 
 14. ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார், தமிழ்வின், அக்டோபர் 7, 2013
 15. "Northern PC Chief Minister Vigneswaran sworn in". Asiantribune. பார்த்த நாள் 7 அக்டோபர் 2013.
 16. "Wigneswaran Lashes Out at Concentration of Power in his Party". http://www.newindianexpress.com/world/Wigneswaran-Lashes-Out-at-Concentration-of-Power-in-his-Party/2015/09/27/article3050372.ece. 
 17. "TNA And Wigneswaran May Be Heading For A Split". http://www.newindianexpress.com/business/news/TNA-And-Wigneswaran-May-Be-Heading-For-A-Split/2015/08/03/article2955549.ece. 
 18. "Wiggy parts ways with TNA, forms TPA". டெய்லிமிரர் (24-10-2018). பார்த்த நாள் 27-10-2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வி._விக்னேஸ்வரன்&oldid=3016150" இருந்து மீள்விக்கப்பட்டது