சூல்பைப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூல்பைப் புற்றுநோய் (மனிதர்)
Micrograph of a mucinous ovarian carcinoma stained by H&E.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-10C56.
ஐ.சி.டி.-9183, 220
ஐ.சி.டி.-ஒvaried
நோய்களின் தரவுத்தளம்9418
மெரிசின்பிளசு000889
ஈமெடிசின்med/1698
பேசியண்ட் ஐ.இசூல்பைப் புற்றுநோய்
ம.பா.தD010051

சூல்பைப் புற்றுநோய் (ovarian cancer) என்பது சூல்பையில் தோன்றும் புற்றுநோயாகும்.[1] சூல்பை கருவுறத் தேவையான கருமுட்டையின் சேமிப்பிடமாகும். எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், குறைந்த அளவு டெஸ்ட்ரோஜன் முதலிய இயக்குநீரைச் சுரக்கின்றன. இரண்டு சூல்பைகள் உள்ளன. ஆரம்ப நிலையில் இதில் தோன்றும் புற்றுநோயினைக் கண்டு கொண்டால் குணம் பெறலாம். ஆனால் ஆரம்ப நிலையில் நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. வயிறு உப்புசம், வீக்கம்[2], வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் போதல், விரைந்து இரைப்பை நிறைந்து விட்டது போன்ற உணர்வு காணப்படும். இது போன்ற அறிகுறிகள் வேறு காரணங்களாலும் உருவாகலாம். மருத்துவரை கண்டு அறிவுரைப் பெறுவது முக்கியம்.

இடர்க் காரணிகளும் காப்புக் காரணிகளும்[தொகு]

குடும்பத்தில் வர வாய்ப்புண்டு. தாய், சகோதரி, முதலிய நெருங்கிய உறவில் மார்பகப்புற்று, சூல்பைப் புற்று அல்லது குடல் புற்று இருந்திருப்பின் அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மாதவிடாய் நின்றவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. வயதும் ஒரு முக்கிய காரணமாகும். இயக்குநீர் மருத்துவம் மேற்கொண்டவர்களிடமும் உடல் நிறை அதிகமுள்ளவர்களிடமும் சற்றுக் கூடுதலாகவே உள்ளது. கருவுறாத நிலையும் காரணமாக உள்ளது.சூல்பையில் பல நீர்கோத்தக் கட்டிகளும்(PCOS) காரணமாகலாம்.

சிறுவயதில் கருத்தரித்தல் இந்நோயின்வாய்ப்பினைக் குறைக்கிறது. தாய்ப்பால் ஊட்டுவதும் தடுப்பாக உள்ளது. ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்களிடம் 50% வாய்ப்புக் குறைந்து காணப்பட்டுள்ளது. கருக்குழானை கட்டுவதும் கருப்பை அறுவையும் காப்பினைக் கொடுக்கும்.

நிலைகள்[தொகு]

நிலை 1 -ஒரு சூல்பையில் மட்டும் நோய் இருப்பது.
நிலை 2-கருப்பைக்கும் பிற அருகிலுள்ள உறுப்புகளிலும் பரவியுள்ள நிலை.
நிலை 3- ஊநீர் சுரப்பிக்கும் வயிற்று பகுதி உறுப்பிலும் பரவியுள்ள நிலை.
நிலை 4- பிற உறுப்புகளுக்கு-தொலை பரவிய நிலை.

ஆய்வும் சிகிச்சையும்[தொகு]

ஆரம்பநிலை ஆய்வு; மீயொலி ஆய்வு, இரத்த ஆய்வு (இரத்தத்தில் காணும் ஒரு புரதம் CA 125. இது கூடுதலாக இருப்பது வாய்ப்பினைக் அதிகரிக்கிறது). சிடி மற்றும் எம்.ஆர்.ஐ. சோதனைகள் மிகவும் உதவும்.

அறுவை மருத்துவம் முதன்மை மருத்துவமாகும். வேதிமருந்தும் கதிர்மருத்துவமும் கைகொடுக்கும். குறிவைத்து தாக்குதல், புற்றிற்குச் செல்லும் குருதிக் குழாய்களை அடைத்து அவைகளுக்கு உணவு செல்லாமல் தடுப்பதும் மருத்துவமாகும். அவாஸ்டின் இதற்கான மருந்தாகும். 40 வயதிற்கு மேல் சூல் பை அறுவையும் குறைந்த கொழுப்பு உணவும் தடுக்க உதவும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்பைப்_புற்றுநோய்&oldid=1766129" இருந்து மீள்விக்கப்பட்டது