கஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சா
Cannabis sativa Koehler drawing.jpg
கஞ்சா தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: ரோசால்ஸ்
குடும்பம்: கேனபேசியே
பேரினம்: கேனபிஸ்
L.
இனங்கள்

கேனபிஸ் சட்டைவா L.[1]
கேனபிஸ் இண்டிக்கா Lam. (putative)[1]
கேனபிஸ் ருடேரலிஸ் Janisch. (putative)

கஞ்சா (About this soundஒலிப்பு ) (Cannabis) (/ˈkænəbɪs/; Cán-na-bis) கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால் இது மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு இண்டிக்கா (Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு (Cannabis ruderalis). இந்த மூன்றும் C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.[2][3][4][5] இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை.[6]

நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் உளத்தூண்டல் கூறான டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC (கானபினாய்டுகள்) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.[7]

2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது.[8] 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)[9] இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.[9]

விபரிப்பு[தொகு]

பாகிஸ்தானில் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டுக் கஞ்சா செடி
நேபாளத்தில் களைச்செடி போல் வளரும் கஞ்சா

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .[10] முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும். இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது.

இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும். கஞ்சா செடியின் சிறு அளவு மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் எளிதில் அடையாளம் காணலாம். இதற்கு இலைச் செல்களும் இலையின் வடிவமும் பெரிதும் உதவும். ஆனால், அதற்கு தனித் திறனும் கருவியும் வேண்டும்.[11]

இச்செடி, இமயமலைத் தொடரின் வடமேற்கு பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை] இது நார்க்கஞ்சா/hemp என்றும் அழைக்கபடும். ஆனால், நார்க்கஞ்சா எனும் பெயர் பொதுவாக போதைப்பொருளற்ற பிற பயன்பாடுகளில் கஞ்சா செடியைப் பயன்படுத்தும்போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

கஞ்சா செடி ஒழுங்கற்ற மலர்களைக் கொண்ட தாவரம். இதன் மகரந்தக்கேசரம்/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், சூலகம் (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.[12] இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.[13] ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக கூட்டுப் பூத்திரள் அமைவையும், பெண் மலர்கள் நுனிவளர் பூந்துணரையும் கொண்டிருக்கும்.[14] "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".[15] மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) க்சி / xi என்பதை "ஆண் கஞ்சா" என்றும் ஃபு / fu என்பதைப் (அல்லது யு / ju ) "பெண் கஞ்சா" என்றும் வரையறுத்துள்ளது.[16]

உயிரிவேதியியலும் போதையூட்டும் கூறுகளும்[தொகு]

கஞ்சா செடிகள் கனாபினாய்டுகள் (cannabinoids) எனும் வேதிப் பொருள் குழுமத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த கனாபினாய்டுகளை உட்கொள்ளப்படும்போது உள, உடல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

கனாபினாய்டுகள், டெர்பெனாய்டுகள், மேலும் பல சேர்மங்களும் முடிநீட்சியிலுள்ள (trichomes) சுரப்பிகளில் இருந்து சுரக்கின்றன. இந்த முடிநீட்சிகள் மலரின் புற இதழ்களிலும் (sepal) பெண் செடியின் பூவடிச் செதில்களிலும் (bract) அதிக அளவில் தோன்றுகின்றன.[17] ஒரு போதையூட்டும் பொருளாக கஞ்சாவானது, பொதுவாக உலரவைக்கப்பட்ட மலர் மொட்டுகளாக ([[கஞ்சா (போதைப்பொருள்)|கஞ்சா), பிசின் (கசீசு/hashish) வருகின்றன. அல்லது பல்வேறு பிழிபொருள்களாவும் (extracts) கசீசு எண்ணெய் என்ற பெயரில் கிடைக்கப்பெறுகின்றன.[18] 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலகின் பல பகுதிகளிலும், "கஞ்சாவைச்" சாகுபடி செய்வதோ, விற்பனைக்காகவும் தனிப்பயனுக்காகவும் வைத்திருப்பதோ சட்டவிரோதமாக்கப்பட்டது.

குரோமோசோம்களும் மரபணுத்தொகையும்[தொகு]

கஞ்சாவும் பல பிற உயிரிகளைப் போலவே 2n=20 என்ற எண்ணிக்கையில் குரோமோசோம்களைக் கொண்ட இருமடிய நிலை உயிரி ஆகும். மேலும், தனித்த்தாவரங்களில் பல்மடியநிலையும் செயற்கையாக உருவாக்கப்படலாம்.[19] "கஞ்சா" செடியின் முதல் மரபணுத்தொகை வரிசை 2011இல் கனடிய அறிவியலாளர்களால் வெளியிடப்பட்டது, அது கிட்டத்தட்ட 820 மெகாபைட் (820 MB) எனும் அளவில் இருந்தது.[20]

வகைபாட்டியல்[தொகு]

கேனபிஸ் சட்டைவா இலையின் அடிப்புறத்திலுள்ள நரம்பமைவு

கஞ்சா எனும் பேரினம் இதற்கு முன்னர் செந்தட்டி (உர்ட்டிகாசியே) அல்லது முசுக்கொட்டை (மோராசியே) குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. பிறகு, யூமுலஸ் பேரினத்திலும் (hops), ஒரு தனிக் குடும்பமாக நார்க்கஞ்சா குடும்பத்தில் (குறிப்பாக கேனபேசியே) வைக்கப்பட்டிருந்தது.[21] பசுங்கணிக டிஎன்ஏ தடுபகுதி (restriction site) ஆய்வுகள் மற்றும் டி.என்.ஏ வரன்முறையிடல் ஆய்வுகளை உள்ளடக்கிய அண்மைய தொகுதிவரலாற்று (phylogenetic) ஆய்வுகளின் முடிவுகள், கேனபேசியே எனுமாறு கூறப்படும் குடும்பம், முந்தைய செல்டிடேசியே குடும்பத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றன. அதாவது, இரண்டு குடும்பங்களும் இணைந்து ஒற்றை ஒரு வழி வந்த குடும்பமான பரவலான கேனபேசியே என்பதை உருவாக்கியிருக்ககூடும்.[22][23]

வெவ்வேறு விதமான "கஞ்சா" வகைகள் இதுவரை எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை பல்வேறு இனங்களாகவும், துணையினங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. அல்லது சில நேரங்களில் அவை வெவ்வேறு வகைகளாகவும் கொள்ளப்படுகின்றன:[24]

 • நாருக்காகவும் வித்து உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படும் செடிகள், இவை குறைந்த போதையூட்டிகள், போதைப் பண்பற்றவை, அல்லது நார் வகை என்றழைக்கப்படும்.
 • போதைப் பொருளாகப் பயன்படுத்தச் சாகுபடி செய்யப்படும் செடிகள், இவை அதி போதையூட்டிகள் என்றோ போதைப்பொருள் வகை என்றோ அழைக்கப்படும்.
 • தப்பித்தவை, கலப்பினமாக்கப்பட்டவை, அல்லது மேற்கூறியவற்றின் காட்டு வகைகள்.

"கஞ்சா" தாவரங்கள் டெர்பினோ-ஃபீனாலிக் என்ற தனித்தன்மையுடைய கானபினாய்டு சேர்மங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த கானபினாய்டுகளில் சிலவே கஞ்சாவை உட்கொள்கையில் உண்டாகும் "ஏற்றம்/கிசா (high)" எனும் நிலைக்குக் காரணமாகும். இதுவரை கஞ்சா செடியில் கிட்டத்தட்ட 483 தனித்தனி வேதிக் கூட்டுப்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.[25] மேலும் குறைந்தபட்சம் 85 வெவ்வேறு கனாபினாய்டுகள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.[26] அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு கானபினாய்டுகள், ஒன்று கானபிடியோல் (சிபிடி / CBD) இன்னொன்று Δ9-டெட்ராஹைய்ட்ரோகானபினால் (tetrahydrocannabinol / THC). இதில் டிஎச்சி மட்டுமே உளத்தூண்டு (psychoactive) தன்மையுடையது.[27] 1970களின் தொடக்கத்திலிருந்தே கஞ்சா செடிகள் அவற்றின் வேதித்தோற்ற அமைப்பின் மூலம் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. டிஎச்சி-க்கும் சிபிடி-க்கும் இடையே உள்ள விகிதம் வைத்தும் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.[28] எப்படி இருந்தாலும், மொத்த கானபினாய்டு உற்பத்தி என்பது சுற்றுச்சூழல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் ஒரு தாவரத்தின் டிஎச்சி/சிபிடி விகிதம் மரபணு வழியே உறுதி செய்யப்பட்டு ஒரு செடியின் வாழ்நாள் முழுவதும் மாறாத்தன்மை கொண்டதாக இருக்கும்.[29] உளத்தூண்டா தன்மையுடைய கஞ்சா செடிகள் மிகவும் குறைந்த அளவு டிஎச்சி-யையும் மிக அதிக அளவுகளில் சிபிடி-ஐயும் உற்பத்தி செய்கின்றன. அதே உளத்தூண்டத்தகு / ஏற்றம் தரத்தகு கஞ்சா செடிகள் மிக அதிக அளவு டிஎச்சி-யையும் மிகக்குறைந்த அளவு சிபிடி-ஐயும் உற்பத்தி செய்கின்றன. இந்த இரண்டு வெவ்வேறு வேதித்தோற்றம் கொண்ட செடிகள் குறுக்கு- மகரந்தச்சேர்க்கை செய்யப்படும்போது, முதல் தலைமுறை ஆண் செடிகள் (F1) இடைப்பட்ட வேதித்தோற்றத்தையும், இடைப்பட்ட சிபிடி டிஎச்சியையும் கொண்டிருக்கும். இந்தப் புதிய வேதித்தோற்றம் கொண்ட பெண் செடிகள் போதையூட்டப் போதுமான அளவு டிஎச்சியை உற்பத்தி செய்யும்.[28][30]

வளர் நிலையில் கஞ்சா செடியின் மேல்புறம்

உளத்தூண்டும் தன்மையுடையதோ இல்லாததோ, பயிரடப்பட்டதும் காட்டுவகைமையுமான "கஞ்சா" வகைகள் அதிகமான, ஒற்றை மாறி இனங்களைக் கொண்டுள்ளன. அல்லது இந்தக் குடும்பமே ஒரு பல்வகை இனத்தன்மையுடன் (polytypic) ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்டுள்ளதா எனும் விடயம் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு விவாதப்பொருளாக உள்ளது. இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயம். ஏனெனில் இனம் என்பதற்கு இன்னும் உலக அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு வரையறை இல்லை.[31] பெரிதும் ஒப்புக்கொள்ளப்பட்ட "இனம்" என்பதற்கான வரையறை ஆனது, "இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிரிகளின் தொகுதி" ஆகும்.[32] உடல் வழியே இனப்பெருக்கம் செய்யத்தக்கதுமான, ஆனால் உருவமைப்புபடியோ மரபணுப்படியோ விசாலமானதுமான மற்றும் புவியியல்படியும் சூழல்படியும் தனித்திருப்பவை, சிலநேரங்களில் தனி இனங்களாகக் கருதப்படுகின்றன.[32] இனப்பெருக்கத்திற்கான உடலியல் தடைகள் "கஞ்சா"வில் நடப்பதாகத் தெரியவில்லை, மேலும் வெவ்வேறு மூலங்களில் இருந்து உள்ள செடிகள் பொதுவாக மலட்டுத்தன்மையுடன்தான் உள்ளன.[19] எவ்வாறாயினும், மரபணுப் பரிமாற்றத்திற்கான புறக்காரணித் தடைகள் (இமயமலைத் தொடர் போன்ற காரணிகள்) "கஞ்சா" மரபணுத் தொகை மனிதக் காலடி அங்கு படுவதற்கு முன்பே, ஓர் இனஆக்கத்தில் முடிந்தது.[33]

It remains controversial whether sufficient morphological and genetic divergence occurs within the genus as a result of geographical or ecological isolation to justify recognition of more than one species.[34][35][36]

பயன்கள்[தொகு]

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; grin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. "Classification Report". United States Department of Agriculture. 13 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Indica, Sativa, Ruderalis – Did We Get It All Wrong?". The Leaf Online. 13 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Species of Cannabis". GRIN Taxonomy. 13 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; GuyWhittle2004 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. A. ElSohly, Mahmoud (2007). Marijuana and the Cannabinoids. Humana Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58829-456-0. https://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2 May 2011. 
 7. Erowid. 2006. Cannabis Basics. Retrieved on 25 February 2007
 8. (pdf) Narcotic Drugs 2014. INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD. 2015. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789210481571. https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf. 
 9. 9.0 9.1 "Statistical tables" (pdf). World Drug Report 2016. Vienna, Austria. May 2016. பக். xiv, 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-057862-2. http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf. பார்த்த நாள்: 1 August 2016. 
 10. "Leaf Terminology (Part 1)". Waynesword.palomar.edu. 2015-09-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-17 அன்று பார்க்கப்பட்டது.
 11. Watt, John Mitchell; Breyer-Brandwijk, Maria Gerdina: The Medicinal and Poisonous Plants of Southern and Eastern Africa 2nd ed Pub. E & S Livingstone 1962
 12. Lebel-Hardenack, Sabine; Grant, Sarah R. (1997). "Genetics of sex determination in flowering plants". Trends in Plant Science 2 (4): 130–6. doi:10.1016/S1360-1385(97)01012-1. https://archive.org/details/sim_trends-in-plant-science_1997-04_2_4/page/130. 
 13. Moliterni, V. M. Cristiana; Cattivelli, Luigi; Ranalli, P.; Mandolino, Giuseppe (2004). "The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study". Euphytica 140: 95–106. doi:10.1007/s10681-004-4758-7. https://archive.org/details/sim_euphytica_2004_140_1-2/page/95. 
 14. Bouquet, R. J. 1950. Cannabis. United Nations Office on Drugs and Crime. Retrieved on 23 February 2007
 15. Li Hui-Lin (1973). "The Origin and Use of Cannabis in Eastern Asia: Linguistic-Cultural Implications", Economic Botany 28.3: 293–301, p. 294.
 16. 13/99 and 13/133. In addition, 13/98 defined fen 蕡 "Cannabis inflorescence" and 13/159 bo 薜 "wild Cannabis".
 17. Mahlberg Paul G.; Soo Kim Eun (2001). "THC (tetrahyrdocannabinol) accumulation in glands of Cannabis (Cannabaceae)". The Hemp Report 3 (17). http://www.hempreport.com/issues/17/malbody17.html. 
 18. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; erowid என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 19. 19.0 19.1 Small, Ernest (1972). "Interfertility and chromosomal uniformity in Cannabis". Canadian Journal of Botany 50 (9): 1947–9. doi:10.1139/b72-248. 
 20. Van Bakel, Harm; Stout, Jake M; Cote, Atina G; Tallon, Carling M; Sharpe, Andrew G; Hughes, Timothy R; Page, Jonathan E (2011). "The draft genome and transcriptome of Cannabis sativa". Genome Biology 12 (10): R102. doi:10.1186/gb-2011-12-10-r102. பப்மெட்:22014239. 
 21. Schultes, R. E., A. Hofmann, and C. Rätsch. 2001. The nectar of delight. In: Plants of the Gods 2nd ed., Healing Arts Press, Rochester, Vermont, pp. 92–101. ISBN 0-89281-979-0
 22. Song, B.-H.; Wang, X.-Q.; Li, F.-Z.; Hong, D.-Y. (2001). "Further evidence for paraphyly of the Celtidaceae from the chloroplast gene mat K". Plant Systematics and Evolution 228: 107–15. doi:10.1007/s006060170041. 
 23. Sytsma, K. J.; Morawetz, J.; Pires, J. C.; Nepokroeff, M.; Conti, E.; Zjhra, M.; Hall, J. C.; Chase, M. W. (2002). "Urticalean rosids: Circumscription, rosid ancestry, and phylogenetics based on rbcL, trnL-F, and ndhF sequences". American Journal of Botany 89 (9): 1531–46. doi:10.3732/ajb.89.9.1531. பப்மெட்:21665755. 
 24. Small, E (1975). "American law and the species problem in Cannabis: Science and semantics". Bulletin on narcotics 27 (3): 1–20. பப்மெட்:1041693. 
 25. "What chemicals are in marijuana and its byproducts?". ProCon.org. 2009. 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
 26. El-Alfy, Abir T.; Ivey, Kelly; Robinson, Keisha; Ahmed, Safwat; Radwan, Mohamed; Slade, Desmond; Khan, Ikhlas; Elsohly, Mahmoud et al. (2010). "Antidepressant-like effect of Δ9-tetrahydrocannabinol and other cannabinoids isolated from Cannabis sativa L". Pharmacology Biochemistry and Behavior 95 (4): 573–82. doi:10.1016/j.pbb.2010.03.004. பப்மெட்:20332000. 
 27. "The nonpsychotropic cannabinoid cannabidiol modulates and directly activates alpha-1 and alpha-1-Beta glycine receptor function". Pharmacology 83 (4): 217–222. 2009. doi:10.1159/000201556. பப்மெட்:19204413. http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=000201556. பார்த்த நாள்: 4 August 2009. 
 28. 28.0 28.1 Small, E; Beckstead, HD (1973). "Common cannabinoid phenotypes in 350 stocks of Cannabis". Lloydia 36 (2): 144–65. பப்மெட்:4744553. 
 29. De Meijer, EP; Bagatta, M; Carboni, A; Crucitti, P; Moliterni, VM; Ranalli, P; Mandolino, G (2003). "The inheritance of chemical phenotype in Cannabis sativa L". Genetics 163 (1): 335–46. பப்மெட்:12586720. 
 30. Hillig, K. W.; Mahlberg, P. G. (2004). "A chemotaxonomic analysis of cannabinoid variation in Cannabis (Cannabaceae)". American Journal of Botany 91 (6): 966–75. doi:10.3732/ajb.91.6.966. பப்மெட்:21653452. 
 31. Small, E. 1979. Fundamental aspects of the species problem in biology. In: The Species Problem in Cannabis, vol. 1: Science. Corpus Information Services, Toronto, Canada, pp. 5–63. ISBN 0-919217-11-7
 32. 32.0 32.1 Rieger, R., A. Michaelis, and M. M. Green. 1991. Glossary of Genetics, 5th ed. Springer-Verlag, pp. 458–459. ISBN 0-387-52054-6
 33. Hillig, Karl W. (2005). "Genetic evidence for speciation in Cannabis (Cannabaceae)". Genetic Resources and Crop Evolution 52 (2): 161–80. doi:10.1007/s10722-003-4452-y. 
 34. Small, E (1975). "On toadstool soup and legal species of marihuana". Plant Science Bulletin 21 (3): 34–9. http://www.botany.org/PlantScienceBulletin/psb-1975-21-3.php. 
 35. Emboden, William A. (1981). "The Genus Cannabis and the Correct Use of Taxonomic Categories". Journal of Psychoactive Drugs 13 (1): 15–21. doi:10.1080/02791072.1981.10471446. பப்மெட்:7024491. 
 36. Schultes, R. E., and A. Hofmann. 1980. Botany and Chemistry of Hallucinogens. C. C. Thomas, Springfield, Illinois, pp. 82–116. ISBN 0-398-03863-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சா&oldid=3547363" இருந்து மீள்விக்கப்பட்டது