நவம்பர் 2014
<< | நவம்பர் 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
நவம்பர் 2014 (November 2014), 2014 ஆம் ஆண்டின் பதினோராம் மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமையில் துவங்கி 30 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17 திங்கட்கிழமை தொடங்கி, டிசம்பர் 15 திங்கட்கிழமை முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் மொகரம் மாதம் அக்டோபர் 26 துவங்கி நவம்பர் 23 இல் முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- நவம்பர் 6 - திருமூல நாயனார் குருபூசை
- நவம்பர் 7 - நெடுமாற நாயனார் குருபூசை
- நவம்பர் 8 - இடங்கழி நாயனார் குருபூசை
- நவம்பர் 14 - குழந்தைகள் நாள் (இந்தியா)
- நவம்பர் 24 - மூர்க்க நாயனார் குருபூசை
- நவம்பர் 25 - சிறப்புலி நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- நவம்பர் 30:
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். தாம் எதிரம்ணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். (டெய்லிமிரர்)
- இந்தியாவின் பி.வி. சிந்து தொடர்ந்து 2-வது முறையாக மக்காவ் இறகுப் பந்தாட்டப் போட்டியில் வாகை சூடினார். (என்டிரிவி)
- நவம்பர் 29:
- சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் 11 உய்குர் போராளிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக இடம்பெற்ற போராளிகளின் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- பிரான்சின் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கொலா சார்கோசி குடிதழீஇய இயக்கச் சங்கக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
- நவம்பர் 28:
- நைஜீரியாவில் கனோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பின்லாந்து நாடாளுமன்றம் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. (வைஎல்ஈ)
- நவம்பர் 27:
- ஆங்கிலேய மூத்த புலனாய்வு எழுத்தாளர் பி. டி. ஜேம்ஸ் தனது 94 வயதில் காலமானார். (சீஎனென்)
- ஆப்கானித்தானின் காபூல் நகரில் பிரித்தானியத் தூதர வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பிரித்தானியர் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் படுகாயம் அடைந்தனர். (பிபிசி),(ஆர்டி),(டெய்லி நியூஸ்)
- பவுன்சராக வீசப்பட்ட அதிவேக பந்தினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸ் (25) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். (கிரிக்இன்போ)
- இந்தோனேசியாவில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (பாங்காக் போஸ்ட்)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது பல சேனா பௌத்த கடும்போக்கு அமைப்பு மகிந்த ராசபக்சவுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக அறிவித்தது. (டெய்லிமிரர்)
- நைஜீரியாவில் மூபி நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் 5 படையினர் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- நவம்பர் 26:
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: முதலாவது எபோலா நோய் தடுப்பூசியின் மருத்துவ ஆய்வு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது என அமெரிக்காவின் மத்திய சுகாதார கழகம் அறிவித்துள்ளது. (சீன வானொலி)
- பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- எகிப்தில் 8 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயடைந்தனர். (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
- சீனாவில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். (ஏபிசி)
- உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- 2014 ஆங்காங் எதிர்ப்புகள்: மொங் கொக் நகரில் 80 ஆர்ப்பாட்டக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 25:
- எகிப்தில் கெய்ரோ நகரில் குடியிருப்பு மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- நைஜீரியாவின் வடகிழக்கே மைதுகிரி நகரில் போகோ அராம் குழுவைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூசு சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியொன்றின் போது பந்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். (கிரிக்கின்ஃபோ)
- நவம்பர் 24:
- மொரோக்கோ நாட்டில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 32 பேர் பலியாகினர்.(பிபிசி)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17 இன் சிதைவுகளைக் கண்டறியும் பணிகள் முடிவடைந்துள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. (ஐரிசு எக்சாமினர்)
- நவம்பர் 23:
- ஆப்கானித்தானில் பக்திக்கா மாகாணத்தில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றின் நிகழ்வில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- நைஜீரியாவில் சாட் எல்லைப் பகுதியில் போகோ அராம் கிளர்ச்சியாளர்கள் 48 மீன் வணிகர்களை சுட்டுக் கொன்றனர். (பிபிசி)
- கென்யப் படையினர் சோமாலியாவினுள் ஊடுருவி 100 அல் சபாப் உறுப்பினர்களைக் கொன்றனர். (சீஎனென்)
- இசுரேல் ஒரு யூதர்களின் நாடு என்பதை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு இசுரேலிய அம்மைச்சரவை ஒப்புதல் அளித்தது. (ஏபி)
- உலக சதுரங்கப் போட்டி 2014: உருசியாவின் சோச்சி நகரில் நோர்வே ஆட்டக்காரர் மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து 11வது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். (டொச்செவெலா)
- இந்தியாவின் கேரளாவில் பிறந்த வண. குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, அருட்சகோதரி ஏவுபிரேசியம்மா ஆகியோரை திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கானில் புனிதர்களாக அறிவித்தார். இந்தியன் எக்ஸ்பிரசு)
- நவம்பர் 22:
- கென்யாவில் தொடருந்து ஒன்றைக் கடத்திய அல்-சபாப் கிளர்ச்சியாளர்கள் முஸ்லிம்களல்லாத 28 பேரைக் கொன்றனர். (டொச்செவெல்லா)
- சப்பானில் நகானோவில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30 பேர் காயமடைந்தனர், பல வீடுகள்சேதமடைந்தன. (ஏபிசி), (ஏபி)
- கால்பந்து போட்டியில் பார்சிலோனா கழகத்தில் விளையாடும் அர்கெந்தீனாவின் லியோனல் மெஸ்ஸி லா லீகாவில் 253 கோல்கள் எடுத்து சாதனை நிலைநாட்டினார். (ராய்ட்டர்சு)
- நவம்பர் 21:
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: 2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார். (டெய்லிமிரர்)
- உருமேனியாவில் சிபியு நகரில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 8 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- சிம்பாப்வேயில் குவெக்வி நகரில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசித் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் கொல்லப்படனர், 40 பேர் காயமடைந்தனர். (பிசினெசு ஸ்டான்டர்டு)
- மடகாசுகரில் அரையாப்பு பிளேக்கு நோய் பரவியதில் 40 பேர் வரையில் உயிரிழந்தனர். (பிபிசி)
- நவம்பர் 20:
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச மூன்றாவது தடவையாகத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். (வாசிங்டன் போஸ்ட்)
- நவம்பர் 19:
- ஈராக்கிய குர்திஸ்தான் தலைநகர் இர்பிலில் இடம்பெற்ற ஒரு வாகனக் குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களுக்கும் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். (தினகரன்)
- இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இந்து மதகுரு ராம்பால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதன்போது நடந்த வன்முறைகளில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 18:
- யுனெஸ்கோ நிறுவனம் மணிலாவில் உள்ள ரிசால் நினைவகம், பெருவின் மச்சு பிச்சு, எசுப்பானியாவின் கமினோ டி சான்டியேகோ, மற்றும் ஆத்திரேலியாவின் டேம்பியர் தீவுக்கூட்டம் ஆகியவற்றை ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்தது. (ஜிஎம்ஏ நியூஸ்)
- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேம் நகரில் உள்ள யூதத் தொழுகைக் கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், எண்மர் காயமடைந்தனர். (பிபிசி)
- 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் அங்கு கரிம மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தினர். (பிபிசி)
- நவம்பர் 17:
- தாய்லாந்தில் ராணுவ உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானார்கள்.(பிபிசி)
- நியூசிலாந்தில் வடக்குத் தீவு கடலில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (நியூசிலாந்து எரால்டு)
- ஆஸ்திரேலியாவும் சீனாவும் $18 பில்லியன் பெறுமதியான கட்டற்ற வணிக உடன்பாட்ட்டை எட்டின. (நியூஸ்)
- புர்க்கினா பாசோவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மிசெல் கஃபாண்டோ அந்நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார். (ராய்ட்டர்சு)
- பெண் ஆயர்களை நியமிக்க இங்கிலாந்து திருச்சபை தேவையான சட்டத்திருத்தங்களை அறிமுகப் படுத்தியது. (பிபிசி)
- நவம்பர் 16:
- அப்துல்-ரகுமான் காசிக் என்ற அமெரிக்கப் பயணக் கைதியைத் தாம் தலை துண்டித்துக் கொலை செய்ததாக இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். (பிபிசி)
- வடகிழக்கு நைஜீரியாவில் பெண் போகோ அராம் போராளி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- உருசியாவைப் பற்றிய "விரிவான உண்மையான" தகவல்களைக் கொண்ட விக்கிப்பீடியா ஒன்றைத் தாம் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு சனாதிபதிக்கான நூலகம் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- உருமேனியாவில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் கிளாசு யோகன்னிசு வெற்றி பெற்றார். (ராய்ட்டர்சு)
- நவம்பர் 15:
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயால் பாதிக்கப்பட்ட சியேரா லியோனியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டார். (பிபிசி)
- கிர்கிசுத்தானில் 5.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. (ராய்ட்டர்சு)
- இந்தோனேசியாவின் கடற்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பிலிப்பீன்சு, இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. (என்ஓஏஏ).
- ஆத்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி-20 உச்சிமாநாடு ஆரம்பமானது. (ஏபி)
- நவம்பர் 14:
- வடக்கு ஈராக்கில் படையினர் எண்ணெய் சுத்திகரிப்பு நகரமான பைஜியில் இருந்து இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களை விரட்டி அடித்தனர். (அல் அராபியா)
- நைஜீரியாவின் சிபோக் நகரை போகோ அராம் போராளிகள் கைப்பற்றினர். (பிபிசி)
- 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் பூமியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அதன் மின்கலன்கள் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமையினால் செயலிழந்தன. (பிபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு 2015 சனவரி 12 இல் இலங்கை வருவது தொடர்பான அதிகாரபூர்வமான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது. (தமிழ்மிரர்)
- நவம்பர் 13:
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவின் கினி, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் இறந்தோரின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. (ராய்ட்டர்சு)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17: விமான சிதைவுகள் உள்ள இடங்களை அடைவதற்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால், விசாரணைகளின் இறுதித்தேதி ஆகத்து 2015 வரை தள்ளிப் போடப்பட்டுள்ளது. (தி ஆத்திரேலியன்)
- இந்தியாவின் சத்தீசுகரில் இடம்பெற்ற குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளில் 13 பெண்கள் இறந்தது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் தரையில் இருந்து படங்களை அனுப்ப ஆரம்பித்தது. (பிபிசி)
- இந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார். (கிரிக்கின்ஃபோ)
- நவம்பர் 12:
- ஆசியான் நாடுகளின் 25வது உச்சி மாநாடு மியான்மர் தலைநகர் நைப்பியிதோவில் இடம்பெற்றது. (ஏபி)
- பைங்குடில் வளிமத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சீனத் தலைவர் சீ சின்பிங், அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா இருவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (வாசிங்டன் போஸ்ட்)
- ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட பிலே தரையிறங்கி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் மேற்பரப்பினை அடைந்தது. (வாசிங்டன் போஸ்ட்) (பிபிசி)
- ஈழப்போர்: இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழர் ஒருவர் அம்பாந்தோட்டை தடுப்புமுகாமில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டார். (தமிழ்மிரர்)
- ஈழப்போர்: முன்னாள் தமிழீழ காவல்துறையைச் சேர்ந்த நகுலேசுவரன் என்பவர் மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)
- பெருமளவு உருசிய இராணுவத்தினர் உக்ரைனுள் ஊடுருவியுள்ளதாக நேட்டோ கூறியுள்ளது. (பிபிசி)
- ஆர்மீனியாவின் மில் எம்.ஐ.-24 ரக உலங்கு வானூர்தி ஒன்றை அசர்பைஜான் சுட்டு வீழ்த்தியது. (புளூம்பர்க்)
- நவம்பர் 11:
- இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எவ்விதத் தடையும் இல்லை என இலங்கை உச்சநீதிமன்றம் அறிவித்தது. (பிபிசி)
- பாக்கித்தானில் இடபெற்ற மோதலில் 15 போராளிகளும், 5 படையினரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- வடக்கு ஈராக்கில் இசுலாமிய தேசப் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- பாக்கித்தான் சிந்து மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 58 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் அரசு நடத்திய குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். (பிபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மாலி தலைநகர் பமாக்கோவில் ஒருவர் எபோலா நோயால் தாக்குண்டார். (நியூயோர்க் டைம்சு)
- நவம்பர் 10:
- நைஜீரியாபாடசாலை ஒன்றில் போகோ அராம் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 47 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்பெக் நாடுகளின் கூட்டம் பெய்ஜிங் நகரில் ஆரம்பமானது. (பிபிச்)
- நவம்பர் 9:
- பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட பல்லாயிரக்கணக்கானோர் பெர்லினில் பிரான்டென்பர்க் வாயிலில் கூடினர். (பிபிசி)
- காத்தலோனியா மக்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் தன்னாட்சி உரிமை பற்றி பொது வாக்கெடுப்பை நடத்தினர். (பிபிசி)
- நவம்பர் 8:
- அமெரிக்காவின் வான்தாக்குதலில் இசுலாமிய தேச அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி கடும் காயமுற்றார். (டெய்லிமெயில்)
- சோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் குடா தீவை மீளக் கைப்பற்றினர். குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (கரோவி)
- நவம்பர் 7:
- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் ராத் அல் உசைன் தெரிவித்துள்ளார், (பிபிசி)
- அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ஈராக்கிற்கு மேலும் 1500 படையினரை அனுப்ப ஆணையிட்டார். (நியூயோர்க் டைம்சு)
- உருசியாவில் இருந்து கிழக்கு உக்ரைனிற்கு 30 இராணுவத் தாங்கிகள் ஊடுருவியுள்ளயதாக கீவ் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- மலேசியாவில் திருநங்கைகள் மூவர், மாற்றினத்தவர்களைப் போல உடை அணிந்து கொள்ளும் உரிமையை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வென்றிருக்கிறார்கள். (பிபிசி)
- நவம்பர் 6:
- ஐக்கிய அமெரிக்காவின் குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாமில் 2002 முதல் தீவிரவாத சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 வயது குவைத் நாட்டவர் விடுவிக்கப்பட்டார். (தினகரன்)
- நவம்பர் 5:
- லிபியாவில் இராணுவத்தினருக்கும், ஆயுதப் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் மூன்று வாரங்களில் 400 பேர் வரை உயிரிழந்தனர். (ஏபி)
- சிரிய உள்நாட்டுப் போர்: திமிஷ்கு நகரில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதலில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. (ஏபி)
- நவம்பர் 4:
- ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி கீழவையிலும் மேலவையிலும் பெரும்பான்மையினைப் பெற்றது (தி இந்து),(என்பிசி)
- பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக மரிகுவானா போதைப்பொருள் பயன்படுத்த சட்டபுர்வமாக அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அலாஸ்கா, ஓரிகன் வாசிங்டன், டி. சி. வாக்காளர்கள் ஆதரவாக வாக்களித்தனர். (சிக்காகோ டிரிபியூன்)
- பாக்கித்தானில் குர்-ஆனை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறித்தவர்கள் இருவரை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றது. (பிபிசி)
- நவம்பர் 3:
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின்]] ஓம்சு மாகாணத்தில் உள்ள ஜகார் எண்ணெய் உற்பத்திப் பகுதியைக் கைப்பற்றினர். (ராய்ட்டர்சு)
- நியூயார்க்கில் 2011 செப்டம்பர் 11 தாக்குதல்களில் அழிக்கப்பட்ட உலக வர்த்தக மையத்திற்குப் பதிலாக அதே இடத்தில் புதிய 1776 அடிகள் உயரிய 1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது. (பொக்சுநியூஸ்),(தினமலர்)
- ஏதிலிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று துருக்கியின் கருங்கடல் பகுதியில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்தனர். (எஸ்பிஎஸ்)
- நவம்பர் 2:
- பிலிப்பீன்சில் பசிலான் நகரில் அபு சயாப் கெரில்லாக்கள் ஆறு பிலிப்பீனிய இராணுவத்தினரைக் கொன்றனர். (ஏபி)
- உக்ரைனின் கிழக்கே பிரிந்து சென்ற தோனெத்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற, அரசுத்தலைவர் தேர்தல்கள் இடம்பெற்றன. (பிபிசி)
- இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் தனது விசாரணைகளை ஆரம்பித்தது. (தமிழ்வின்)
- பாக்கித்தான், லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (சீஎனென்)
- நவம்பர் 1:
- 2014 பதுளை மண்சரிவு: இலங்கையின் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் அல்லது காணாமல்போனவர்களின் மொத்த எண்ணிக்கை 38 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களே மீட்கப்பட்டன. (ஐலண்டு)(பிபிசி)
- ஈராக்கில் மேற்கு அன்பார் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் குறைந்தது 50 ஈராக்கியப் பழங்குடியினரைக் கொன்றனர். (பிபிசி)
- மேற்கு யெமனில் அல் காயிதாவிற்கும் அரசுப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 20 படையினரும், 3 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- வடமேற்கு கென்யாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 20 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (புலெட்டின்)
- 2019 வரை பதவி வகிக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழுவான ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அவை பதவியேற்றது.
இறப்புகள்
[தொகு]- நவம்பர் 8 - வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
- நவம்பர் 10 - எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்
- நவம்பர் 18 - சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1947)
- நவம்பர் 23 - செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
- நவம்பர் 24 - முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
- நவம்பர் 26 - எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- நவம்பர் 27 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1988)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்