மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014
![]() திடீர்ப் பரவலின் நிலப்படம்: 2014 கோடைக்காலம் | |
நாள் | பெப்ரவரி 2014–இன்றுவரை |
---|---|
அமைவிடம் | கினி, லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா |
உயிர்ச்சேதங்கள் | |
1013 இறப்புகள் / 1848 பாதிப்புகள் (இன் படி 9 ஆகத்து 2014[update])[1] | |
|
எபோலா தீநுண்ம கொள்ளைநோய் சில மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் கினியில் துவங்கியது.[2] தொடர்ந்து, இத்தீநுண்மம் லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்டு இந்த திடீர்ப்பரவல் மனித வரலாற்றுக்காலத்திலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] உலக சுகாதார அமைப்பு (WHO) இன் படி 4 ஆகத்து 2014[update] அறிக்கைகளின்படி மொத்தம் 1711 ஐயப்படக்கூடிய பாதிப்புகளும் 932 இறப்புகளும் நேர்ந்துள்ளன; இவற்றில் 1070 பாதிப்புகளும் 603 இறப்புகளும் மருத்துவ ஆய்வகங்களால் எபோலாவினால் ஏற்பட்டவையாக உறுதி செய்யப்பட்டவை.[4] மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், ஐரோப்பிய ஆணையம் போன்ற அமைப்புகள் இந்த நோய்ப்பரவலை எதிர்கொள்ள நிதி வழங்கியும் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியும் உதவி புரிகின்றன. எல்லைகளற்ற மருத்துவர்கள், செஞ்சிலுவை இயக்கம்,[5] மற்றும் சாமரிடன்சு பர்சு போன்ற தொண்டு நிறுவனங்களும் இப்பகுதிகளில் உதவி புரிந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா தீநுண்மத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.[6]இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.[7]இப் பரவலின் காரணமாக மேற்கு ஆப்ரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் உணவு தானிய அறுவடை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகளவு உயரும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு செப்டம்பர் 2014இல் எச்சரித்தது .[8]
நோய்ப் பரவலின் காலக்கோடு[தொகு]
கீழே தரப்பட்டுள்ள காலக்கோட்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளும்[9] உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] எபோலாவினால் ஏற்பட்டவை என உறுதி செய்யப்படாத ஐயுறும் பாதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்கு தரப்பட்டவைத் தவிர, ஆகத்து 1 அன்று மொராக்கோவில் லைபீரியக் குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்;[10] ஆகத்து 5இல் எசுப்பானிய பாதிரி ஒருவர் இறந்துள்ளார்.[11]
அறிக்கை நாள் | மொத்தம் | கினி | லைபீரியா | சியெரா லியோன் | நைஜிரியா | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாதிப்புகள் | இறப்புகள் | பாதிப்புகள் | இறப்புகள் | பாதிப்புகள் | இறப்புகள் | பாதிப்புகள் | இறப்புகள் | பாதிப்புகள் | இறப்புகள் | |
4 ஆக 2014 | 1711 | 932 | 495 | 363 | 516 | 282 | 691 | 286 | 9 | 1 |
1 ஆக 2014 | 1603 | 887 | 485 | 358 | 468 | 255 | 646 | 273 | 4 | 1 |
30 சூலை 2014 | 1440 | 826 | 472 | 346 | 391 | 227 | 574 | 252 | 3 | 1 |
27 சூலை 2014 | 1323 | 729 | 460 | 339 | 329 | 156 | 533 | 233 | 1 | 1 |
23 சூலை 2014 | 1201 | 672 | 427 | 319 | 249 | 129 | 525 | 224 | ||
20 சூலை 2014 | 1093 | 660 | 415 | 314 | 224 | 127 | 454 | 219 | ||
18 சூலை 2014 | 1048 | 632 | 410 | 310 | 196 | 116 | 442 | 206 | ||
15 சூலை 2014 | 964 | 603 | 406 | 304 | 172 | 105 | 386 | 194 | ||
10 சூலை 2014 | 888 | 539 | 409 | 309 | 142 | 88 | 337 | 142 | ||
8 சூலை 2014 | 844 | 518 | 408 | 307 | 131 | 84 | 305 | 127 | ||
2 சூலை 2014 | 759 | 467 | 413 | 303 | 107 | 65 | 239 | 99 | ||
24 சூன் 2014 | 599 | 338 | 390 | 270 | 51 | 34 | 158 | 34 | ||
18 சூன் 2014 | 528 | 337 | 398 | 264 | 33 | 24 | 97 | 49 | ||
10 சூன் 2014 | 474 | 252 | 372 | 236 | 13 | 9 | 89 | 7 | ||
5 சூன் 2014 | 438 | 231 | 344 | 215 | 13 | 9 | 81 | 7 | ||
2 சூன் 2014 | 354 | 208 | 291 | 193 | 13 | 9 | 50 | 6 | ||
27 சூன் 2014 | 309 | 200 | 281 | 186 | 12 | 9 | 16 | 5 | ||
23 சூன் 2014 | 270 | 181 | 258 | 174 | 12 | 9 | ||||
14 மே 2014 | 245 | 164 | 233 | 157 | 12 | 9 | ||||
5 மே 2014 | 243 | 162 | 231 | 155 | 12 | 9 | ||||
30 ஏப் 2014 | 233 | 153 | 221 | 146 | 12 | 9 | ||||
23 ஏப் 2014 | 220 | 143 | 208 | 136 | 12 | 9 | ||||
21 ஏப் 2014 | 215 | 136 | 203 | 129 | 12 | 9 | ||||
17 ஏப் 2014 | 209 | 129 | 197 | 122 | 12 | 9 | ||||
10 ஏப் 2014 | 169 | 108 | 157 | 101 | 12 | 9 | ||||
7 ஏப் 2014 | 163 | 102 | 151 | 95 | 12 | 7 | ||||
2 ஏப் 2014 | 135 | 88 | 127 | 83 | 8 | 5 | ||||
1 ஏப் 2014 | 130 | 82 | 122 | 80 | 8 | 2 | ||||
31 மார் 2014 | 114 | 70 | 112 | 70 | 2 | 0 | ||||
27 மார் 2014 | 103 | 66 | 103 | 66 | ||||||
26 மார் 2014 | 86 | 60 | 86 | 60 | ||||||
25 மார் 2014 | 86 | 59 | 86 | 59 |
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Disease Outbreak News". 18 July 2014. Archived from the original on 24 ஏப்ரல் 2015. https://web.archive.org/web/20150424072105/http://www.afro.who.int/en/clusters-a-programmes/dpc/epidemic-a-pandemic-alert-and-response/outbreak-news.html.
- ↑ Roy-Macaulay, Clarence (31 July 2014). "Ebola Crisis Triggers Health Emergency". Drug Discov. Dev.. Associated Press (Highlands Ranch, Colorado, United States: ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)). http://www.dddmag.com/news/2014/07/ebola-crisis-triggers-health-emergency. பார்த்த நாள்: 3 August 2014.
- ↑ "Chronology of Ebola Hemorrhagic Fever Outbreaks". Centers for Disease Control and Prevention. 24 June 2014. 25 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nossiter, Adam (28 July 2014). "Fear of Ebola Breeds a Terror of Physicians". The New York Times. http://www.nytimes.com/2014/07/28/world/africa/ebola-epidemic-west-africa-guinea.html. பார்த்த நாள்: 29 July 2014.
- ↑ "எபோலா வைரஸை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.1200 கோடி நிதி". தி இந்து - தமிழ். ஆகத்து 6, 2014. ஆகத்து 7, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "எபோலா நோய் பாதித்த பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர்". ஒன் இந்தியா. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7 (3 செப்டம்பர் 2014). "உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எபோலா:ஐ.நா எச்சரிக்கை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Outbreak of Ebola in Guinea and Liberia". Centers for Disease Control and Prevention.
- ↑ Liberian dies in Morocco of Ebola - Internal Affairs Minister discloses பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம், Heritage, n.d. Accessed 2014-08-02
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-07 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Outbreak Updates, World Health Organization, 2015-04-24 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2014-08-07 அன்று பார்க்கப்பட்டது.
- Doctors without Borders (MSF) confirms that the Ebola virus is out of control., Blabberpost.
- NBC News Storyline Ebola virus outbreak Continuing coverage of the Ebola outbreak in West Africa.
- Doctors Without Borders: Massive Deployment Needed to Fight Epidemic in West Africa பரணிடப்பட்டது 2014-07-29 at the வந்தவழி இயந்திரம்
- Google Map of Ebola Outbreaks. பரணிடப்பட்டது 2014-08-21 at the வந்தவழி இயந்திரம்
- Ebola voices: Fighting the deadly virus in Guinea