ரொசெட்டா விண்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரொசெட்டா
Rosetta
ரொசெட்டா விண்கலம்
திட்ட வகை வால்வெள்ளியை சுற்றிவந்து தரையிறங்கள்
இயக்குபவர் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
காஸ்பார் குறியீடு 2004-006A
சாட்காட் இல. 28169
இணையதளம் www.esa.int/rosetta
திட்டக் காலம் இதுவரை 12 ஆண்டுகள், 6 மாதங்கள்,  24 நாட்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்பு ஆஸ்ட்ரியம்
ஏவல் திணிவு விண்சுற்றுக்கலன்: 2,900 kg (6,400 lb)
தரையிறங்கி: 100 kg (220 lb)
உலர் நிறை விண்சுற்றுக்கலன்: 1,230 kg (2,710 lb)
ஏற்புச்சுமை-நிறை விண்சுற்றுக்கலன்: 165 kg (364 lb)
தரையிறங்கி: 27 kg (60 lb)
பரிமாணங்கள் 2.8 × 2.1 × 2 m (9.2 × 6.9 × 6.6 ft)
திறன் 850 வாட்டுகள் (3.4 வாஅ)[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள் 2 மார்ச் 2004, 07:17 ஒசநே
ஏவுகலன் ஆரியான் 5G+ V-158
ஏவலிடம் கயானா வான் மையம்
ஒப்பந்தக்காரர் ஆரியான்ஸ்பேஸ்
செவ்வாய் ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல் 25 பெப்ரவரி 2007
தூரம் 250 km (160 mi)
2867 ஸ்டெயின்சு ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல் 5 செப். 2008, 20:38 ஒசநே
தூரம் 800 km (500 mi)
21 லுத்தேசியா ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல் 10 சூலை 2010, 16:10 ஒசநே
தூரம் 3,162 km (1,965 mi)
67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல் 06 ஆகத்து 2014, 09:06 ஒசநே[2]
Transponders
Band அலைக்கற்றை எஸ். பாண்ட்
எக்சு பட்டை
Bandwidth 7.8 பிட்/செ (எஸ் பட்டை)
22 கிபிட்/செ (எக்சு பட்டை)[3]

ரொசெட்டா (Rosetta) என்பது 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ என்ற வால்வெள்ளியை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். இவ்விண்கலம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: ரொசெட்டா விண்ணாய்வி, மற்றையது ஃபைலீ தரையிறங்கி (Philae) ஆகியனவாகும். ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் ஆரியான் 5 ஏவுகலம் மூலமாக ஏவப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இது வால்வெள்ளியை அடையும். ரொசெட்டா விண்ணாய்வி வால்வெள்ளியில் சுற்று வட்டத்தில் சுற்றி வந்து நீண்ட காலத்து இவ்வாள்வெள்ளியை ஆராயும். அதே வேளையில், 2014 நவம்பர் 10 ஆம் நாள் வால்வெள்ளியில் ஃபைலீ தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயும். இரண்டு விண்கலங்களும் பெருமளவு சோதனைகளை நடத்தி வால்வெள்ளியை பரந்த அளவில் ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.[4].

ரொசெட்டா விண்கலம் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தில் இரண்டு தடவை சிறுகோள் அணுகலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருந்தது[5]. 2008 செப்டம்பரில் 2867 ஸ்டெயின்ஸ் என்ற சிறுகோளையும், 2010 சூலையில்[6], லுட்டேசியா என்ற சிறுகோளையும் அணுகியிருந்தது (flyby).

சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டுள்ளமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையாக இருப்பதால் அதனை 31 மாதங்களுக்கு தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். 2011 சூன் 8 ஆம் நாள் இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது[7]. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு சனவரி 20 இல் தான் விழித்துக் கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது.[8] தொடர்ந்து அது வால்வெள்ளியை நோக்கிப் பயணித்தது.[9][10] அடுத்தடுத்த மாதங்களில், 67பி இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப்ப்படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஆகத்து 6 இல் அது 67பி வால்வெள்ளியின் சுற்றுவட்டத்துள் நுழைந்தது..[11]

திட்டக் காலக்கோடு[தொகு]

 • முதலாவது பூமி அணுகல் (மார்ச் 4, 2005)
 • செவ்வாய் அணுகல் (பெப்ரவரி 25, 2007)
 • இரண்டாவது பூமி அணுகல் (நவம்பர் 13, 2007 )
 • 2867 ஸ்டையின்ஸ் சிறுகோல் அணுகல் (செப்டம்பர் 5, 2008)
 • மூன்றாவது பூமி அணுகல் (நவம்பர் 13, 2009)
 • 21 லுட்டேசியா சிறுகோலை அணுகல் (சூலை 10, 2010)
 • ஆழ் நிலை உறக்கத்தில் (8 சூன் 2011 - 20 சனவரி 2014)
 • வாள்வெள்ளியை அண்மித்தல் (சனவரி-மே 2014)
 • வால்வெள்ளியை ஆராய்தல் (ஆகத்து 2014)
 • வால்வெள்ளியில் தரையிறங்கல் (நவம்பர் 2014)
 • வால்வெள்ளி சூரியனைச் சுற்றும் போது அதனைப் பின்தொடரல் (நவம்பர் 2014 - திசம்பர் 2015)

ரொசெட்டாவின் தற்போதைய நிலை பற்றி http://www.esa.int/SPECIALS/Rosetta/SEMRZF1PGQD_0.html தளத்தில் பெறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Rosetta at a glance – technical data and timeline". DLR. மூல முகவரியிலிருந்து 8 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 January 2014.
 2. "Rosetta timeline: countdown to comet arrival". European Space Agency (5 August 2014). பார்த்த நாள் 6 August 2014.
 3. "No. 2 – Activating Rosetta". European Space Agency (8 March 2004). பார்த்த நாள் 8 January 2014.
 4. Rosetta at a glance (4 October 2010) - ESA
 5. Glassmeier K. H., Boehnhardt H., Koschny D., Kührt E., Richter I. (2007). "The ROSETTA Mission: Flying towards the Origin of the Solar System". Space Sci. Rev. 128: 1–21. doi:10.1007/s11214-006-9140-8. Bibcode: 2007SSRv..128....1G. 
 6. Jonathan Amos - Asteroid Lutetia has thick blanket of debris (4 October 2010) - BBC News
 7. "Rosetta comet probe enters hibernation in deep space". ESA. June 8, 2011. http://www.esa.int/esaMI/Rosetta/SEM38RJ4LOG_0.html. பார்த்த நாள்: June 8, 2011. 
 8. இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது, விக்கிசெய்திகள், சனவரி 23, 2014
 9. Jordans, Frank (20 சனவரி 2014). "Comet-chasing probe sends signal to Earth". Excite News. Associated Press. http://apnews.excite.com/article/20140120/DABEMKSO3.html. பார்த்த நாள்: 20 சனவரி 2014. 
 10. Morin, Monte (20 சனவரி 2014). "Rise and shine Rosetta! Comet-hunting spacecraft gets wake-up call". Los Angeles Times. http://www.latimes.com/science/sciencenow/la-sci-sn-rosetta-comet-probe-20140120,0,7672325.story. பார்த்த நாள்: 21 சனவரி 2014. 
 11. "Rosetta arrives at comet destination". European Space Agency (6 ஆகத்து 2014). பார்த்த நாள் 6 ஆகத்து 2014.
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசெட்டா_விண்கலம்&oldid=1830460" இருந்து மீள்விக்கப்பட்டது